நோக்கியா லூமியா 510
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 டிச
2012
00:00

சென்ற அக்டோபரில் அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் சந்தையில் அனைவரையும் கவரும் மொபைல் போனாக வலம் வருகிறது நோக்கியா லூமியா 510. நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த 3ஜி போன், ஜி.எஸ்.எம். மினி சிம்மினைப் பயன்படுத்துகிறது.
இதன் பரிமாணம் 120.7x64.9x11.5 மிமீ. எடை 129 கிராம். பார் டைப் வடிவில் அமைக்கப்பட்ட இந்த மொபைலில், 4 அங்குல அகலத்தில், டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. ராம் மெமரி 256 எம்.பி. இதன் தகவல்களை ஸ்கை ட்ரைவில் 7 ஜிபி வரை பதிந்து வைக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வைபி ஆகிய தொழில் நுட்பங்கள் நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. AD2P இணைந்த புளுடூத் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ யு.எஸ்.பி. கார்ட் பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகள் கிடைக்கின்றன. இதன்கேமரா 5 எம்.பி. திறனுடன் ஆட்டோ போகஸ் வசதி கொண்டது. வீடியோ விநாடிக்கு 30 பிரேம் வேகத்தில் இயங்குகிறது.
இதன் சிபியு 850 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோ மீட்டர் சென்சார் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் அனைத்து ஆடியோ பார்மட் பைல்களை இயக்குகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பதிப்பு 9 பதியப்பட்டு இயங்குகிறது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. ஆபீஸ் டாகுமெண்ட் வியூவர், வீடியோ போட்டோ எடிட்டர், வாய்ஸ் மெமோ ஆகிய வசதிகளும் உள்ளன. இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 1300 ட்அட திறன் கொண்டது. தொடர்ந்து 739 மணி நேரம் மின்சக்தியை தக்க வைக்கிறது. 6 மணி 15 நிமிடம் தொடர்ந்து பேச முடியும். 38 மணி நேரம் பாடல்களை இயக்கிக் கேட்க இயலும்.
இந்த மொபைலின் அதிக பட்ச விலை ரூ. 10,000 மட்டுமே.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X