அதிசய சாதனங்கள், அதிவேக தொலை தொடர்புகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2013
00:00

வரும் ஆண்டில், தகவல் தொழில் நுட்ப பிரிவில் நாம் எதிர்பார்க்கக் கூடிய சாதனங்கள், இயக்க முறைகள் மற்றும் வழிமுறைகளை இங்கு காண்போம். இவற்றில் சில இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. இருப்பினும் 2013 முடிவதற்குள் இவை முழுமை அடைந்து நமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

சர்பேஸ் புரோ (Surface Pro):






மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே டேப்ளட் மற்றும் நோட்புக் இணைந்த சாதனமான சர்பேஸ் ஆர்.டி. (Surface RT)யினை விற்பனை செய்து வருகிறது. அடுத்து Surface Pro வர இருக்கிறது. சர்பேஸ் ஆர்.டி. போல இது இருந்தாலும், முற்றிலும் மாறுபட்டதாகவே இது இருக்கும். இது விண்டோஸ் 8 சிஸ்டத்தினை முழுமையாகக் கொண்டிருக்கும். இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களையும் சப்போர்ட் செய்திடும் வகையில் இருக்கும். இதன் 1920x1080 பிக்ஸெல் டிஸ்பிளே, பத்து மல்ட்டி டச் மற்றும் ஸ்டைலஸ் உள்ளீட்டினை சப்போர்ட் செய்திடும். இந்த திரையும், இன்டெல் கோர் ஐ5 ப்ராசசர் இணைவும் சேர்ந்து, மிகச் சிறந்த டேப்ளட் மற்றும் லேப்டாப்பாக Surface Pro செயல்படும். இதன் தொடக்க விலை 900 டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரியிலேயே இது நமக்குக் கிடைக்கும்.

ஐபேட் 5:






தற்போது கிடைக்கும் வதந்திகளை வைத்துப் பார்த்தால், 2013 ஆம் ஆண்டில் ஐபேட் 5 நிச்சயம் கிடைக்கும் எனத் தெரிகிறது. சிலர் இந்த டிசம்பரிலேயே இதனைத் தயாரிக்கும் முயற்சிகள் தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால், ஆப்பிள் இதனைப் பொறுத்தவரை மௌனம் சாதிக்கிறது. ஐபேட் 4 ஐக் காட்டிலும் இது தடிமன் குறைவாக இருக்கும். GF2 என அழைக்கப்படும் தொடுதிரை தொழில் நுட்பம், தடிமனைக் குறைக்க உதவும். ஏற்கனவே ஐபேட் மினியில் இது பயன்படுத்தப்பட்டு வெற்றி கண்டது.

ஐபோன் 6:






இதுவும் வதந்திகளின் அடிப்படையில் இருந்தாலும், அடுத்த ஐபோன் வர இருப்பது சாத்தியமே. ஜூன் மாதத்திற்குள் இது கிடைக்கலாம். நீள் சதுர தொடு உணர் நிலையில் இயங்கும் வகையில் ஹோம் பட்டன் இருக்கும். இதில் A6X ப்ராசசர் இருக்கும் எனச் சிலர் தெரிவித்துள்ளனர். சிலர் A7 ப்ராசசர் இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் யாரும் உறுதியாக இது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. பெயர் கூட ஐ போன் 6க்குப் பதிலாக ஐபோன் 5 எஸ் என இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் போன்:






இதுவும் வதந்தி தான். ஆனால் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையில் வெளி வந்ததனால், அனைவரும் எதிர்நோக்கும் நிலை உருவாகி உள்ளது. போன் தயாரிக்கும் பல நிறுவனங்களுடன் மைக்ரோசாப்ட் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், தான் அமைத்துள்ள வடிவமைப்பிற்கேற்ப போன் துணைப் பாகங்களைத் தயாரித்துத் தரக் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது உண்மையாகி, மைக்ரோசாப்ட் நிறுவன போன் கிடைக்கும் பட்சத்தில், ஹார்ட்வேர் பிரிவிலும் மைக்ரோசாப்ட் ஆழமாகத் தடம் பதிக்கும் ஆண்டாக, 2013 இருக்கும்.

பிளாக்பெரி 10 ஸ்மார்ட் போன்:






பிளாக் பெரி போன்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் வர்த்தகத்தினைக் காப்பாற்றும் வகையில், பிளாக்பெரி 10 ஸ்மார்ட் போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி 30ல், இதன் அறிமுகம் இருக்கும் எனவும், அடுத்த இரண்டு மாதங்களில், படிப்படியாக வர்த்தக ரீதியாகக் கிடைக்கும் எனவும் தெரிகிறது. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களின் தொடு உணர் திரை இயக்கங்கள் அனைத்தும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டு கிடைக்கும். பயனாளரின் தனிப் பயன்பாடு மற்றும் நிறுவனப் பயன்பாடு ஆகியவற்றைப் பிரித்துக் கையாளும் வகையில் இந்த போனில் வசதிகள் கிடைக்கும். ஏறத்தாழ 5,000 போன்கள் வடிவமைக்கப்பட்டு, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை வடிவமைப்போருக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பான செயல்பாட்டினையும் பயன்பாட்டினையும் இதில் எதிர்பார்க்கலாம். விலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

கீ லைம் பை (Key Lime Pie):






வரும் கூகுள் கருத்தரங்கில், மே 15ல், பெரிய மாற்றங்களுடன் கூடிய தன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய பதிப்பான Key Lime Pie சாப்ட்வேரினை வெளியிட உள்ளது. வர இருக்கும் இந்த சாப்ட்வேர் எப்படிப்பட்டதாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், தற்போது இதன் முன்னோடியாகப் பயன்படுத்தக் கொண்டிருக்கும் பதிப்பில் நிறைய குறைகள் இருப்பதாகப் பயனாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இவை நீக்கப்பட்டு புதிய சிஸ்டம் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

வளைக்கக் கூடிய மொபைல் போன்கள்:






மொபைல் போனின் திரைகளை வளைந்து கொடுக்கும் தன்மையுடன் அமைக்கும் தொழில் நுட்பம் கிடைத்து விட்டது. எனவே, 2013ல், இந்த தொழில் நுட்பத்தினைப் பெரும் அளவில் பயன்படுத்தி, நிறைய ஸ்மார்ட் போன்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கீழே விழுவதன் மூலம், எதன் மீதாவது மோதுவதன் மூலம் மற்றும் இது போன்ற அதிர்வுகள் மூலம் மொபைல் போன்கள் கெட்டுப் போவது தடுக்கப்படலாம். எந்த நிறுவனமும் தாங்கள் இதனைப் பயன்படுத்தி போன்களைத் தயாரிக்கப் போவதாக அறிவிக்கவில்லை என்றாலும், சாம்சங் இதில் முந்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

ஓ.எஸ். எக்ஸ் 10.9:






ஆப்பிள் தன் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கான, அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இந்த ஆண்டு நிச்சயம் வெளியிடும். Lynx எனத் தற்போது குறியீட்டுப் பெயருடன் அழைக்கப்படும் இந்த ஓ.எஸ். எக்ஸ் 10.9 சிஸ்டம், போன், டேப்ளட் சாதனங்களுக்கான ஐ.ஓ.எஸ். சிஸ்டத்துடன் பல நிலைகளில் ஒருங்கிணைந்து இயங்கும் என எதிர்பார்க்கலாம். மேலே குறிப்பிட்டவை தவிர, வயர்லெஸ் தகவல் பரிமாற்றத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் வர இருக்கின்றன. தற்போது 433Mbps வேகத்தில் டேட்டா பரிமாற்றம் கொள்ளும் வகையில் வயர்லெஸ் தகவல் பரிமாற்றம் உள்ளது.
இதனைக் காட்டிலும் மூன்று பங்கு அதிக வேகம் மற்றும் டேட்டா பரிமாற்றத்துடன் கூடிய தொழில் நுட்பம் உருவாக உள்ளது. இதனை கிகா பிட் வைபி (Gigabit WiFi) என அழைப்பார்கள். நெட்கியர், அசூஸ் மற்றும் பெல்கின் (Netgear, Asus and Belkin) ஆகிய நிறுவனங்கள் இதற்கான ரௌட்டர்களை வடிவமைத்து வழங்க இருக்கின்றன. இந்த பிரிவில் இயங்கும் சிஸ்கோ நிறுவனமும் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய சாதனங்களை இந்த ஆண்டு வழங்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X