Fresh Paint நீங்களே திரையில் வரையலாம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2013
00:00

பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்படும் துணை புரோகிராம்கள் அனைத்தும், விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படையிலேயே இயங்கும். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டம் தான் இயங்கும் வகையில் புதிய, முற்றிலும் மாறுபட்ட மாற்றத்தினைக் கொண்டு வந்ததால், அனைத்து புரோகிராம்களும் புதிய சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன் படுத்துகின்றனவா எனத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு முழுமையாகப் பயன்படுத்தும் ஓர் அருமையான புரோகிராம் Fresh Paint.
மேலோட்டமாகப் பார்த்தால், நாம் நம் விரல்களாலேயே, மானிட்டர் திரையில் படம் வரையக் கூடிய வசதிகளைத் தரும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு வகையான பிரஷ்களுடன், கலர் பேலட் ஒன்று தரப்பட்டு, படம் வரையும் அனுபவத்தினை மிக மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றுகிறது. இதனை இயக்கிப் பார்க்கையில், இது பழைய MSPaint புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட புரோகிராம் அல்ல, முற்றிலும் புதிய புரோகிராம் எனத் தெரியவரும். இதில் நாம் படம் வரையும்போது, படம் வரையும் கேன்வாஸ் ஒன்றில், ஆயில் பெயிண்ட் கொண்டு நாமே வரையும் அனுபவத்தினை இது தருகிறது.
இந்த புரோகிராமினைத் தர, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐந்து விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர். பெயிண்ட் புரோகிராம்
வடிவமைப்பது எளிதான ஒரு செயல் அல்ல. எண்ணிப் பாருங்கள். பெயிண்ட் பிரஷ் ஒன்றின் ஆயிரக்கணக்கான இழைகளும் தரக்கூடிய வண்ணத்தைத் திரையில் அமைக்க, எவ்வகையான குறியீடுகளை புரோகிராம் செய்திருக்க வேண்டும். இதனை சோதனை செய்தபோது, ஏறத்தாழ 60 ஆயிரம் பேர், சோதனை செய்து பார்த்துச் சரியான கருத்துக்களை வழங்கினார்கள். இவற்றின் அடிப்படையில், இந்த புரோகிராம் முழுமையாக்கப்பட்டு விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு, அதன் சோதனை தொகுப்பில் தரப்பட்டது. இந்த புரோகிராம் குறித்து இதனைப் பயன்படுத்திப் பார்த்த மக்கள் தந்த பின்னூட்டுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன.
புரோகிராம், அடோப் போட்டோ ஷாப் போன்ற வரைவதற்கான வசதிகள் பல கொண்ட புரோகிராம் அல்ல. ஆனால், இதுவரை விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்பட்ட பெயிண்ட் புரோகிராம்களில், இது ஒரு தனி சிறப்பினைக் கொண்டுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டம் கம்ப்யூட்டர்களை வாங்கியவர்கள், இதனைப் பயன்படுத்திப் பார்த்தால், இதனைத் தெரிந்து கொள்வார்கள்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X