பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2013
00:00

"கம்ப்யூட்ட்ரில் அன்றும் இன்றும்' அருமையான வேடிக்கையான கட்டுரை. சிந்திக்கவும் வைத்தது. மாறுதல் ஒன்றே மாறாதது என்ற சித்தாந்தத்தின் உண்மையை உறுதிப்படுத்தியது.
ஆர். கிருஷ்ணன், சிவகங்கை.

மொழி வளரும் பாங்கினை இவ்வளவு அழகாக, தொழில் நுட்பத்தை வைத்து விளக்கியுள்ளீர்கள். மிக அருமையான ஒப்பீடு. சொற்கள் வெறும் காகிதங்கள் தான். நாம் தான் அதற்கு கால கட்டத்திற்கேற்ப பொருளைத் தருகிறோம். எழுதியவருக்குப் பாராட்டுகள்.
என். திருமாறன், மதுரை.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மறக்க முடியாத ஆண்டாக 2012 அதன் வரலாற்றில் நிலைத்திருக்கும். அனைத்து பிரிவுகளிலும் தன் சாதனைகளைப் படைத்ததை உங்கள் கட்டுரை விளக்குகிறது.
பேரா. டி.என். சேஷாத்ரி, திருச்சி.

லைசன்ஸ் வாங்காமல், விண்டோஸ் பயன்படுத்துவதில் சீனா முதலிடம் கொண்டிருப்பது ஆச்சரியமில்லை. ஜனத்தொகை அதிகம். அவர்களைக் கட்டுப்படுத்துவது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெரிய சவாலாகவே இருக்கும். நம் நாட்டிலும் இந்த செயல்பாடு உள்ளதே!
எஸ். கலையரசன், புதுச்சேரி.

தொழில் நுட்பத்தில் என்னதான் முன்னணியில் இருந்தாலும், எந்த நிறுவனத்திற்கும் அடி சறுக்கும் என்பது, ஆப்பிள் மேப்ஸ் விஷயத்தில் உண்மை யாகியுள்ளது. பாடம் கற்றுக் கொண்ட ஆப்பிள் அடுத்து என்ன செய்கிறது எனப் பார்க்கலாம்.
கே. ஸ்ரீதேவி பிரசன்னா, காரைக்குடி.

ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தயாரிக்கும் பிரிவில் இவ்வளவு முதலீடா? சரியான வர்த்தகம். நம் நாட்டினரும் இதில் தீவிரமாக இறங்கலாமே! ஏன் டாட்டா போன்ற நிறுவனங்கள் தயங்குகின்றன? கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் இறங்கி முயற்சிக்கலாமே!
டி.ஸ்வாமிநாதன், சோழவந்தான்.

கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் அனைத்து வசதிகளும், இனி மொபைல் சாதனங்களுக்கென வர வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆபீஸ் தொகுப்பு போல, மைக்ரோசாப்ட் தன் மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர்களையும் வழங்க வேண்டும். அதே போல மற்ற நிறுவனங்களும் தர வேண்டும்.
டாக்டர் க.தி. இராம கண்ணன், காரைக்குடி.

விண்டோஸ் 8ல் ஸ்கிரீன் ஷாட் குறித்த சந்தேகம் எனக்கும் இருந்து வந்தது. இதில் கிடைக்காதோ என்றிருந்தேன். தங்களின் பதில் அருமையான விளக்கத்தினைத் தந்தது. நன்றி.
கா. சுந்தரம், விருதுநகர்.

இதுவரை கேட்டறியாத சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் குறித்தும், அவற்றின் தனித்தன்மை பற்றியும் தகவல் தந்துள்ள வகையில் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. அளவில்லா தகவல்கள் தருவதில், கம்ப்யூட்டர் மலர் ஈடு இணையற்றது.
என்.விவேக் ராஜா, சிவகாசி.

மேப்களைத் தரும் சாதனங்களின் உதவியுடன், கண்ணை மூடிக் கொண்டு எந்த ஒரு புதிய ஊருக்கும் பயணம் செய்திடலாம். அந்த அளவிற்கு அட்வான்ஸ்டாக சாதனங்கள் கிடைக்கின்றன. இவற்றில் கூகுள் மேப்ஸ் மிகச் சிறப்பானதாக உள்ளது.
என். சாருலதா, சென்னை.

விண்டோஸ் பைரசி தொகுப்பு கிடைக்கிறது என்றாலும், முழுமையான அதன் பயனை அனுபவிக்க, பாதுகாப்பாக இயங்க, கட்டணம் செலுத்தி உரிமை பெற்று இயங்குவதே நல்லது. இதனை நம் மக்கள் புரியும் வகையில், உங்களைப் போன்ற பத்திரிக்கைகள் எடுத்துக் கூற வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான கம்ப்யூட்டர் பயன்பாடு பரவும்.
பேரா. தி. ஷண்முகநாதன், மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X