கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2013
00:00

கேள்வி: பல்வேறு ஆபீஸ் பதிப்புகள் புழக்கத்தில் உள்ளன. அதே போல பைலைப் பெறுபவர்கள், தங்களுக்குகந்த பார்மட்டில் பைலைக் கேட்கின்றனர். இதனால், பல வேளைகளில் பைல்களின் பார்மட் மாற்ற வேண்டியுள்ளது. இதற்கு ஒரே தீர்வாக
ஏதேனும் அப்ளிகேஷன் உள்ளதா?
ச.தீபா, கோவை.
பதில்:
அனைத்திற்கும் தீர்வு தரும் வகையில் ஒரு அப்ளிகேஷன் இல்லை. ஆனால், இணையத்தில் இந்த தீர்வு தரும் வகையில் பல தளங்கள் இயங்குகின்றன. இதில் நான் பரிந்துரைப்பது http://www.convertfiles.com/ என்ற முகவரியில் இயங்கும் தளம் தான். இந்த தளத்திற்குச் சென்று, நீங்கள் பார்மட் மாற்ற விரும்பும் பைலை, பிரவுஸ் பட்டன் அழுத்தி கிளிக் செய்திடவும். அது வேர்ட் டாகுமெண்ட் பைலாக இருக்கலாம். நீங்கள் அதனை பி.டி.எப். பைலாக மாற்ற விரும்பலாம். எனவே பிரவுஸ் மூலம் பைலைத் தேர்ந்தெடுத்த பின்னர், அவுட்புட் பைல் எந்த பார்மட்டில் தேவை என்று குறிப்பிட வேண்டிய இடத்தில், Adobe Portable Document என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் பின், Convert என்ற பட்டனில் அழுத்தியவுடன், பைல் பார்மட் மாற்றம் செய்யப்படும். பார்மட் மாற்றப்பட்ட பைலைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தர வேண்டும். சில நிமிடங்களில், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு, பார்மட் மாற்றப்பட்ட பைலை டவுண்லோட் செய்திடுவதற்கான லிங்க் தரப்படும். இந்த தளத்திலேயே எந்த எந்த பார்மட்டிற்கு பைல்கள் மாற்றப்படும் என்ற தகவலும், மேலும் பல சந்தேகங்களுக்கான பதில்களும் தரப்படும்.

கேள்வி: சில வேளைகளில் பைல்களை ஒரு போல்டரிலிருந்து இன்னொன்றுக்கு காப்பி செய்கையில், அதே பெயரில் ஒரு பைல் இருந்தால், பைலின் பெயரைக் காட்டி, காப்பி செய்யப்படும் பைலை மேலாகவே எழுதவா? என்று கேட்கிறது. இதற்கென தரப்படும் பாப் அப்பெட்டியில், Yes எனவும், Yes to All எனவும் பட்டன்கள் இருக்கின்றன. ஆனால், No என்று மட்டுமே உள்ளது. No to All என்று பட்டன் இல்லை. இது எதனால் ஏற்பட்ட குழப்பம்? விளக்கவும்.
எஸ்.நித்யா மகேஷ், சென்னை.
பதில்:
தங்கள் கோபம் நியாயமானதே. பொதுவாக பேக் அப் எடுக்கையில், கம்ப்யூட்டர்களுக்கிடையே அப்டேட் செய்த பைல்களை காப்பி செய்கையில் இந்த சூழ்நிலையைச் சந்திக்கலாம். இருக்கின்ற பைல் எதனையும் மாற்ற வேண்டாம் என மொத்தமாகக் கட்டளை கொடுக்க “No to All” கட்டளை தான் தேவை. இந்த பட்டன் தரப்படவில்லை. ஆனால், இதற்கு ஒரு வழி உள்ளது. No பட்டனை அழுத்துகையில், உங்களுக்கு No to All தேவை என்றால், ஷிப்ட் பட்டனையும் சேர்த்து அழுத்தவும். கட்டத்தில் உள்ள நோ பட்டன் “No to All” என மாறும். ஒரே பெயரில் உள்ள பைல் எதுவும் மாற்றப்பட மாட்டாது.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் வாங்கியுள்ளேன். இதில் விண்டோஸ் டிபண்டர் (Windows Defender) புரோகிராம் இயங்குவதாகத் தெரியவில்லை. சிஸ்டத்துடன் தரப்படுவதாக நீங்கள் முன்பு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். நான் இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும்?
சி.ஆர். நான்சி ஜோசப், கோவை.
பதில்:
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் வாங்கிய பலரின் ஆதங்கம் இது. விண்டோஸ் டிபண்டர் உங்கள் சிஸ்டத்துடன் தரப்பட்டுள்ளது. ஆனால், இயங்கவிடாமல் செட் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். இதனை சிஸ்டத்துடன் தந்தால், தங்களின் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் மக்கள் மத்தியில் விற்பனையாகாமல் போய்விடும் என்பதால், இந்த புரோகிராம்களைத் தயாரித்து விற்பனை செய்திடும் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்தன. இந்த நெருக்கடி குறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்ட போது, மைக்ரோசாப்ட் விண்டோஸ் டிபண்டர் புரோகிராமினை இயங்கா நிலையில் வைத்து வழங்க அனுமதி தந்தது. இதனை எப்படி இயக்கலாம் என்பதனைப் பார்க்கலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தின் புதிய ஸ்டார்ட் ஸ்கிரீன் சென்று, அதில் Windows Defender என டைப் செய்திடவும். விண்டோஸ் டிபண்டர் ஐகான் காட்டப்படுகையில், அதில் கிளிக் செய்திடவும். இப்போது விண்டோஸ் டிபண்டர் இயங்கா நிலையில் இருப்பதால், உங்கள் விண்டோஸ் சிஸ்டம் “At risk” என செய்தி காட்டப்படும். பெரிய அளவில் சிகப்பு எக்ஸ் அடையாளம் காட்டப்படும். இனி, விண்டோஸ் டிபண்டர் விண்டோவில் மேலாக உள்ள Settings டேப்பிற்குச் செல்லவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், ‘Realtime protection’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ‘Save Changes’ என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி, “At risk” செய்தி கிடைக்காது. விண்டோஸ் டிபண்டர் வேலை செய்வதால், இந்த செய்தி காட்டப்பட மாட்டாது. இது இயங்கியவுடன், ‘Scan Now’ என்பதில் கிளிக் செய்து, கம்ப்யூட்டரை ஒரு முறை ஸ்கேன் செய்து வைக்கவும். அவ்வப்போது ‘Update’ என்ற டேப்பில் கிளிக் செய்து, இதனை அப்டேட் செய்திடவும். விண்டோஸ் டிபண்டர் முதலில் இயங்குவதற்கு முன்னால், இந்த அப்டேட் செயல்பாடு முக்கியம்.

கேள்வி: இணைய தளம் ஒன்றுக்கும், அதனைக் காட்டும் யு.ஆர்.எல்.க்கும் எவ்வகையில் தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது? குறிப்பிட்ட ஒன்றின், எ.கா. அவிரா ஆண்ட்டி வைரஸ் தளத்தின், யு.ஆர்.எல்.ஐ எப்படிக்கண்டுபிடிப்பது?
பா.நரசிம்மன், பள்ளிக்கரணை
பதில்:
ஓர் இணைய தளம் எந்த சர்வரில் உள்ளது என்பதை அந்த சர்வரின் பெயர், தன்மையைக் காட்டுவதே அதன் யு.ஆர்.எல். இணைய தளம் என்பது ஒரு வீடு என்றால் அதன் அஞ்சல் முகவரி தான் யு.ஆர்.எல். அவிரா ஆண்ட்டி வைரஸ் தளத்தின் யு.ஆர்.எல். ஐக் கண்டுபிடிப்பது என்று சொல்வதைக் காட்டிலும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு எந்த தளத்தில் கிடைக்கிறது என்பதை எப்படி அறியலாம்? இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயரில் தளம் இருக்கும். அதனை அறிந்து தரலாம்.
அல்லது எல்லாரும் செயல்படுவது போல, ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் Avira anti virus என்று கொடுத்தால் இந்த பைல் இருக்கும் தளங்களின் முகவரிகள் (யு.ஆர்.எல்.) பட்டியலிடப்படும். அவற்றின் மீது கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம்.

கேள்வி: விண்டோஸ் 8 நிச்சயமாய் வெற்றி அடையுமா? மக்கள் அந்த அளவிற்கு ஹார்ட்வேரிலும், சிஸ்டத்திற்கும் செலவழிப்பார்களா? நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன்.
ஆர். சிவராஜ், தாம்பரம்.
பதில்
: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவதால், இந்த சந்தேகமும் பயமும் உங்களிடம் தோன்றி உள்ளது. ஆனால், அதே நேரத்தில் புதியதாய், கம்ப்யூட்டரும், அதில் புதிய சிஸ்டமும் இருக்க விரும்புகிறீர்கள். நிச்சயம் விண்டோஸ் 8, புதிய ஹார்ட்வேருடன் பெரும்பாலான மக்களைச் சென்றடையும். தேவை எனில் நாம் மாறத்தான் செய்வோம். அரசின் சொகுசு ஏ.சி. பஸ், மல்ட்டி ஆக்ஸில் தூங்கும் வசதி கொண்ட ஏ.சி. பஸ் என பிரயாணத்திற்கு நாம் பழகிக் கொள்ளவில்லையா? அது போல் தான் இதுவும். ஒரு தகவல் தரட்டுமா? மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி பால்மர், வரும் 2013 இறுதிக்குள், 50 கோடி விண்டோஸ் 8 லைசன்ஸ் விற்பனையாகும் எனக் கூறி உள்ளார். 2013க்குள்ளாகவே இந்த எண்ணிக்கையை விண்டோஸ் 8 எட்டும் எனத் தெரிகிறது. நீங்கள் புதிய கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரையே வாங்கவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X