மார்ச்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2012
00:00

தமிழகம்


மார்ச் 15: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, சிறையில் முதல் வகுப்பு வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவு.
மார்ச் 19: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்க வலியுறுத்தி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 7 மாத எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
மார்ச் 28: "ராமர் பாலத்தை' தேசிய சின்னமாக அறிவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்.
மார்ச் 31: அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, மீண்டும் இணைந்தார்.

இந்தியா

மார்ச் 2: ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் அலுவலகம், ஒட்டுகேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. உளவுத்துறை விசாரணைக்கு உத்தரவு.
மார்ச் 9: கோவா மாநில முதல்வராக, பா.ஜ., வைச் சேர்ந்த மனோகர் பரிக்கர் பதவியேற்றார்.
* மணிப்பூர் மாநில முதல்வராக காங்கிரசின் ஒக்ரம் இபோபி சிங் பதவியேற்றார்.
மார்ச் 13: உத்தரகண்ட் மாநில முதல்வராக காங்., கட்சியை சேர்ந்த விஜய் பகுகுணா பதவியேற்பு.
* பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சொத்துக் கணக்கு 111 கோடி என, அவரது ராஜ்யசபா எம்.பி., தேர்தல் வேட்பு மனு மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
மார்ச் 14: ஒடிசா மாநிலத்தில், இத்தாலியைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகளை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றனர். பல நாட்களுக்குப்பின் விடுதலை.
மார்ச் 14: பஞ்சாப் முதல்வராக சிரோண்மனி அகாலி தளம் சார்பில் பிரகாஷ் சிங் பாதல் 5வது முறையாக பதவியேற்றார்.
மார்ச் 15: ரயில்வே பட்ஜெட்டில், 10 ஆண்டுகளுக்குப்பின் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப் பட்டன. மம்தா பானர்ஜி எதிர்ப்பால் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா, கட்டணம் வாபஸ்.
மார்ச் 17: ஜோர்டானுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் உதவ, இந்திய தேர்தல் ஆணைய குழு பயணம்.
மார்ச் 20: முல்லை பெரியாறில், புதிய அணை கட்ட, முதல்கட்ட பணிகளைத் துவக்க, கேரள பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மார்ச் 24: 2012ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் (பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன்) 53 பேருக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டிலால் வழங்கப்பட்டது.
மார்ச் 25: தென்கொரியாவில் நடந்த, அணு ஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார்.
மார்ச் 29: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 4வது மாநாடு டில்லியில் நடந்தது.
மார்ச் 30: ஒலியை விட அதிக வேகத்தில் செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

உலகம்

மார்ச் 14: சூடானும் - தெற்கு சூடானும், மக்கள் இருநாடுகளுக்கும் சுதந்திரமாக சென்று வர, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மார்ச் 16: ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டிருந்த, நேட்டோ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி, 15 பேர் பலி.
மார்ச் 19: பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான டோங்கா நாட்டின் கடைசி மன்னர் ஜார்ஜ் டூபோவூ, 63, மறைந்தார்.
மார்ச் 20: மெக்சிகோவில் ரிக்டர் அளவில் 7.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 800 பேர் வீடுகளை இழந்தனர்.

விளையாட்டு


மார்ச் 4: பாட்னாவில் நடந்த உலக கோப்பை பெண்கள் கபடி போட்டியின் பைனலில், ஈரானை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மார்ச் 5: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ருனாகோ மார்டன், கார் விபத்தில் மரணமடைந்தார்.
மார்ச் 12: விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரின் பைனலில் மும்பையை வீழ்த்தி, பெங்கால் அணி கோப்பை வென்றது.
மார்ச் 17: சென்னையில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில், இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
மார்ச் 25: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மேரி கோம், சரிதா தேவி தங்கம் வென்றனர்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.