ஏப்ரல்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2012
00:00

தமிழகம்

ஏப்., 10: சட்டசபைக்குள் மொபைல் பயன்படுத்த, சபாநாயகர் ஜெயக்குமார் தடை.
ஏப்., 20: தே.மு.தி.க., வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம். முரசு நிரந்தரமானது. இதற்கு சட்டசபை தேர்தலில் 2 எம்.எல்.ஏ., மற்றும் 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.
ஏப்., 21: சென்னை சிறுவன் தில்ஷன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி ராம்ராஜுக்கு ஆயுள் தண்டனை.
ஏப்., 25: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கிற்கு, மணி மண்டபம் அமைப்பதற்காக, முதல்வர் ஜெ., அடிக்கல் நாட்டினார்.

இந்தியா

ஏப்., 7: இந்திய - அமெரிக்க கடற்படை வீரர்களின் 10 நாள் கூட்டுப்பயிற்சி "மலபார் - 2012' என்ற பெயரில் சென்னையில் நடந்தது.
ஏப்., 8: இந்தியா - கத்தார் இடையே எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள், பிரதமர் மன்மோகன் - கத்தார் மன்னர் ஷேக் ஹமாத் கலீபா ஆகியோர் இடையே கையெழுத்தானது.
ஏப்., 16: இலங்கை தமிழர்கள் நிலையை அறிய, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி.,க்கள் குழு, இலங்கை பயணம்.
ஏப்., 19: கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி - 5 ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. 5,500 கி.மீ., தூரம் செல்லக்கூடியது.
ஏப்., 21: "அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள், இனி கட்டாயமாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவு.
ஏப்., 23: நாடு முழுவதும் சமூக பொருளாதார, ஜாதி வாரி கணக்கெடுப்பு துவங்கியது.
* ஆபாச "சிடி' விவகாரத்தில் சிக்கிய காங்கிரசின் அபிஷேக் சிங்வி, பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா.
ஏப்., 24: நார்வேயில் இந்திய தம்பதியரிடம் இருந்து, அந்நாட்டு கோர்ட்டால் பிரிக்கப்பட்ட 2 குழந்தைகளும், உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு டில்லி திரும்பினர்.
* ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருண் ஜெட்லி, மாயாவதி, சிரஞ்சீவி, ஜெயா பச்சன் உள்ளிட்ட 50 பேர், எம்.பி.,க்களாக பதவியேற்பு.
ஏப்., 25: மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் (ஆர்.டி.இ.,) ராஜ்யசபாவில் தாக்கலானது.
ஏப்., 26: ஐ.நா., பொதுச்செயலர் பான் கி மூன், இந்தியா வந்தார்.
* இரவிலும், பகலிலும் பூமியைத் துல்லியமாக படம் பிடிக்கும், "ரிசாட் - 1' செயற்கைக்கோளுடன், "பி.எஸ்.எல்.வி., - சி 19' ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

உலகம்


ஏப்., 2: ரஷ்யாவில், 43 பேருடன் புறப்பட்ட விமான விபத்தில் 31 பேர் பலி.
ஏப்., 3: மும்பை தாக்குதலுக்கு காரணமான, ஜமாத் உத் தவா தலைவர் ஹபிஸ் சயீதை பிடித்துக் கொடுப்போருக்கு, அமெரிக்கா 10 மில்லியன் டாலர் வெகுமதி அறிவிப்பு.
ஏப்., 7: ஆப்ரிக்க நாடான மலாவியின் அதிபர் பிங்கு-வா- முதரிக்கா மறைந்தார். புதிய அதிபராக, ஜாய்ஸ் பாண்டா பதவியேற்பு.
ஏப்., 15: காபூலில் பார்லிமென்ட், நட்சத்திர ஓட்டல், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மன் தூதரகங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 47 பேர் பலி.
ஏப்., 17: வாஷிங்டனில் உலக வங்கியின் புதிய தலைவராக, அமெரிக்க குடியுரிமை பெற்ற, ஜிம் யோங் கிம் தேர்வு.
ஏப்., 21: கராச்சியில் இருந்து இஸ்லாமா பாத்துக்கு சென்ற விமானம், விபத்துக் குள்ளானதில் 127 பேர் பலி.
ஏப்., 24: பாகிஸ்தானில் போலி பி.ஏ., சான்றிதழை வைத்திருந்த இந்து எம்.எல்.ஏ.,வுக்கு ஓராண்டு சிறை தண்டனை.

விளையாட்டு


ஏப். 1: மியாமி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் பயஸ், செக் குடியரசின் ஸ்டெபானக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இது ஏ.டி.பி., அரங்கில் பயஸ் பெறும் 50வது பட்டம்.
ஏப். 14: ஷாங்காய் நகரில் நடந்த உலக வில்வித்தை போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்றது.
ஏப். 28: டி.வி.எஸ்., ஐ.டி.எப்., பியூச்சர் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் சாம்பியன் பட்டம் வென்றார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பாலாஜி, ஸ்ரீராம் ஜோடி சாம்பியன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.