Advertisement
ஆகஸ்ட்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2012
00:00

தமிழகம்

ஆக., 1: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களை, மீண்டும் சென்னை அண்ணா பல்கலையுடன் ஒருங்கிணைப்பு.
ஆக., 8: மருத்துவப் பல்கலை மற்றும் உடற்கல்வி, விளையாட்டு பல்கலை துணை வேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை, 70 ஆக உயர்த்தி, ரோசய்யா உத்தரவு.
ஆக., 11: கொங்குநாடு முன்னேற்றக்க கழக செயலர் ஈஸ்வரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக, அதன் தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவிப்பு.
ஆக., 12: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு நடந்தது. முன்கூட்டியே வினாத்தாள் வெளியானதால் தேர்வு ரத்து.
* சென்னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், இலங்கை தமிழர்களுக்காக "டெசோ' மாநாடு நடந்தது.
ஆக., 17: தி.மு.க., தலைவர் கருணாநிதி, பேஸ்புக்கில் நுழைந்தார். ஒரேநாளில் எதிர்பாளர்களின் விமர்சனங்களால், கணக்கு மூடப்பட்டது. மீண்டும் திறப்பு.
ஆக., 31: முன்னாள் எம்.எல்.ஏ., வெள்ளைச்சாமி கமுதியில் கொலை செய்யப்பட்டார்.

இந்தியா


ஆக., 1: புனேயில் ஐந்து இடங்களில் லேசான தொடர் குண்டுவெடிப்பு.
ஆக., 9: டில்லியில், முன்னாள் விமானப் பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய, அரியானா மாநில முன்னாள் அமைச்சர் கோபால் கந்தா கைது.
* இரண்டு ஆயிரம் கி.மீ., தூரம் வரை சென்று தாக்கும் அக்னி - 2 ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஆக., 19: காதலை பிரித்த எஸ்.ஐ.,யை பழிவாங்க எண்ணி, ஆந்திராவின் தடா பகுதியில் ஓடும் பஸ்சில் மூவரை கொலை செய்த "சைக்கோ' கொலையாளி ஆந்திர போலீசாரால் கைது.
ஆக., 21: ராஜ்யசபா துணைத் தலைவராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜெ.குரியன், ஏகமனதாகத் தேர்வு.
* நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீட்டில், 1.86 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக பார்லிமென்டில் மத்திய தணிக்கை துறை அறிக்கை.
* உத்தரகண்டில் அரசு வேலையில் சேருவதற்கான அதிகபட்ச வயதை 35லிருந்து 40 ஆக உயர்த்தியது.
ஆக., 24: ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பி.ஏ., சங்மா, "தேசிய மக்கள் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
ஆக., 29: 2008 நவ., 26, மும்பை தாக்குதல் சம்பவத்தை மீடியாக்கள் நேரடியாக ஒளிபரப்பியது, முற்றிலும் தவறு மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு.

உலகம்

ஆக., 10: சிரியாவின் சுகாதார அமைச்சர் நதீர் அல் ஹால்குய், புதிய பிரதமராக நியமனம்.
ஆக., 16: காங்கோவில், தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கி 100 மீட்டர் ஆழத்தில், வேலை செய்து கொண்டிருந்த 60 தொழிலாளர்கள் பலி.
ஆக., 19 : சூடான் நாட்டு விமானம், மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு அமைச்சர் உட்பட 31 பேர் பலி.
ஆக., 28: அணு ஆயுதங்களை சுமந்து 14 ஆயிரம் கி.மீ., தூரம் வரை சென்று தாக்கும், "டாங்பெங்-41' என்ற ஏவுகணையை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது.
ஆக., 28: "டோங்பெங்-41' என்ற 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதித்தது.

விளையாட்டு


ஆக., 1: லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டனில் "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட்ட சீனா, தென் கொரியாவின் 8 வீராங்கனைகள் தகுதி நீக்கம்.
* ஒலிம்பிக் பாட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் காஷ்யப்.
ஆக., 2: லண்டன் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற்ற அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் (22), அதிக பதக்கம் வென்ற ரஷ்ய
"ஜிம்னாஸ்டிக்' வீராங்கனை லாரிசா சாதனையை (18) முறியடித்தார்.
ஆக., 26: ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆக., 29: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விஜய் குமார் (துப்பாக்கி சுடுதல்), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்) இருவரும், "கேல் ரத்னா' விருது பெற்றனர்.
* டெஸ்ட், "டுவென்டி-20', ஒருநாள் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் "நம்பர்-1' இடத்தை பெற்றது தென் ஆப்ரிக்கா.
* இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்டிராஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.