அக்டோபர்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2012
00:00

தமிழகம்

அக்., 3: தமிழக அமைச்சரவை 8வது முறையாக மாற்றம். சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு, ப.மோகன் புதிய அமைச்சராக நியமனம்.
அக்., 6: செம்மண் குவாரியில் மணல் எடுப்பதில், அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்த வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி கைது.
* தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் "பந்த்' நடந்தது.
அக்., 7: தமிழக அரசின் புதிய தலைமை கொறடாவாக, வைகை செல்வன் எம்.எல்.ஏ., நியமனம்.
* பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில், விசாரணைக் கைதி வெங்கடேசன் இறந்தது தொடர்பாக, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 4 பேர் சஸ்பெண்ட் .
அக்., 8: 10 ஆயிரத்து 700 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., நடத்தி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அக்., 10: சட்டசபையின் புதிய சபாநாயகராக தனபால் தேர்வு.
அக்., 14: டி.இ.டி., மறுதேர்வு நடைபெற்றது.
அக்., 19: மதுரை ஆதீனத்தின், இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட்டிந்த நித்யானந்தாவை நீக்கி விட்டதாக, ஆதினம் அருணகிரிநாதர் அறிவிப்பு.
அக்., 20: தி.மு.க., மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி., ஆகிய இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
அக்., 21: மூன்று ஆண்டுகளில் சூரிய ஒளி மூலம் 3,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது.
அக்., 27: திருப்பாச்சேத்தி அருகே ரவுடிகள் சண்டையை தடுக்கச் சென்ற எஸ்.ஐ., ஆல்பின் சுதன் குத்தி கொலை.
அக்., 30: தேவர் ஜெயந்தி விழாவுக்கு பசும்பொன் சென்ற மூன்று இளைஞர்கள் பரமக்குடியில் அடித்து கொலை.
* மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு 7 பேர் பலி.

இந்தியா

அக்., 1: பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம், 1000ல் இருந்து1500 ரூபாயாகவும், தட்கல் பாஸ்போர்ட்டுக்கு 2500 லிருந்து 3500 ஆகவும் உயர்வு.
* ரயில்களில் "ஏசி' பெட்டிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.
அக்., 3: நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆறு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
அக்., 7: ரயில்களின் இருப்பிடம் அறிய, எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதள சேவை தொடக்கம்.
அக்., 20: தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான சேவை, உரிமம் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
அக்., 30: "ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது' என, உ.பி., அரசு புது உத்தரவு.

உலகம்

அக்., 1: இந்தியாவின் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கே.எஸ்.பிரார் லண்டனில் தாக்கப்பட்டார். சீக்கிய பொற்கோயிலில் புகுந்த ராணுவப் படைக்கு தலைமை தாங்கியவர்.
அக்., 8: தென் அமெரிக்க நாடான, வெனிசுலாவில் நடந்த தேர்தலில், அதிபர் ஹக்கோ சாவெஸ் நான்காவது முறையாக வெற்றி பெற்றார்.
* ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த உலகின் அதிக வயதான பெண்மணி அன்டிசா, மறைந்தார். இவர் 2 உலகப்போர் மற்றும் ரஷ்ய புரட்சியை கண்டுள்ளார்.
அக்., 15: லிபியாவின், புதிய பிரதமராக, அலி ஜுடன் பதவியேற்றார். இவர் இந்தியாவுக்கான லிபிய தூதராக இருந்துள்ளார்.

விளையாட்டு


அக். 7: "டுவென்டி-20' உலக கோப்பையை முதல் முறையாக வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.
அக். 8: "டுவென்டி-20' போட்டி, ஐ.சி.சி., உலக லெவன் அணியில் இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு இடம்.
அக். 10: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை, பாகிஸ்தானின் ஆறு அம்பயர்கள் "சஸ்பெண்ட்'.
அக். 21: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் செய்னா நேவல் சாம்பியன்.
* இப்ஸ்விச் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாகா அலன்காமணி சாம்பியன் பட்டம் வென்றார்.
அக். 22: ஊக்க மருந்து பயன்படுத்திய "சைக்கிள்' பந்தய ஜாம்பவான் லான்ஸ் ஆர்ம்ஸ்டிராங்கிற்கு வாழ்நாள் தடை.
அக். 28: சாம்பியன்ஸ் லீக் தொடரில், ஆஸ்திரேலியாவின் சிட்னி சிக்சர்ஸ் சாம்பியன்.
* உலக பில்லியர்ட்ஸ் தொடரில் இந்தியாவின் ருபேஷ் ஷா 3வது முறையாக சாம்பியன்.
அக். 31: பெண்கள் ஆசிய கோப்பை "டுவென்டி-20' தொடரில், இந்திய அணி சாம்பியன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.