டிச., 3: நடுக்கடலில் மீன் பிடித்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 16 பேர், இலங்கை கடற்படையால் கைது, பின் விடுதலை. டிச., 4: ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு அடுத்து இருந்த நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க., வில் இணைந்து கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆனார். டிச., 9: மெரீனா கடற்கரையில் ரூ.8 கோடி செலவில், புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., நினைவிடத்தை, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். டிச., 10: சென்னை பெருங்குடியில் பஸ் மீது லாரி மோதியதில், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலி. டிச., 13: ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற 21,920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். டிச., 13: பரமக்குடியில் தமிழகத்தின் முதல் சோலார் மின்சாரப் பூங்கா, அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து. டிச., 15: சென்னை சென்ட்ரலிலிருந்து, மதுரை, திருவனந்தபுரத்திற்கு துரந்தோ (இடைநில்லா) ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா துவக்கினார். டிச., 17: மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளின் மூன்று நாள் மாநாடு, முதல்வர் ஜெ., தலைமையில் சென்னையில் நடந்தது. டிச., 20: பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ கணவர் மகாதேவன், சென்னை அடையாறு ஆற்றில் தற்கொலை. டிச., 21: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஒய்.இக்பால், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம். இவருக்குப் பதிலாக தர்மாராவ் தற்காலிகமாக நியமனம். டிச., 22: 2012 சாகித்ய அகாடமி விருதுக்கு திண்டுக்கல் செல்வராஜ் எழுதிய "தோல்' என்ற நாவல் தேர்வு. டிச., 25: சேலம் அருகே மேச்சேரி என்ற இடத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி.
இந்தியா
டிச., 5: "சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு (எப்.டி.ஐ.,) மசோதா எதிர்க்கட்சிகள் மற்றும் வணிகர்களின் எதிர்ப்பை மீறி பார்லிமென்டில் தாக்கல். டிச., 15: இந்தியா வந்த பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், பிரமதர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். டிச., 24: ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், அரசுமுறை பயணமாக இந்தியா வருகை. டிச., 28: டாடா குழுமத்தலைவர் பதவியி லிருந்து ரத்தன் டாடா ஓய்வு. சைரஸ் மிஸ்ட்ரி புதிய தலைவரானார்.
உலகம்
டிச., 4: பிலிப்பைன்சில் வீசிய "போபா' என்ற சூறாவளி புயலால், 300 பேர் பலி. டிச., 9: பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடில்டன் குறித்து, ஆஸி., ரேடியோவில் தவறான தகவல் ஒலிபரப்பானது தொடர்பாக, இந்திய நர்ஸ் டெசிந்தா தற்கொலை. டிச., 15: பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் 5 பேர் உள்பட 8 பேர் பலி. டிச., 20: "மிஸ் யுனிவர்ஸ் 2012' அழகியாக, அமெரிக்காவின் ஒலிவியா கல்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அழகி ஷில்பா சிங் 16வது இடம். டிச., 17: ஜப்பான் பிரதமர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரும், முன்னாள் பிரதமருமான ஹின்சோ அபே வெற்றி பெற்றார். பிரதமராக இருந்த யோஷி ஹூகோ தோல்வி. டிச., 21: "மாயன் காலண்டர்' நிறைவு, சூரிய புயல் பூமியை தாக்கும் என்பதை காரணம் காட்டி உலகம் அழியும் என்ற கருத்து பரப்பப்பட்டது. எதுவும் நடக்கவில்லை. டிச., 23: இத்தாலி பிரதமர் மரியோ மாண்டி, ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பார்லிமென்ட் கலைக்கப்படுவதாக அதிபர் ஜார்ஜியோ அறிவிப்பு. டிச., 26: கஜகஸ்தானில் நடந்த விமான விபத்தில் 27 பேர் பலி.
விளையாட்டு
டிச. 4: மத்திய அரசு விளையாட்டு விதிகளின்படி செயல்பட்ட, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. டிச. 13: பெங்களூருவில் நடந்த பார்வையற்றோர் "டுவென்டி-20' உலக கோப்பை பைனலில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, சாம்பியன். டிச. 17: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. டிச. 22: இரண்டாவது "டுவென்டி-20' போட்டியில், இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரை 1-1 என சமன் செய்தது. டிச. 28: ஆமதாபாத் "டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி, தொடரை 1-1 என சமன் செய்தது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.