அழுத்தாதே எப்1கீ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஆக
2010
00:00

ஏதேனும் இணையதளம் ஒன்றினைப் பார்க்கையில், அதில் எப்1 கீயை அழுத்தவும் என்று செய்தி தரப்பட்டுள்ளதா; உடனே அதனை அழுத்த வேண்டாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை வழங்கியுள்ளது. இதன் மூலம் பல இணைய தளங்கள், கம்பூட்டர் பயன்படுத்துவோரை மோசமான தளங்களுக்கு இழுத்துச் சென்று, அவர்கள் கம்ப்யூட்டரில் பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களைப் பதிக்கின்றன. இதனால் தங்கள் கம்ப்யூட்டர்களில் உள்ள செக்யூரிட்டி சிஸ்டம் செட்டிங்குகளில், அவற்றை "high"  என்ற அளவில் அமைக்குமாறும் மைக்ரோசாப்ட் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ActiveX Controls  மற்றும் Active Scripting ஆகியவற்றைத் தடை செய்திட முடியும். இந்த மால்வேர் பெரும்பாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துவோரையே இலக்காகக் கொண்டு இயங்கு வதாகவும் மைக்ரோசாப்ட் எச்சத்துள்ளது. விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் சர்வர் 2003 ஆகியவற்றைப் பயன்படுத்து வோரே இதற்கு இலக்காகுகின்றனர்.
இந்த மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரில், இணைய தளங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் எப்1 அழுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அழுத்தியவுடன் கம்ப்யூட்டர் ஹைஜாக் செய்யப்பட்டு, மால்வேர் புரோகிராம் பதியப்படுகிறது. இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தீர்வு ஒன்றை வழங்கியுள்ளது. லிங்க் தரப்பட்டாலோ, அல்லது பாப் அப் விண்டோ வந்தாலோ, உடனே CTRL + ALT + DEL கீகளை அழுத்தவும். உடனே கிடைக்கும் கட்டத்தில் Internet Explorer task என்ற பிரிவு அல்லது உங்கள் பிரவுசர் பிரிவினைத் தேர்ந்தெடுத்து டெலீட் கீயினை அழுத்தவும்.பின் மீண்டும் பிரவுசரை இயக்கிப் பார்த்துக் கொள்ளலாம்.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X