புதிய வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஆக
2010
00:00

அவிரா, அவாஸ்ட், நார்டன், ஏவிஜி என எத்தனை இலவச ஆண்ட்டி வைரஸ் பதிப்புகளை மக்கள் பயன்படுத்தி வந்தாலும், இவற்றையும் மீறி ஏதாவது நடந்துவிடுமோ என்று தான் நாம் அஞ்ச வேண்டியதுள்ளது. ஏனென்றால், நாளுக்கு நாள் புதிய கோணங்களில், வடிவங்களில், வைரஸ்கள் உருவாக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதிய வகை ஆண்ட்டி வைரஸ் தொகுப்புமுறை ஒன்றினை அண்மையில் காண நேர்ந்தது. இது அண்மையில் பரவிவரும் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைச் சேர்ந்ததாகும். ஆனால் முற்றிலும் இலவசமே. இதனுடைய பெயர் Panda Cloud AntiVirus. இதன் முதல் சிறப்பு என்னவென்றால், வைரஸ் டெபனிஷன்ஸ் எனப்படும் குறியீடுகள் நம் கம்ப்யூட்டரில் பதியப்படுவதில்லை. அவை பண்டா சர்வரிலேயே இருக்கும். இவை அனைத்தும், இதன் சர்வரிலேயே இருப்பதால், அப்டேட் செய்யப்படுவதும் அங்கேயே தான். எனவே தாமதமாக அப்டேட் என்ற பேச்சிற்கே இடமில்லை. லேட்டஸ்ட் வைரஸ் அப்டேட் நாம் செய்யவில்லையே என்ற பயமும், தூக்கமில்லா இரவுகளும் நமக்கு இல்லை.
இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, பன்னாடுகளில் ஒரு கோடி பேருக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். எனவே எந்த ஒரு கம்ப்யூட்டரில் ஒரு வைரஸ் கண்டறியப்பட்டாலும், உடனே அது பண்டா சர்வருக்கு அனுப்பப்பட்டு, உடனடியாகத் தீர்வு காணப்படுகிறது. வைரஸ் காணப்பட்ட சில நிமிடங்களில் அதனைத் தீர்த்துக் கட்டும் தொகுப்பு தயாராகிவிடுகிறது. எனவே தற்போதைக்குப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்ட்டி வைரஸ் மற்றும் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகவும் சிறந்ததாகவே தெரிகிறது. இலவசம் என்பதால், இறக்கிப் பயன்படுத்திப் பார்க்கலாமே! http://www.cloudantivirus.com/en/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைக் காணலாம். இதற்கான அழகான விளக்க வீடியோவும் இதில் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு.
இல்லை எனக்கு வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தான் வேண்டும் என நீங்கள் விரும்பினால், பத்து கோடிப் பேருக்கு மேல் பயன்படுத்தும் அவாஸ்ட் (Avast)  மற்றும் அதே போலப் பலரால் பயன்படுத்தப்படும் அவிரா (Avast)  ஆகிய தொகுப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். அவாஸ்ட் தேவைப்படுபவர்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி http://www.avast.com/ freeantivirusdownload. அவிரா வேண்டும் என்றால் http://www.softpedia.com/prog Download/AntiVirPersonalEditionDownload6527.html என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ச.விஜயராகவன் - சென்னை,இந்தியா
15-செப்-201013:29:38 IST Report Abuse
ச.விஜயராகவன் In all articles on computer subject, for easy/clear understanding, it is better to give the actual/ technical names in English within bracket instead of furnishing the names in Tamil only as ஆட் ஆன்(Add-on ) and கிளவுட் கம்ப்யூட்டிங் (cloud computing). Covered subjects in all issues are interesting and very useful to all sections of the society and the mode of providing the complex information of computer operation in Tamil with simple words is excellent. S.VIJAYARAHGAVAN
Rate this:
Share this comment
Cancel
பாலாஜி - Bangalore,இந்தியா
19-ஆக-201010:42:32 IST Report Abuse
பாலாஜி I tried to download the "Cloud Antivirus" from the given link. But it is not downloading. It showing error messing when i click the download button.
Rate this:
Share this comment
Cancel
karthik - ஆவடி,இந்தியா
17-ஆக-201000:03:58 IST Report Abuse
karthik தினமலர் பயன் உள்ள பத்திரிக்கை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X