கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஆக
2010
00:00

கேள்வி: கம்ப்யூட்டர் மலரின் பழைய மலர்கள் விலைக்குக் கிடைக்குமா? கம்ப்யூட்டர் மலர் மட்டும் டவுண்லோட் செய்து வைத்துப் பயன்படுத்த முடியுமா? இதற்கு என்ன வழி?
–ஆ. மணிகண்டன், திருப்பூர்
பதில்:
இது போன்ற நிறைய கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் தினமலர் அலுவலகத்திற்கு வருகின்றன. பழைய இதழ்கள் எனத் தனியே விற்பனைக்கு இல்லை. கம்ப்யூட்டர் மலரின் பழைய பதிப்புகள், இணையத்தில் கிடைக்கின்றன. இங்கு சென்று நீங்கள் அதனை முழுமையாகவோ அல்லது உங்களுக்குத் தேவையான பகுதியையோ அச்சடித்து எடுத்துக் கொள்ளலாம். அல்லது டவுண்லோட் செய்து கொள்ளலாம். முதலில் www.dinamalar.com  என்ற தினமலரின் இணைய தளம் செல்லுங்கள். முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள டேப்களில், புத்தகங்கள் என்ற பகுதியில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் கீழ்விரி பட்டியலில் கம்ப்யூட்டர் மலர் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது அந்த வார கம்ப்யூட்டர் மலர் செய்திகள் இடது பக்கம் பட்டியலாகக் கிடைக்கும். வலது புறமாக கம்ப்யூட்டர் மலரின் நூல் வடிவம் இ–மலராக இருக்கும். இதனைக் கிளிக் செய்தால், அந்த வார கம்ப்யூட்டர் மலர் புத்தக வடிவில், இ–நூலாகக் கிடைக்கும். இதன் கீழாக முந்தைய கம்ப்யூட்டர் மலர் என்று ஒரு வரி காணப்படும். இங்கு கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால், இன்னொரு தளத்திற்கு நீங்கள் செல்வீர்கள். இங்கு பழைய கம்ப்யூட்டர் மலர்கள், வரிசையாக மாத வாரியாக நாளிடப்பட்டு இருக்கும். அருகே அதனை முழுமையாக பிரிண்ட் செய்வதற்கு கிளிக் செய்திடும் இடமும், முழு மலரையும் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திடும் இடமும் இருக்கும். இதில் தேவையானதைக் கிளிக் செய்து உங்களுக்கானதைப் பெறலாம். எதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.


கேள்வி: மொபைல் போன் குறித்து படிக்கும்போது ஜெயில் பிரேக்கிங் என்று படித்திருக்கிறேன். இதற்கும் சிறைச் சாலைக்கும் என்ன சம்பந்தம்?
–மா. இளவரசன், மதுரை
பதில்:
ஒரு சம்பந்தமும் இல்லை. டிஜிட்டல் சாதனம் ஒன்றில், அதனை வடிவமைப்பவர், தான் விரும்பும் வகையில் சில வரையறைகளை அமைத்திருப்பார். சாதாரணப் பயன்பாட்டில், அவற்றை மீறிப் பயன்படுத்த முடியாது. மீறினால் வரும் விளைவுகள் பல வேளைகளில் அந்த சாதனத்தையே முடக்கிவிடும்.
மொபைல் போனைப் பொறுத்தவரை ஐ–போன் தொடர்பாகத்தான் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. ஐ–போனை,மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனம் வழியாகத்தான் வாங்க வேண்டும். அப்போது அந்த நிறுவனத்தின் சேவையை மட்டுமே பயன்படுத்தும்படி, ஆப்பிள் நிறுவனம் அதனை வடிவமைத்துத் தருகிறது. அமெரிக்காவில் ஏ.டி. அன்ட் டி நிறுவனம் இதனை விற்பனை செய்வதால், இந்த நிறுவன சேவை மட்டுமே இதில் மேற்கொள்ள முடியும். அங்கிருந்து கொண்டு வரப்படும் போனில், நம் இந்திய நிறுவன சிம் கார்டைப் பயன்படுத்திப் பேச முடியாது. இதனால் சேவை வழங்கும் நிறுவனம், குறிப்பிட்ட கட்டணத்தைக் கட்டாயமாக, போன் வாங்குவோரின் தலையில் சுமத்திவிடும் வாய்ப்பு உண்டு.
இந்த தடையை உடைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளே ஜெயில் பிரேக்கிங் என அழைக்கப்படுகிறது. இதில் ஈடுபடுபவர்கள், இதற்கான சாப்ட்வேர் புரோகிராம்களை எழுதி, போனில் பதிந்து தருவார்கள். அதற்கான கட்டணத்தையும் உங்களிடமிருந்து வசூல் செய்திடுவார்கள். ஆனால் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தரும் அப்டேட்டுகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இல்லை என்றால், அந்த தடையையும் முறியடிக்க பணம் செலுத்தி ஜெயில் பிரேக்கிங் சாப்ட்வேரினைப் பெற வேண்டும்.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா! அமெரிக்க அரசாங்கம் அண்மையில் சில பிரிவினர், இது போன்ற போன்களில் ஜெயில் பிரேக்கிங் முயற்சிகளை மேற்கொள்ள சட்ட ரீதியாக அனுமதி அளித்துள்ளது.


கேள்வி: என் சகோதரரின் கம்ப்யூட்டரில், யூசர் அக்கவுண்ட் இடத்தில், சினிமா நடிகைகளின் படத்தை வைத்து, அந்த கம்ப்யூட்டரை என்னைப் பயன்படுத்தும்படி கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளார். இதனை எப்படி நீக்குவது? புதிய வேறு படத்தை எப்படி போடுவது?
– பெயர் தராத வாசகி, விழுப்புரம்
பதில்
: ஸ்டார்ட் பட்டன் அழுத்துங்கள். செட்டிங்ஸ் பிரிவு சென்று கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில், யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவிற்குச் செல்லவும். எந்த அக்கவுண்ட்டிற்கான படத்தை மாற்ற வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Change the picture  என்பதில் கிளிக் செய்திடவும். இனி நீங்கள் விரும்பும் படத்தினை, அது இருக்கும் ட்ரைவ், போல்டர் சென்று தேர்ந்தெடுத்து, கிளிக் செய்திடவும். படம் ஹைலைட் ஆன பின்னர், பட்டனை அழுத்தவும். கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமலேயே, புதிய படம் இருப்பதைக் காணலாம்.


கேள்வி: இணையதளம் ஒன்றைப் பார்க்கையில், அது குறித்த செய்தியினை, நண்பருக்கு இமெயிலில் அனுப்ப என்ன செய்திட வேண்டும். அதே போல இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வேறு ஒரு தளத்திற்கான லிங்க்கினை, மெயிலில் அனுப்ப என்ன செய்திட வேண்டும்?
–செ.மா. துரை அரசன், சென்னை
பதில்
: நல்ல கேள்வி. பலர் இது போன்ற சந்தர்ப்பங்களைத் தாங்கள் பிரவுஸ் செய்திடுகையில் சந்தித்திருப்பார்கள். தங்கள் நண்பர்களுடன் நல்ல விஷயங்களை, தாங்கள் ரசித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது நல்ல ஒரு பண்பாடு. இதனை இரு வழிகளில் மேற்கொள்ளலாம். இரண்டுமே எளிதுதான். முதலில் அந்த தளத்திற்கான முகவரியை காப்பி செய்து மெயில் செய்தியில் ஒட்டிவிடும் வழி. இதற்கு உங்கள் வெப் பிரவுசரின் அட்ரஸ் பார் சென்று, அட்ரஸ் முழுவதையும் அப்படியே காப்பி செய்து, பின்னர் இமெயில் புரோகிராமினைத் திறக்கவும். மெசேஜ் விண்டோ ஒன்றைத் திறந்து அங்கே, செய்திக்கான இடத்தில் பேஸ்ட் செய்திடவும். இதன் பின் நீங்கள் சேர்க்க வேண்டிய செய்தியை சேர்க்கலாம். நீங்கள் பேஸ்ட் செய்துள்ள முகவரிக்கான லிங்க்கில் கிளிக் செய்து பார்க்கச் சொல்லலாம்.
அடுத்ததாக, நீங்கள் ஒரு இணைய தளத்தில் இருந்து, அதில் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஓர் இணையப் பக்கத்திற்கான லிங்க் தரப்பட்டிருந்தால், அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Copy Shortcut AÀ»x Copy Link Location  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த லிங்க்கிற்கான முகவரி காப்பி செய்யப்பட்டிருக்கும். பின்னர், முன்பு கூறியதைப் போல, இமெயில் புரோகிராம் திறந்து, மெசேஜ் விண்டோவில் பேஸ்ட் செய்திடவும். இணைய தளம் ஒன்றில், படம் அல்லது போட்டோவிற்கான லிங்க் இருந்தாலும் அதற்கும் இதே வழிகளைப் பின்பற்றலாம். அல்லது படத்திலேயே அதற்கான முகவரி பதிக்கப்பட்டிருந்தால், அதன்மீது ரைட் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.


கேள்வி: இமெயில் முகவரியில் பெயர் தெரியாமல் அமைக்க முடியுமா? ஆனால் பெயராக ஒரு எழுத்தேனும் அமைக்க வேண்டும் என என் நண்பர் கூறுகிறார்.
–டி. இம்மானுவேல், காரைக்கால்
பதில்:
அதாவது ஏதோ ஒரு கேரக்டர் பெயரளவில் இருக்க வேண்டும். ஆனால் அது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. இதுதானே நீங்கள் கேட்பது. செய்திடலாம். பெயர் அமைக்கும் இடத்தில் கர்சரை வைத்துக் கொண்டு, ஆல்ட் கீ அழுத்தி, நம்லாக் பேடில் உள்ள கீகள் வழியாக 0160 என டைப் செய்திடவும். இதனை இமெயில் முகவரியாக அமைக்க வேண்டும் எனில், மேலே சொன்ன படி டைப் செய்து, தொடர்ந்து @.gmail.com என டைப் செய்து அமைக்கலாமே. இந்த இடத்தில் எந்த சர்வரின் பெயரையும் வைத்துக் கொள்ளலாம். மீண்டும் உங்கள் இமெயில் முகவரியை அமைக்கும்போதும், பயன்படுத்தும் போதும் நினைவாக ஆல்ட்+0160 கொடுக்க வேண்டும்.


கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். இதில் ஸ்டார்ட் மெனுவில் உள்ளதை, எடுத்துக்காட்டாக, எச்ட்ஞுண் என்று இருப்பதை உணtஞுணூtச்டிணட்ஞுணt என மாற்ற விரும்புகிறேன். முடியுமா?
–தே. சுந்தரசாமி, வெளிப்பாளையம்
பதில்:
முடியுமே. ஸ்டார்ட் கிளிக் செய்து எச்ட்ஞுண் என்பதில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ரீநேம் என்று இருப்பதில் கிளிக் செய்து கிடைக்கும் கட்டத்தில் நீங்கள் விரும்பும் பெயரை டைப் செய்திடவும். இதனை மட்டுமல்ல, டாகுமென்ட் பைல், படங்கள், மியூசிக், வீடியோ, கேம்ஸ், ஏன் உங்கள் கம்ப்யூட்டரின் பெயரைக் கூட இதே முறையில் மாற்றலாம்.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாஸ்கர் KG - நேஅர்chennai,இந்தியா
22-ஆக-201023:53:36 IST Report Abuse
பாஸ்கர்  KG (விண்டோஸ் Xp IE 7.0 ),இன்டர்நெட் icon always glows ,Data sent/recive is more than 10,000 pockets during that time no browsing is on, no application is minimised or else ! what does it mean?
Rate this:
Share this comment
Cancel
ஜான் - chennai,இந்தியா
22-ஆக-201021:46:47 IST Report Abuse
ஜான் You can switch the virtual memory drive from c drive to D drive. For that.. right click mycomputer> system properties>advanced tab > change.. button and then change the virtual memory to d drive. restart the system and delete the C drive pagefile.sys file from c drive..
Rate this:
Share this comment
Cancel
சித்திவினாயகம்.N - kattumannarkoil,இந்தியா
22-ஆக-201013:40:12 IST Report Abuse
சித்திவினாயகம்.N என் லேப்டாபில் லினக்ஸ் சர்வரை பயன்படுத்த விரும்புகிறேன். எவ்வாறு செய்ய வேண்டும் , லினக்ஸ் எங்கிருந்து டவுன்லோட் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X