சாமி மாடுகள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜன
2013
00:00

"உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்,' என்றான், எட்டயபுரத்து முண்டாசுக் கவிஞன். உழைப்பிற்கும், உழவுக்கும் பெயர் போன தமிழகத்தில், தை மாதத்திற்கு தரும் மரியாதையே தனி.
"வந்தாரை மட்டுமல்ல, வாழ வைப்போரையும் வழிபடுபவன் தமிழன்,' என்பதற்கு, தை பொங்கல்தான், சரியான உதாரணம். ஆண்டுதோறும் நமக்காய் சுழன்று உழைக்கும் மாட்டுக்கு, பொங்கல் வைத்து வழிபடும் மனிதாபிமானம், வேறு எங்கு உண்டு?
அந்த அளவிற்கு, மண்ணிற்கு அடுத்தபடியாக, மாடுகள் மீது விவசாயிகள் உயிரை@ய வைத்துள்ளனர். அதே நேரத்தில், "தெய்வம்' என்று வரும் போது, தன் உயிரையும் பணையம் வைக்க, விவசாயிகள் தயங்குவதில்லை. அந்த அளவிற்கு, இயற்கை மீது, தெய்வம் மீது, அவர்களுக்கு நம்பிக்கை அதிகம்.
அதனால்தான், தங்கள் உயிரினும் மேலான கன்றுகளை, கடவுளுக்கு தானம் செய்யும் பழக்கம், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ளது. அங்குள்ள ஸ்ரீ நந்தகோபாலன் கோயிலுக்கு, நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழு என்ற, மற்றொரு பெயர் உண்டு. கோயிலுக்கு பெயர் இருந்தாலும், சுவாமி சிலை இல்லை. ஆச்சரியமாக இருக்கிறதா? அங்குள்ள மாடுகள் தான், சுவாமிகள்; அவற்றைத்தான் பக்தர்கள் வணங்குகின்றனர்.
200 ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவில்இருந்து இங்கு வந்த ஒரு பிரிவினர், இக்கோயில் வழிபாட்டை, வழக்கப்படுத்தினர். அவர்கள் வீட்டில், தை முதல் நாளில் ஈன்றெடுக்கும் கன்றுகளை, கோயிலு<க்கு தானம் செய்வது வழக்கம். ஒரு பிரிவினர் மட்டுமே தொடர்ந்த இப்பழக்கத்தை, நாளடைவில் அனைவரும் பின்பற்றத் தொடங்கினர். அந்தக் கன்றுகள், மாடுகளாய் மாறும் போது தெய்வமாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தானம் செய்யும் கன்றுகள், தெய்வமாய் அவதாரம் எடுப்பதால், அதை அளிப்பவரின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மாட்டுப் பொங்கல், இங்கு கோலாகலமாய் நடக்கும். அன்று, பட்டத்துமாடு அலங்கரிக்க பட்டு, பொங்கல் விழா கொண்டாடப்படும்.
"பட்டத்துமாடு' எங்கிருந்து வரும் என்கிறீர்களா? கோயிலில் விடப்படும் கன்றுகளில் இருந்து தான், பட்டத்துமாடு தேர்வு நடக்கிறது. "தை' முதல் நாளில், எத்தனை கன்றுகள் பிறந்து விடப்போகிறது?, என்ற சந்தேகம், உங்களுக்கு எழலாம்.
அதற்கும் பதில் இருக்கிறது இங்கு; கோயிலில் உள்ள 200க்கும் மேற்பட்ட மாடுகள் தான், அந்த கேள்விக்குரிய பதில். இங்குள்ள மக்களுக்கு தெய்வம் மீது எவ்வளவு பக்தி இருக்கிறதோ, அதே அளவு, பக்தர்களின் நம்பிக்கை மீது, தெய்வத்திற்கும் கனிவு இருக்கிறது. அதனால்தான், தை முதல் நாளில், இங்குள்ள பெரும்பாலான பசுக்கள், கன்று ஈன்று வருகின்றன.
மாடுகளுக்கு பொங்கல் வைத்து பெருமை சேர்க்கும் நம் வழக்கத்திலிருந்து ஒரு படி மேலே போய், மாடுகளையே தெய்வமாக்கி வழிபட்டு வரும் மக்களின் நம்பிக்கையை பாராட்டுவோம்.
-கம்பன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.