கொரில்லா கிளாஸ் 3
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
00:00

உங்களிடம் ஸ்மார்ட் போன், லேப்டாப் அல்லது போர்ட்டபிள் மீடியா பிளேயர் என ஏதாவது ஒன்றை வைத்திருந்தால், கொரில்லா கிளாஸ் என்னும் ஸ்கிரீனைக் கொண்டிருப்பீர்கள். இது என்ன பெயர்? கொரில்லா குரங்குக்கும், ஸ்கிரீன் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதா?
கொரில்லா கிளாஸ் என்ற ஒரு ஸ்கிரீன் வகையை கார்னிங் (Corning) நிறுவனம் வடிவமைத்துத் தருகிறது. இரசாயனக் கலவை மூலம் கிளாஸ் உறுதிப்படுத்தப்பட்டு, மெலிதாகவும், தடிமன் குறைவானதாகவும், பழுது அடையாத வகையிலும் உருவாக்கப்படுகிறது. இதனுடைய முக்கிய அம்சமே உறுதியாகவும், அதே சமயத்தில் தடிமன் குறைவாகவும் இருப்பதுதான். கார்னிங் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது உலகெங்கும், நூறு கோடி சாதனங்களுக்கு மேல் கொரில்லா கிளாஸ் பயன்படுத்துகின்றன.
இந்த ஆண்டு, கார்னிங், கொரில்லா கிளாஸ் வரிசையில் தன் மூன்றாவது மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. சென்ற ஆண்டு கருத்தரங்கில் காட்டப்பட்ட, கொரில்லா கிளாஸ் 2 முதலில் வந்ததைக் காட்டிலும் மெலிதாக இருந்தது. ஆனால் ஸ்கிராட்ச் பெறாமல் சமாளிக்க இயலவில்லை. தற்போது வர இருக்கும் கொரில்லா கிளாஸ் 3, இன்னும் மெலிதாக இருப்பதுடன், எந்த கீறலையும் ஏற்படுத்தாது. இந்த தன்மையை ஆங்கிலத்தில் Native Damage Resistance (NDR) என அழைக்கின்றனர். இந்த கிளாஸ் உடைய வேண்டும் என்றால், வழக்கமான அழுத்தம் போல மூன்று மடங்கு கூடுதலாக அழுத்தம் தேவையாய் இருக்கும். இருப்பினும் நாம் யாரும் இதனை நம் மொபைல் போன்களில் பரிசோதனை செய்து பார்க்கத் தயாராய் இருக்க மாட்டோம். எதற்கும் ஸ்கிராட்ச் விழாமல் திரை இருக்க வேண்டும் என்றால், இதற்கென விற்பனை செய்யப்படும் ஸ்கிராட்ச் கார்ட் வாங்கிப் பயன்படுத்த வேண்டியதுதான்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.