பர்சனல் பிரேக்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
00:00

மிருகங்கள் எப்படிக் குரல் எழுப்பும்? என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள இணைய தளம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப் பயனுள்ள தளம்.தகவலுக்கு நன்றி.
கே.சித்தார்த்தன், தாம்பரம்.

எங்கே விண்டோஸ் 7 சிஸ்டத்தை மறந்துவிட்டீர்களோ? என்று எண்ணியிருந்தேன். நல்ல டிப்ஸ் வழங்கியுள்ளீர்கள். தொடர்ந்து இந்த சிஸ்டத்திற்கான டிப்ஸ் தரவும்.
என். கிருஷ்ண சீலன், புதுச்சேரி.

2012ல் மொபைல் உலகம் என்ற கட்டுரை, சென்ற ஆண்டில் பரபரப்பாகப் பேசப்பட்ட, செயல்பட்ட தொழில் நுட்பம் மற்றும் சாதனங்களின் தொகுப்பாக இருந்தது. தகவல் தொகுப்பாக எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டேன்.
சி. தமிழ் மாறன், மதுரை.

16.5 கோடி மொபைல் இன்டர்நெட் பயனாளர் என்ற செய்தி சிறிய தகவல் என்றாலும், அதற்குத் தரப்பட்டுள்ள படம் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
என்.சதீஷ், காரைக்கால்.

"டிஜிட்டல் கிடங்கு' உங்கள் கட்டுரைத் தலைப்புகள் எல்லாம் புதுக்கவிதையாக மாறி வருகின்றன. ஆப்பிள் தான் இந்த அப்ளிகேஷன் ஸ்டோர் கலாச்சாரத்தை ஏற்படுத்தியது. அதனால், மேலோங்கி நிற்கிறது.
கே.விஸ்வேஷ், ஓசூர்.

பிளாஷ் ட்ரைவில் ஒரு டெரா பைட்டா? தகவல் அறிந்ததும் ஆச்சரியம்; விலையைப் படித்ததும் அதிர்ச்சி. இருப்பினும் கையளவில், ஒரு டெரா பைட் தகவல் என்பது அறிவியலின் சாதனையே.
க. முத்தமிழ், சிதம்பரம்.

இன்னும் நிறைய ஈஸ்டர் எக்ஸ் வேடிக்கைக் குறிப்புகளைத் தரவும். கூகுள் தளத்தில் விளையாடிப் பார்த்து வியந்தோம்.
கே. என். சிக்கந்தர், உத்தமபாளையம்.

கூகுள், சாம்சங் மற்றும் நோக்கியா நிறுவனங்களின் போன்கள், அனைத்துப் பிரிவினரும் வாங்கி இணையம் பயன்படுத்தும் வகையில் அமைந்துவிட்டால், நிச்சயம் நம் கலாச்சாரத்தில், பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படும்.
எஸ். பூவரசி, கோவை.

கட்/டெலீட் கட்டளை வேறுபாடு விளக்கம் நன்றாகத் தரப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியரின் விளக்கவுரையாக இருக்கிறது. நன்றி.
ஆ.ஹேமலதா, திருப்பூர்.

பைல் இறக்க வேண்டும் எனில், எந்த அளவில் இருந்தாலும் இறக்கிக் கொள்வோம். இருப்பினும் சில பைல்கள் அதிக பைட்ஸ் கொள்ளும் எனில் விலக்கிடுவோம். இதற்கு நீங்கள் தந்துள்ள "கெட் பைல் சைஸ்' புரோகிராம் நிச்சயம் பயன்படும்.
டி.கண்ணன், விழுப்புரம்.

கேள்வி - பதில் பகுதியில் பிரைவேட் பிரவுசிங் குறித்துத் தந்த விளக்கம் எச்சரிக்கை போலவும் அமைந்துள்ளது. நாசூக்காக இது தேவை என வலியுறுத்தியது நல்லது.
கா. சம்பந்தம், கோவை.

இருபது கண்டுபிடிப்பினைப் பட்டியலிடச் சொல்லிக் கேட்டால், பத்தோடு நிறுத்திக் கொண்டுள்ளீர்கள். இன்னும் சிலவற்றைக் கூறி இருக்கலாம். மொபைலில், வாகனங்களில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள் கூறி இருக்கலாமே.
சி.ஆர். சௌம்யா துரை, சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.