ஸ்பேம் மற்றும் ஸ்கேம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
00:00

அண்மையில் பொறியியல் கல்லூரி ஒன்றில், ஐ.டி. நிறுவனம் நடத்திய நேர்முகத் தேர்வில் ஸ்கேம் மற்றும் ஸ்பேம் குறித்து கேள்வி கேட்டு, அவற்றிற்கிடையே உள்ள அடிப்படை வேறுபாடு என்ன என்று கேட்டுள்ளனர். மாணவர்கள் பலர் இரண்டும் ஒன்றுதான் எனப் பதில் அளித்துள்ளனர். சிலர் தெளிவாக, இவற்றின் இடையே இருக்கும் வேறுபாடு குறைந்து வருகிறது. இரண்டினையும் ஒன்றாகவே கருதலாம் என்று பதில் அளித்திருக்கின்றனர். இதில் கலந்து கொண்ட ஒருவர் எனக்குக் கடிதம் எழுதி, சரியான தகவலைத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆங்கில அகராதி ஒன்றில் முதலில் இதற்கு விளக்கம் தேடினேன். ஸ்கேம் (scam) என்பதை மோசடி அல்லது செயலின் உண்மைத் தன்மையை மறைக்கின்ற வேலை என்று தரப்பட்டுள்ளது. இது நவீன தொழில் நுட்பம் நமக்குக் கிடைக்கும் முன்னரே தரப்பட்ட விளக்கம். சில வர்த்தகர்கள் இதனையே தங்கள் தொழிலின் அடிப்படையாகக் கொண்டு இயங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. தொழில் நுட்பம் பெருகிய பின்னர், இந்த சொல், புதிய பொருளைக் கொண்டதாக ஆகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஸ்பேம் (spam) என்ற சொல் பரவத் தொடங்கியது. குறிப்பாக, இது ஒரு தகவல் தொழில் நுட்பச் சொல்லாகவே புழக்கத்தில் உள்ளது. நாமாகக் கேட்டுப் பெறாமல், தாமாகவே, வர்த்தக நோக்கில், ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பப்படும் மின் அஞ்சல் என இதற்கான விளக்கம் நிலவி வருகிறது. இந்த விளக்கப்படி பார்த்தால், சட்டத்திற்குப் புறம்பாக இதில் எதுவும் இல்லை என்ற தொனி உள்ளது.
இந்த ஸ்பேம் எப்படி செயல்படுகிறது என்று பார்க்க, உங்கள் மெயில் அக்கவுண்ட் ஒன்றைத் திறக்கவும். அதில் ஸ்பேம் போல்டர் என்ற போல்டர், இன்பாக்ஸ், சென்ட் மெயில் போன்றவற்றுடன் இருக்கும். சிலருக்கு நாள் தோறும் நூற்றுக் கணக்கில் ஸ்பேம் மெயில்கள் வரும். இந்த பெட்டியைத் திறந்து ஒன்றைத் திறந்து பார்த்தால், அதில் நமக்குத் தெரிந்த அல்லது தெரியாத இணைய தளம் ஒன்றுக்கான லிங்க் தரப்பட்டிருக்கும். சட்டரீதியான அல்லது சட்டத்திற்குப் புறம்பான இணைய தளத்தி லிருந்து விளம்பரம் ஒன்று தரப்பட்டிருக்கும். அல்லது ஏதேனும் ஒரு ஆப்பிரிக்க நாடு ஒன்றின் நகர் பெயர் போட்டு, அதில் உள்ள கோடீஸ்வரர் இறந்துவிட்டதாகவும், பணம் எக்கச்சக்கமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் பேங்க் அக்கவுண்ட் எண் கொடுத்தால், கணிசமாக கமிஷன் கிடைக்கும் என ஆசை காட்டும் வாசகங்கள் கொண்ட மெயில் இருக்கலாம். அல்லது நான் வீட்டில் இருந்தே பல டாலர்கள் சம்பாதிக்கிறேன். நீங்களும் சம்பாதிக்கலாமே. வழிகள் தெரிய கிளிக் செய்திடுங்கள் என ஏதேனும் ஒரு இணைய தள முகவரி தரப்பட்டிருக்கும். வயாகரா, லாட்டரி பரிசு மற்றும் கோடிக்கணக்கில் பணம் தரும் வேலை வாய்ப்பு ஆகியவை ஸ்கேம் மற்றும் ஸ்பேம் வகை என இரண்டுமாக இயங்கும்.
இவற்றிற்கு பலியாகும் மக்களின் முதல் தவறு பேராசையே. அடுத்ததாக, கோபித்துக் கொள்ளக் கூடாது, முட்டாள்தனம் தான். மனிதன் என்ற வகையில் நாம் எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் பேராசைக்கு அடிமையாகிறோம். அதனால் தான் இது போன்ற ஸ்பேம் மற்றும் ஸ்கேம் வழி ஈடுபடுபவர்கள், பணம் சம்பாதிக்கிறார்கள்.
இதிலிருந்து தப்புவது எப்படி? மேலே கூறப்பட்ட இலக்கணப்படி உங்களுக்கு சில இமெயில்கள் வருகின்றனவா? இணைய தள முகவரிகளில் கிளிக் செய்தால், பணம் கிடைக்கும் என செய்தி கிடைக்கிறதா? உடனே அதனை ஸ்பேம் எனக் குறிக்கவும். உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராம், அந்த முகவரியினைக் குறித்துக் கொண்டு, அதன் பின்னர் வரும் மெயில்களை ஸ்பேம் போல்டருக்குத் தானாக அனுப்பிவிடும்.
இன்னொரு நல்ல வழியும் உண்டு. எந்த மெயில் அல்லது இணைய தளம் கேட்டாலும், உடனே சிந்திக்காமல், உங்கள் இமெயில் முகவரியைக் கொடுக்கும் பழக்கத்தினை நிறுத்துங்கள். இது எல்லா தளங்களுக்கும் பொருந்தாது. சில தளங்கள், உண்மையான தளங்களாக இருக்கும். அதில் நம் இமெயில் முகவரியினைத் தருவது நமக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.
ஒரு சில தளங்கள், உங்களிடம் இமெயில் முகவரியினை வாங்கிக் கொண்டு, பின் அவற்றை மற்ற தளங்களுக்குக் கொடுக்கும். திடீரென ஒரு நாள், உங்களுக்கு ஏகப்பட்ட எண்ணிக்கையில் பலவகையான ஸ்பேம் மெயில்கள் வரத் தொடங்கும். இந்த வகையில், மொத்தமாக மின்னஞ்சல் முகவரிகளை விற்பனை செய்திடும் அமைப்புகளும் உண்டு. இவற்றிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல், நம் கம்ப்யூட்டரும் நம் தனி நபர் தகவல்களும் பிறரின் கைகளில் சென்று, நமக்கு இழப்பைத் தரும் சூழ்நிலைகள் உருவாகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X