இந்த வார டவுண்லோட் - கிராப்பர் - ஸ்கிரீன் ஷாட் புரோகிராம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
00:00

தேவைப்படும் திரைக் காட்சிப் பகுதிகளை மட்டும் காப்பி செய்து, காப்பி செய்யப்பட்ட பகுதிகளைத் தேவையான இடத்தில் ஒட்டிக் கொள்ளும் வசதியையும், மேலும் பல கூடுதல் வசதிகளையும் தருகிறது கிராப்பர் என்னும் ஸ்கிரீன் ஷாட் புரோகிராம்.
திரைக் காட்சிகளை அப்படியே படமாகக் கொள்ள, நாம் பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தி, பின் இமேஜ் புரோகிராம் ஒன்றைத் திறந்து அதில் பேஸ்ட் செய்கிறோம். அதன் பின்னர், அதில் தேவைப்படும் பகுதியைத் தேர்ந்தெடுத்து, காப்பி செய்து, மீண்டும் தனியாகப் பேஸ்ட் செய்து, பைலாக உருவாக்கு கிறோம். பின்னர், இந்த பைலை தேவைப் படும் இன்னொரு டாகுமெண்ட் அல்லது பட பைலில் ஒட்டி பயன்படுத்துகிறோம்.
இந்த செயல்பாட்டினை மிக எளிதாக மேற்கொள்ளும் வகையில் நமக்குக் கிடைக் கும் புரோகிராம் கிராப்பர் (Cropper). இதனை பிரையன் ஸ்காட் (Brian Scott) என்பவர் வடிவமைத்து வழங்கியுள்ளார். http://cropper. codeplex.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. மிக எளிதாக இந்த தளத்திலிருந்து கிராப்பர் புரோகிராமினை தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்கையில் blocked என்ற செய்தி கிடைத்தாலும், “run anyway” என்பதனை அழுத்தி செட் அப் செய்திடலாம். இதில் எந்த விதமான வைரஸ் அல்லது மால்வேர் தொகுப்பும் இல்லை எனப் பயன்படுத்தியவர்கள் கூறி உள்ளனர்.
இன்ஸ்டால் செய்து, புரோகிராம் பட்டியலிலிருந்து இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தவுடன், டாஸ்க் பாரில் இதற்கான ஐகான், சிறிய கூட்டல் குறியுடன் பெட்டி ஒன்றுடன் காட்சி அளிக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால், கிராப்பர் இயங்கத் தொடங்கும். இப்போது, கிராப்பர் ஒரு சிறிய பாக்ஸை உங்களுக்குக் காட்டும். இதில் மவுஸின் இடது பட்டனை அழுத்தியவாறே, பாக்ஸை இழுத்துச் செல்லலாம். அதில் தரப்பட்டி ருக்கும் பட்டன்களை அழுத்தில், பாக்ஸை சிறியதாகவோ, பெரியதாகவோ மாற்றிக் கொள்ளலாம். திரையில் எந்த இடத்தில் உள்ள காட்சி அல்லது டெக்ஸ்ட் தேவையோ அங்கு இழுத்துச் சென்று, பின்னர் என்டர் அழுத்தினால், அந்த பாக்ஸ் அமையும் இடத்தில் காட்டப்படுவது ஸ்கிரீன் ஷாட்டாக எடுக்கப்பட்டு பைலாக மாற்றப்பட்டு, My Documents டைரக்டரியின் கீழ் Cropper Captures என்ற போல்டரில் சேவ் செய்யப்படும்.
இந்த அவுட்புட் வழியை வேறு வகையில் மாற்ற வேண்டும் எனில், கிராப்பர் பாக்ஸ் உள்ளாக ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் பட்டியலில் இருந்து தேவை யானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கீழே காட்டியுள்ளபடி ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.

BMP:






பிட்மேப் இமேஜாக ஸ்கிரீன் ஷாட் தேவை எனில், இதனைத் தேர்ந்தெடுக்கலாம். இது பழைய இமேஜ் பார்மட்.

Clipboard:






இதனைத் தேர்ந்தெடுத்தால், குறிப் பிட்ட ஸ்கிரீன் ஷாட் பகுதி கிளிப் போர்டுக்குச் செல்லும். இதிலிருந்து அதனை நீங்கள் விரும்பும் புரோகிராமில் பதிந்து இயக்கலாம்.

JPEG:






இது பலரும் பயன்படுத்தும் இமேஜ் பார்மட். இதன் தன்மையை 10% முதல் 100% வரை இருக்குமாறு அமைத்துக் கொள்ளவும் இதில் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.

PNG:






இந்த பார்மட் அமைப்பைத் தற்போது அனைவரும் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். ஜேபெக் பைலின் தன்மை மற்றும் பண்புகள் இதில் உள்ளன. ஜேபெக் அளவில் பரவலாக இல்லை என்றாலும், இந்த பார்மட் டையும் அதிகமாகப் பயன்படுத்துவோர் உள்ளனர்.

Printer:






இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தவுடன், பிரிண்டர் டயலாக் பாக்ஸ் திறக்கப்பட்டு, கிராப்பர் காப்பி செய்த இமேஜ் அச்சடிக்கப்படும்.
இதே மெனுவின் மூலம், நாம் ஸ்கிரீன் ஷாட் போல்டரில் உள்ள மெனுவினைத் திறந்து இயக்கலாம். கிராப்பர் விண்டோவின் வண்ணத்தினை மாற்றலாம். மேலே காட்டப்பட்டுள்ள இதன் இணைய தளத்தில் இன்னும் நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X