கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
00:00

கேள்வி: எனக்கு வருகிற இமெயில்கள் சிலவற்றில், என்னுடைய இமெயில் முகவரி இல்லை. ஆனால், அவை எப்படி எனக்கு வருகின்றன என்று தெரியவில்லை. இதற்கான காரணம் என்ன?
சி. பிரகாஷ், தேனி.
பதில்:
கவலைப்படாதீர்கள். இது நீங்கள் செய்த தவறு இல்லை. மின் அஞ்சல் வருகையில் அதில் உள்ள To: பகுதியை மட்டும் நீங்கள் பார்த்து இந்த சந்தேகத்தினைக் கொண்டிருப்பீர்கள். அதே அஞ்சலில் Bcc: என்று ஒரு பீல்டும் உள்ளது. அதன் செயல்பாடு மற்றும் பயன்களை உங்களுக்காகத் தருகிறேன்.
மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்படுகையில் பீல்டில், அந்த அஞ்சல் யாருக்கு எழுதப்படுகிறதோ, அவரின் மின்னஞ்சல் முகவரி எழுதப்பட்டிருக்கும். அத்துடன் அதனைப் பெறுபவர் அறியாமல் வேறு சிலருக்கும், அதே அஞ்சலை அனுப்பலாம். அப்படிப் பெறுபவர்களின் மெயில் முகவரிகள் Bcc: என்ற பீல்டில் அமைக்கப்படும். இந்த பீல்டை சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்களில் நாம் தான் இயக்கிக் காட்டப்படும் வகையில் அமைக்க வேண்டும். அதற்கான லிங்க் அதில் காட்டப்படும்.

கேள்வி: கம்ப்யூட்டரை யார் கண்டு பிடித்தார்கள்? கம்ப்யூட்டருக்கு முன்னால், கம்ப்யூட்டரின் வேலையை எது அல்லது யார் செய்து கொண்டிருந்தார்கள்?
ஆ. ஸ்ரீபிரகாஷ், 6ஆம் வகுப்பு மாணவர், மேலூர்.
பதில்:
நல்ல கேள்வி ஸ்ரீபிரகாஷ். உங்கள் கடிதத்திற்கு நன்றி. இன்றைக்குக் கம்ப்யூட்டர் நமக்காக செய்திடும் வேலைகளை வைத்துப் பார்த்தால், சார்ல்ஸ் பாப்பேஜ் (Charles Babbage) என்பவர் வடிவமைத்த அனலிட்டிக்கல் இஞ்சின் என்பதனை முதல் கம்ப்யூட்டர் எனலாம். 1833 முதல் தொடங்கி 1871 வரை இதனை அவர் வடிவமைத்தார். இந்த இஞ்சினாகிய கம்ப்யூட்டர் எத்தனை பெரிது தெரியுமா? 11 அடி நீளம், 7 அடி அகலம். 8,000 க்கு மேற்பட்ட நகரும் பாகங்கள் இருந்தன. 15 டன் எடை கொண்டிருந்தது.
உங்களுடைய அடுத்த கேள்வி தான் மிக அருமை. கம்ப்யூட்டருக்கு முன்னால், இதன் வேலையை யார் பார்த்துக் கொண்டிருந் தார்கள்? யார், உங்களையும் என்னையும் போன்ற ஒரு மனிதர் தான். அத்தனை கணக்குகளையும் போட வழிகளை வடிவமைத்து தொடர்ந்து போட்டுக் கொண்டிருந்தனர். ஏனென்றால், இன்றைய கம்ப்யூட்டரின் திறனைக் காட்டிலும், மனித மூளைக்கு திறன் அதிகம். எனவே நீங்களும் ஒரு கம்ப்யூட்டர் தான். தொடர்ந்து முயற்சித்தால், இன்றைய கம்ப்யூட்டரை அதன் திறனில் தோல்வியுறச் செய்யலாம்.

கேள்வி: நான் எம்.எஸ். ஆபீஸ் 2007 பயன்படுத்தி வருகிறேன். அலுவலகப் பணிகளுக்கென ஆவணங்களை உருவாக்கும் போது, டேட்டா இடுவதற்கென அதிகமாக டேப் நிறுத்தங்களை அமைக்கிறேன். இவற்றை மொத்தமாக நீக்குவது எப்படி?
எஸ்.சங்கர், திருப்பூர்.
பதில்:
எந்தப் பத்தியில் இருந்து டேப் நிறுத்தங்களை நீக்க வேண்டுமோ, அதில் கர்சரை நிறுத்துங்கள். அடுத்து ரிப்பனில் ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், பாரா குரூப்பில் காணப்படும் வலது கீழாக இருக்கும் சிறிய ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் பாரா டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு டேப்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். இனி டேப்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Clear All என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்திட்டால், அனைத்து டேப்களும் நீக்கப்பட்டுவிடும்.

கேள்வி: இந்தியாவில் ஏன் இன்னும் இன்டர்நெட் பயன்பாடு அதிகமாக உயரவில்லை? மிக வேகமாக அனைத்து துறைகளிலும் வளர்ந்து வரும் நாடாக இருந்தும் ஏன் இந்த தயக்கம்?
சி. தினேஷ் குமார், சென்னை.
பதில்:
யார் சொன்னது? இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது இந்தியாவில் தான் என்று இதனைக் கண்காணித்து வரும் அமைப்பு கூறியுள்ளது. உலக அளவில் 220 கோடி இன்டர் நெட் பயனாளர்கள் உள்ளனர். 2015க்குள், அடுத்த நூறு கோடி பேரை ஈர்த்திடும் பணியில் கூகுள் முனைந்துள்ளது. இதில் 50 கோடி பேர், இந்தியாவைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலிருந்துதான் கிடைப்பார்கள் என்று இந்நிறுவனம் கணித்துள்ளது. கூகுள் தென் கிழக்கு ஆசிய பிரிவின் தலைவர் இது குறித்து கூறுகையில், இதில் 25 கோடி பேர் இந்தியா வில் இருந்துதான் இருப்பார்கள் என்று தெரி வித்துள்ளார். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழி இன்டர்நெட் பயன்பாட்டினைக் காட்டிலும், மொபைல் சாதனங்கள் வழி பயன்பாடே அதிகம் எனவும் இவர் கூறியுள்ளார்.
உலக வங்கி இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 2009 ஆம் ஆண்டில் 6.1 கோடி பேர் இணைய பயனாளர்களாக இருந்தனர். 2011ல் இது 12.5 கோடியானது. இது இந்திய ஜனத்தொகையில் 10%. ஆனால் இந்தோனேஷியாவில் இது 18%, வியட்நாமில் 35%, பிலிப்பைன்ஸில் 29%, மலேசியாவில் 61%, தாய்லாந்தில் 23.7% ஆக உள்ளது. மலேசியாவில் தொடர்ந்து உயரும் ஸ்மார்ட் போன் விற்பனை இதற்குக் காரணம்.
இன்டர்நெட் இணைப்பு இல்லாத ஜனத்தொகையும் ஆசியாவில் தான் அதிகம். இதில் இந்தியா, இந்தோனேஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்மார்ட் போன்கள் விலை வேகமாகக் குறைந்து வருகிறது. இதற்கு இணையாக இன்டர்நெட் சேவைக் கட்டணமும் குறைந்தால், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இன்டர்நெட் பயன்பாடு இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கேள்வி: ஆண்ட்ராய்ட் போன் இயக்கம் குறித்து படிக்கும் போது ஐஸ்கிரீம் சாண்ட்விட்ச் சிஸ்டம் என ஏன் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது? இது எதனுடைய பெயர்?
என்.இந்திரா, புதுச்சேரி.

பதில்: நல்ல கேள்வி இந்திரா. பொதுவாக சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்று அப்டேட் செய்யப் படுகையில், அதன் பெயருடன் எண்களை தொடர்ந்து இணைப்பார்கள். முற்றிலும் புதிய வசதிகளுடன் சாப்ட்வேர் தரப்படுகையில் பெயரினை மாற்றுவார்கள். கூகுள் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஓப்பன் சோர்ஸ் திட்டத்தினைத் தொடங்கிய போது, தன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, அதன் பதிப்பு 1.5 தொடங்கி, சுவையான டெஸர்ட் பெயர்களை வைத்திடத் தொடங்கியது. அதில் ஒன்றுதான், நீங்கள் குறிப்பிடும் ஐஸ்கிரீம் சாண்ட்விச். மற்ற பெயர்களை அறிய ஆசையா? இதோ கப்கேக் 1.5, டோனட் 1.6, எக்ளெர் 2.0 மற்றும் 2.1, ப்ரையோ 2.2, ஜிஞ்சர் ப்ரெட் 2.3 மற்றும் 2.4., ஹனி ஹோம் 3.0 மற்றும் 3.2, ஐஸ்கிரீம் சாண்ட்விச் 4.0.1 மற்றும் 4.0.4. இறுதியாக இப்போது இருப்பது ஜெல்லி பீன் 4.1.
ஒவ்வொரு ஆண்ட்ராய்ட் சிஸ்டம் அறிமுகப் படுத்தப்படும் போதும், இந்த பெயர்கள் குறிப்பிடும் டெசர்ட் ஒன்றை பிளாஸ்டிக்கில் உருவாக்கி, கலிபோர்னியாவில் அமைந்துள்ள தன் தலைமை அலுவலகத்தில் அமைப்பது கூகுள் நிறுவனத்தின் பழக்கமாகும்.

கேள்வி: என்.எப்.சி. என்னும் தொழில் நுட்பம் இனி பாதுகாப்புடன் நிதி புழக்கம் மேற்கொள்ள வழி வகுக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தற்போது எந்த அளவில் புழக்கத்தில் உள்ளது? இதனைச் சற்று முழுமையாக விளக்கவும்.
செ.நா. திருஞானம், காரைக்குடி.
பதில்:
இங்கு சற்றுச் சுருக்கமாகக் கூறுகிறேன். Near Field Communication (NFC) என்பது இரண்டு ஸ்மார்ட் போன்கள் அல்லது அதே போன்ற மொபைல் எலக்ட்ரானிக் சாதனங்கள் அருகருகே இயங்கும் போது, எந்தவித வயர் இணைப்பின்றி தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு வழி செய்திடும் தொழில் நுட்பமாகும். தற்போது புழக்கத்தில் உள்ள Radio Frequency Identification (RFID) என்னும் தொழில் நுட்ப கட்டமைப்பில் விரிவாக இருவழி தகவல் பரிமாற்றத்துடன் என்.எப்.சி. வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் வாலட் போன்ற சாதனக் கட்டமைப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த கட்டமைப்பில், நம் அக்கவுண்ட்டில் பணம் செலுத்தி, நம் ஸ்மார்ட் போனை இதற்கென விற்பனை நிலையங்களில் உள்ள சாதனங்கள் முன்னர், இவற்றை அசைத்து, பணம் செலுத்தலாம். பல நாடுகளில் கடன் அட்டை போன்றவற்றில் பணம் செலுத்தி, அவற்றை வாகனங்களில் வைத்து, சாலைகளில் பயணிக்கும் போது, தானாக பணம் செலுத்தப்படும் வசதி என்.எப்.சி. மூலம் இயக்கப்படுகிறது. இது பாதுகாப்பானது. குறுகிய வட்டத்திற்குள் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி இது இயங்குவதால், அனுப்பப்படும் தகவல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்பலாம்.

கேள்வி: ஆடியோ பைல்களை எடிட் செய்திடச் சிறந்த புரோகிராம்களாக எவற்றை நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?
சா.கலைவாணி, காரைக்குடி.
பதில்:
ஆடியோ பைல்களை எடிட் செய்வதற்கும், அவற்றின் பார்மட்களை மாற்று வதற்கும் பல புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஐந்து புரோகிராம்களை இங்கு குறிப்பிடுகிறேன்.
1. Audacity 2.0.2. கிடைக்கும் இணைய தள முகவரி: http://audacity.sourceforge.net/ இந்த புரோகிராம் 2000 ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு, தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பலவகை வசதிகளைத் தருகிறது.
2. Sony Sound Forge: இதனை http://www.sonycreativesoftware.com/soundforge என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும். அதிக விலையும் கூட. ஆனால், தொழில் நுட்ப ரீதியில் ஆடியோ பைல்களைக் கையாள்பவர்களுக்கு இது ஒரு நல்ல சாதனம்.
3. Adobe Audition CS6: அடோப் நிறுவனம் தயாரித்து வழங்கும் ஆடியோ எடிட்டிங் புரோ கிராம். இதனை முழுமையாகக் கட்டணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. தேவைப்படும் போது, மாதக் கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். கிடைக்கும் தள முகவரி: http://www.adobe.com/products/audition.html
4. NCH WavePad: இதுவும் கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்த வேண்டும். கிடைக்கும் தள முகவரி: http://www.nch.com.au/wavepad/ index.html
5. Wavosaur: இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம். அது மட்டுமின்றி அளவில் சிறியது. எளிதாகக் கையாளலாம். இந்த புரோகிராமினை http://www.wavosaur.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X