E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அசைவ உணவு பிரியரா நீங்கள்?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

மனிதர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களில் முக்கியமானது இரக்க குணம். பிறர் துயர் கண்டு இரக்கம் கொள்வது மனிதத் தன்மை. இரக்கமில்லா நெஞ்சம் ஈரமில்லா நெஞ்சம். மனிதன், மனிதனிடம் இரக்கம் காட்டுவதை விட, பிற ஜீவன்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு பேச முடியும்; என்ன வேண்டுமென்று கேட்க முடியும்; துன்பங்களை வாய் விட்டுச் சொல்ல முடியும். இதர ஜீவன்களால் அப்படி செய்ய முடியாது. அதனால்தான், இந்த வாயில்லா ஜீவன்களிடம் அன்பு, இரக்கம் கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தை, வள்ளலார் மிகவும் வலியுறுத்தி சொல்லி இருக்கிறார். அசைவ உணவை அவர் வெறுத்தார். ஊனைத் தின்று, தன்னை வளர்க்க வேண்டுமா என்றார். அசைவ உணவு ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் என்பது, மேல் நாட்டு வைத்தியர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும், பெரும்பாலோர், அசைவ உணவை விரும்புகின்றனர். அசைவ உணவில் கிடைக்கும் சத்துக்களை, சைவ உணவிலேயே பெற முடியும் என்று தமிழ் வைத்தியம் கூறுகிறது. "பிற ஜீவன்களை கொன்று, அதை உண்ணாமலிருப்பது நல்லது...' என்கிறார் வள்ளலார். விலங்குகளிடம் அவ்வளவு இரக்கம் அவருக்கு.
விலங்குகள், நம்மிடம் வந்து எதையாவது கேட்கிறதா? பணம், ஆடை, ஆபரணம், பள்ளிக்கூட சம்பளம், சினிமா பார்க்க காசு, இப்படி எதையாவது கேட்கிறதா? இல்லையே...
இவைகள் எங்கேயோ அலைந்து, திரிந்து தங்களுக்கான ஆகாரத்தைத் தேடிக் கொள்கின்றன; மனிதரிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், மனிதன் அதைத் தேடி, அலைந்து, பிடித்துக் கொன்று உண்கிறான். இது பாவம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
பசு இருக்கிறது. அதன் பாலை கறந்து, குடும்பத்தில் உள்ள அனைவரும் பாலாகவும், தயிராகவும், வெண்ணெய், நெய்யாகவும் உண்டு, உடலை வளர்க்கின்றனர். ஆனால், பசு என்ன செய்கிறது? எங்கேயோ சென்று மேய்ந்து விட்டு, வீட்டுக்கு வந்து சேருகிறது. வீடுகளில் அதற்கு போடும் தீனி போதுமானதாக இராது. அது, வெளியில் போய்த் தான் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு வருகிறது.
ஆனாலும், பால் வற்றியதும், அதை அடிமாடாக விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வாங்கி, திருப்தியடைந்து விடுகிறான் மனிதன். பசு, பால் கொடுத்ததற்கு மனிதன் காட்டும் நன்றி இது! மாடு என்ன கேட்கிறது? "வயலில் கிடைக்கும் நெல்லை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; வைக்கோலை எனக்குப் போடுங்கள்... அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள்; தவிட்டை எனக்குப் போடுங்கள்... சாதத்தை விதவிதமாக சாப்பிடுங்கள்; கஞ்சி, கழுநீரை எனக்கு வையுங்கள்... கீரையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; அதன் வேரை எனக்குப் போடுங்கள்... காய்கறி, பழம் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்; அவற்றின் தோலை எனக்கு போடுங்கள்...'
— இப்படி, மனிதனுக்கு வேண்டாத பொருட்களையே அவை ஆகாரமாக உண்டு வாழ்கின்றன; நமக்கும் உதவுகின்றன. பசு மட்டுமா... எருமை, குதிரை, யானை, நாய் போன்ற பிராணிகள் கூட நம்மிடம் எதையும் கேட்காமல், நமக்கு வேலை செய்கின்றன; உதவுகின்றன. ஒரு ஒற்றை மாட்டு வண்டியில், முப்பது மூட்டை சிமென்ட்டை ஏற்றி, அதை இழுக்கச் சொல்கின்றனர். முக்கி, முனகி இழுத்துச் செல்கிறது மாடு. குதிரை வேகமாகத் தான் வண்டியை இழுத்து ஓடுகிறது. இருந் தாலும், சாட்டையால் இரண்டடி கொடுக்கிறார் வண்டிக்காரர்.
கழுதையின் பிழைப்பு இன்னும் மோசம். அதன் முதுகில், இரண்டு கல்லுரல்களை கட்டித் தொங்கவிட்டு ஓட்டிச் செல்வர். போதாக் குறைக்கு, தங்கள் பிள்ளையையும் அதன்மேல் உட்கார வைத்து விடுவர். அதன் முதுகெலும்பு என்ன... வஜ்ராயுதமா? அது, நடக்க முடியாமல் பின்னங்கால்களைப் பின்னி, பளுவை சுமந்து செல்லும். இதையெல்லாம் பார்த்து நாம், "ஐயோ பாவம்...' என்று சொன்னால், அதுவே நாம் இரக்கப்படுவதாக அர்த்தம். இதைத்தான் வள்ளலாரும், பிற ஜீவன்களிடம் இரக்கம் காட்ட வேண்டும் என்றார். இந்த குணம் மனிதனிடம் இருக்க வேண்டும்!
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!


* மனைவி மீது கணவன் கொட்டுகின்ற பாசம், எதுவரையில் இருக்க வேண்டும்?
மயானம் வரையில்!
***

வைரம் ராஜகோபால்

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pudur mani - madurai,இந்தியா
22-பிப்-201307:02:37 IST Report Abuse
pudur mani மீண்டும் மீண்டும் அசைவம் உண்பவர்களை ஏதோ பாவம் பன்னர்வர்கள் போல் பேச வேண்டாம் தினமலரே
Rate this:
1 members
0 members
6 members
Cancel
prak - chennai,இந்தியா
18-பிப்-201320:09:20 IST Report Abuse
prak அப்படியா பால் குடிகாதிங்க, பாவம் கண்ணு குட்டி, அதுக்கு உள்ள பால் ஐ நல்லா குடிச்சி வயிரை வளக்காதிங்க ...
Rate this:
9 members
0 members
22 members
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
18-பிப்-201317:33:11 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) நம் நாட்டில் விளைவிக்கப்படும் உணவு பொருட்கள் அனைத்தையும், ரசாயன பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் கொண்டு விளைவிக்கிறார்கள். அதனால், முன்பைப்போல் அதில் சத்துக்கள் இல்லை. மண்புழுக்கள், நத்தைகள் போன்றவற்றையே கொல்லும் ரசாயனத்தால் மனித உடலுக்கு நன்மையா விளைவிக்கும் ? ஆனால், அசைவம் என்பது, சுத்திகரிக்கப்பட்ட சைவ உணவை போன்றது. நன்றாக சிந்தித்து பார்த்தல், உங்களுக்கு புரியும்.
Rate this:
9 members
0 members
18 members
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
18-பிப்-201317:27:01 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) WHO ரிப்போர்ட் படித்து பாருங்கள். உலகில் அதிக மலட்டு நீக்கும், ஆண்மை குறைவு சிகிச்சை தரும் மருத்துவமனைகள் உள்ள நாடு இந்தியாதான். இப்படிப்பட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் பலர் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் தான். நம் நாட்டில் நாளுக்கு நாள், குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இந்தியர்களின் சராசரி உயரம், மேற்கத்திய/அரபு நாட்டவர்களை விட குறைவு. அரபு நாடுகளில், அதிக மருத்துவமனைகள் இல்லை. அங்கே, வியாதிகள் அதிகம் இல்லை. மருந்துகளை இந்தியாவை போல் அதிகமாக இறக்குமதி செய்வதில்லை. குழந்தை இல்லாதோரின் எண்ணிக்கையும் மிக குறைவு. சிறு வயதிலேயே கண் கண்ணாடி போடும் குழந்தைகள் இல்லை. எல்லாவற்றிற்கும் காரணம், அவர்களின் உணவு பழக்கங்கள். நல்ல சத்தான அசைவ உணவை சிறுவயது முதல் உட்கொள்வதால், அவர்களின் உயரமும் உடல் வலுவும் அதிகம் என்று அங்கே வேலை செய்யும் என் நண்பர்கள் கூறுகிறார்கள். அது உண்மை என்றே எனக்கு தோன்றுகிறது.
Rate this:
8 members
1 members
22 members
Anonymous - Melbourne,ஆஸ்திரேலியா
22-பிப்-201303:01:34 IST Report Abuse
AnonymousMr. Krishnan, As per your theory Chinese Shaolin monks and Nepali Gurkha's should better take up meat, but reality shows they are the most strongest people on the earth. Don't blame vegetarian food for your incapabilities. And don't think eating only rice for all the three meals will give you strength and power. Indians don't do any sort of daily exercise(few do but majority don't do anything). Westener's mostly exercise daily or atleast had a great child hood playing sports. What have we done to our kids, we have made them academics, we made them learning machines. No more physical training classes in our schools. Search in Google for Vegan athletes and see some of the greatest athletes are vegan's. I don't blame the vegetarian food for infertility, I blame on lack of exercises and our habit of eating rice for all meals are the reasons for it. There are vegetarian super foods like Spirulina, sea veges, sprouted pulses and beans, almonds, walnuts, quinoa, tofu, hemp seeds that are much healthier than your rice. If you can't eat the the above mentioned foods then atleast eat what our ancestors ate like (கேழ்வரகு , ராகி, கம்பு with naturally grown veges). You can substitute your white rice with Brown rice, wild rice, raw red rice etc. I don't blame eating meat, but atleast eat free range chicken not the hormone induced chickens. Right now, all the foods including meat is contaminated with environmental estrogen. No one is safe now, not meat eaters or vegetarians. Please don't blame vegetarian food for all your incapabilities, blame on your food habit and lifestyle. Also know some thing a proper vegetarian sperm is the healthiest comparatively....
Rate this:
2 members
0 members
7 members
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
18-பிப்-201303:30:39 IST Report Abuse
காயத்ரி கருணாகர பல்லவன் அவர்களின் கருத்துக்கள் அருமை. விலங்குகளைக் கொல்லும் போது அவற்றிற்கு அச்சம், கோபம், இனம் புரியாத கலக்கம்,உயிர் மேல் பற்று அனைத்தும் இருக்கும், அதைக் கொன்று உண்ணும் மனிதர்களுக்கும் அதே குணங்கள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். உயிர்களைக் கொல்லுதல் பாவம். ஜீவ காருண்யம் மிகவும் முக்கியம். சைவத்தில் அனைத்துச் சத்துக்களும் இல்லாமல் இல்லை. சைவப்பிரியர்களாக இருப்பது நல்லது.
Rate this:
10 members
0 members
39 members
Cancel
தேவாங்கு - chennai,இந்தியா
17-பிப்-201316:23:39 IST Report Abuse
தேவாங்கு மனிதன், தனக்காகத்தான் இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கிறது-ன்னு நெனைக்கறதால வந்த வினை தான் இன்னிக்கி நாம அனுபவிக்கற இயற்கை பிரச்சனைகள் எல்லாம். உதாரணம், புவி வெப்பமாதல். மேலும், மனிதன் உடம்பு, வேறொரு உயிரினத்தை புசித்து உண்பதற்கான அமைப்புடன் படைக்கப்படவில்லை. தாவரத்தை உண்ணும் வகையில் தான் படைக்கப்பட்டிருக்கறது. எப்போது அவன் மிருகங்களை உண்ண தொடங்கினானோ, அப்பொழுதே அவன் இயற்கையில் இருந்து மாறிவிட்டான். அசைவம் உண்ணும்போது, அந்த விலங்கின் எண்ணத்தையும் இவன் கைக்கொள்கிறான். நம் எண்ணங்களே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. நாம் உண்ணும் உணவே நமது எண்ணங்களை தீர்மானிக்கிறது. அதனால், நாம் உண்ணும் விலங்குகள், நம் எண்ணங்களையும் வாழ்க்கையையும் மறைமுகமாக தீர்மானிக்கின்றன. அதை நாம் அனுமதிக்கலாமா? மேலும், விலங்குகளை நாள்பட உண்பதால், உடம்பில் ஒரு மதமதர்ப்பு, அசதி, புத்தியில் தெளிவின்மை ஏற்படுகிறது. ஆத்மவிசாரம் செய்வதர்க்கும், ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவதற்கும் இம்மாதிரி குணங்கள் பெரும் தடை. இந்திய மக்களின் வாழ்கை, சமீப காலம் வரை, இயற்கையோடும், ஆன்மீகத்தை வாழ்க்கையின் குறிக்கோளாகவும் கொண்டதாக இருந்தது. வசதி குறைந்தாலும், சந்தோஷத்தில் சிறிது கூட குறைவில்லாத நாடாகவே நாம் அறியப்பட்டிருந்தோம். இப்பொழுது, வசதி வந்திருக்கிறது. உணவு முறையில் மாற்றம் வந்திருக்கிறது. ஆனால், நம் முந்தின தலைமுறை வரை அனுபவித்த அந்த பழைய சந்தோஷம் இருக்கிறதா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதற்கான காரணங்களில், இந்த அசைவ முறை உணவும் பெரும் பங்கு என்பதை மறுக்க முடியுமா? விலங்குகளை கொன்று தின்னும் கொலைகார புத்தி வந்ததும், மனிதன் கொலை செய்ய விலங்கு இல்லையென்றால், அந்த வெறி எங்கு கொண்டு போய் விடும்? தன் சந்ததியே கொன்று தின்னும் நிலைக்கு ஆளாக மாட்டானா? தான் வளர்க்கும் உயிரினத்தையே, இவனால் கொல்ல முடியுமென்றால், முன்னர் சொன்ன கொலைபாதகம் நடக்காதென்று எப்படி கூற முடியும்? தாவரத்திற்கு உயிர் இருக்கிறது-ன்னு சொல்லற அறிவாளிகளுக்கு ஒன்று கேட்கிறேன்: ஒரு தாவரத்தை, அதன் சிறிய கிளையை ஒடித்து மண்ணில் நட்டால், அதிலிருந்து பெரிய செடி, மரம் வளரும். அதே போல், ஒரு ஆட்டின் காலை ஒடித்து மண்ணில் நட்டு, இன்னொரு ஆட்டை உருவாக்கிக் காண்பியுங்களேன்.. ஜீவகாருண்யம் என்பது, மனிதனுக்குள் 'மனிதம்' மிச்சம் இருப்பதற்கான அறிகுறி. மனிதம் தொலைந்து போய்க்கொண்டிருக்கும்போது, ஜீவகாருண்யத்தை பேசுபவன் முட்டாளாகவே தெரிவான்... வாள்ளலாரே சொன்னாரே: 'கடை விரித்தேன்.. கொள்ள்வாரில்லை.. கட்டிவிட்டேன்..'-ன்னு.. அப்புறம் யார் என்ன கத்தி என்ன ஆகப்போகுது..? புத்தி இருக்கறவர் யோசிக்கட்டும்.
Rate this:
14 members
1 members
30 members
Cancel
ramesh - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
17-பிப்-201312:21:25 IST Report Abuse
ramesh தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு. அதனிடமும் இரக்கம் காட்டி அதன் பூ காய் பழம் கிழங்கு எதையுமே பறிக்காதீர்கள். அதற்கு வலிக்கும். உபதேசத்துக்கு ஏளவே இல்லாமல் போய்விட்டது.
Rate this:
22 members
0 members
34 members
Jayakumar Santhanam - chennai,இந்தியா
18-பிப்-201310:04:30 IST Report Abuse
Jayakumar Santhanamஒரு பூவையோ அல்லது பழத்தை பறிக்கும் போது மரம் அழிந்து விடுவதில்லை .ஆனால் ஒரு ஆட்டை வெட்டும் போது அது முற்றிலும் அழிகிறது . புரிந்து கொள்.உயிர் கொன்று உயிர் பிழைப்பது பாவம்....
Rate this:
13 members
1 members
20 members
dharmaraj - PUNE,இந்தியா
18-பிப்-201314:08:10 IST Report Abuse
dharmarajமரத்திற்கு எப்படி பழமோ அதை போலவே கோழிக்கு முட்டை பழத்தை பறிக்காமல் இருந்தால் அது இன்னொரு மரமாகும் அதை போல் முட்டை இன்னொரு கோழி ஆகும்... கீரை, கிழங்கு வகைகள், வெங்காயம் மற்றும் பல ஒரு முறை பிடுங்கினால் இறந்து விடும்... எல்லோரும் சாப்பிடுவதை நிறுத்தி விடுவோமா...
Rate this:
11 members
1 members
24 members
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
19-பிப்-201321:40:54 IST Report Abuse
Vasanth Saminathanஅதுசரி. உங்களை கொன்று தின்னால் எப்படி இருக்கும்?...
Rate this:
5 members
1 members
7 members
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
17-பிப்-201310:33:05 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) உலகில் 95% மக்கள் அசைவம் உண்பவர்கள். உலகில், அதிக மருந்து/மாத்திரைகள் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா தான். உலகில் அதிக நோயாளிகள் உள்ள நாடு இந்தியா தான். காரணம், நம் சைவ உணவு பழக்கம். வயல்களில் பூசிகளை கொல்லாமல், உணவு விளைவிக்கபடுவதில்லை. பட்டுபுளுக்களை கொல்லாமல், பட்டு நூல் கிடைப்பதில்லை. தேநீகளை கொல்லாமல், தேன் எடுக்கமுடியாது. பல மருந்து/மாத்திரைகள் அசைவ சத்துக்களை கொண்டதுதான். என்னை பொறுத்தவரை, சத்துள்ள அசைவம் சாபிடுவது தவறில்லை.
Rate this:
16 members
0 members
37 members
Cancel
venkata jalapathi - chennai,இந்தியா
17-பிப்-201308:25:40 IST Report Abuse
venkata jalapathi உலகத்தில் உள்ள எல்லாம் மனிதனுக்காக தான் படைக்கப்பட்டுள்ளது . மனிதன் தன் அறிவால் எல்லாவற்றையும் தனதாக்கி கொள்கிறான். இது இயற்கையின் சுயற்சி அடிப்படையில் இயல்பு .
Rate this:
14 members
1 members
13 members
Nallan - Muscat,ஓமன்
17-பிப்-201311:39:40 IST Report Abuse
Nallanகண்டிப்பாக இல்லை ..உலகத்தில் உள்ள ஜீவனில் மனிதனும் ஒன்று தான் தவிர வேறொன்றும் இல்லை ......
Rate this:
3 members
1 members
24 members
Vishwa - Chennai,இந்தியா
18-பிப்-201315:10:54 IST Report Abuse
Vishwaமனிதனும் ஒரு ஜீவன் தான். அனைத்து உயிர்களும் பூமியில் உயிர் வாழ உரிமை உள்ளது...
Rate this:
2 members
1 members
14 members
Cancel
Dharmendra Muthu - Toronto,கனடா
17-பிப்-201305:00:19 IST Report Abuse
Dharmendra Muthu அது சரிதான். மனுஷன் அறிவுள்ள மிருகமாயிட்டே?
Rate this:
4 members
0 members
11 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.