அமெரிக்காவிலும் வந்துவிட்டது அஞ்சப்பர் ஓட்டல்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

"சொர்க்கமே என்றாலும், அது, நம்ம ஊரைப் போல வருமா?' என்ற பழமொழி, எதற்கு பொருந்துமோ இல்லையோ, சாப்பாட்டு விஷயத்தில் கண்டிப்பாக பொருந்தும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என, வெளிநாடுகளில் தங்கி, கிடைத்ததை சாப்பிட்டு, காய்ந்து போய் இருப்பவர்களுக்கு... "ப்ரை' செய்த, "ஸ்பைசி'யான, காரசாரமான, அசத்தலான அயிட்டங்கள் கண்ணில் பட்டால்... அதுவும், சமையலுக்கு பெயர் பெற்ற, செட்டிநாடு சமையல் கிடைத்தால், ஒரு பிடி பிடித்துவிட மாட்டார்களா!
அப்படித்தான், நியூயார்க்கில் வசிக்கும் நம்மவர்கள், இத்தகைய உணவை சாப்பிடுவதற்கு, ஓடோடி செல்கின்றனர். எங்கு தெரியுமா? அமெரிக்காவில், நியூயார்க் நகரில் உள்ள, அஞ்சப்பர் ஓட்டலுக்கு தான்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க, பல கிளைகளை கொண்ட இந்த ஓட்டல், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும், தற்போது பிரபலமடைந்துள்ளது. இதற்கு காரணம், பாரம்பரியமான செட்டிநாடு உணவு வகைகளை, அதன் சுவை மாறாமல் தயாரித்து வழங்குவது தான்.
நியூயார்க்கில் உள்ள அஞ்சப்பர் ஓட்டலின் உள் அலங்கார வேலைப்பாடுகள், பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன. மேஜை மீது விரிக்கப்பட்ட வெள்ளைத் துணி, கண்களை உறுத்தாத தொங்கும் சர விளக்குகளின் வெளிச்சம், சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தட்டுகள் என, சிவப்பு நிற பின்னணியில் அசத்தலாக காட்சி அளிக்கிறது.
வெஜிடபிள் குருமா, கத்தரிக்காய் குழம்பு, பூண்டு குழம்பு, குழிப்பணியாரம், சமோசா, கோழி, நண்டு, ஆட்டு எலும்பு சூப், சிக்கன் லாலிபாப், இறால் 65, மீன் 65, மிளகு சிக்கன், இறால் பக்கோடா, தந்தூரி சிக்கன், சிக்கன் டிக்கா என, நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் சுவையான உணவு வகைகள், சுடச் சுட இங்கு பரிமாறப்படுகின்றன.
நம்மவர்களை விட, அங்குள்ள வெள்ளையர்கள், இந்த உணவு வகைகளை சாப்பிட அலைமோதுகின்றனர்.
செட்டிநாடு ஸ்பெஷலான சிக்கன் பிரியாணியின் ஒவ்வொரு பருக்கையிலும், சுவை எட்டிப் பார்க்கிறது. அஞ்சப்பர் ஓட்டலில் ஆப்பம் சாப்பிடுவதற்கென, நியூயார்க்கில் ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. ஆப்பத்திற்கு, "சைடிஷ்' ஆக, தேங்காய்ப் பாலும், சர்க்கரையும் கிடைக்கிறது.
செட்டிநாடு சமையலில், மற்ற எதிலும் இல்லாத ஒரு நறுமணம் நிறைந்து இருக்கும். குறிப்பாக, இறைச்சி உணவு சமைக்கும் போது பயன்படுத்தும், மராத்தி மொக்கு, அன்னாசிப்பூ, கல்பாசி, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போன்ற வாசனைப் பொருட்கள் சேர்த்து அரைக்கப்படும் மசாலாவே இதற்கு காரணம்.
இனிமேல், அமெரிக்காவுக்கு... குறிப்பாக, நியூயார்க்கிற்கு சென்றால், நம்மூர் உணவு கிடைக்கவில்லையே என வருந்தாமல், அஞ்சப்பர் ஓட்டலுக்கு சென்று ஒரு பிடி பிடித்துவிட்டு வாருங்களேன்!
***

ஆஞ்சலா ராஜம்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Singai,சிங்கப்பூர்
23-பிப்-201315:12:49 IST Report Abuse
Kumar விலை கொள்ளையோ கொள்ளை பகல் கொள்ளை ..... உண்மை உண்மை உண்மை
Rate this:
Share this comment
Cancel
Kumar - Singai,சிங்கப்பூர்
23-பிப்-201315:10:29 IST Report Abuse
Kumar Looks Anjappar advertisement... Not a article.... Be frank Anjappar is one of the worst resterant in Singapore, Taste is not original Chettinadu taste, Saguntha and other are better
Rate this:
Share this comment
Cancel
Raman - Chennai,இந்தியா
17-பிப்-201320:03:00 IST Report Abuse
Raman இது எவ்வளவு உண்மை என்று தெரியாது, ஆனால் இணையத்தில் இந்த அஞ்சப்பர் உணவகத்தை பற்றிய கருத்துக்கள் கேவலமாக இருக்கு, நம்மூர் கீதா கபே தேவலாம் என்கிற அளவிற்கு.
Rate this:
Share this comment
Cancel
vikadan - Doha,ஆப்கானிஸ்தான்
17-பிப்-201313:38:23 IST Report Abuse
vikadan விலை கொள்ளையோ கொள்ளை பகல் கொள்ளை .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.