அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

அன்புள்ள சகோதரிக்கு —
நான் 33 வயது பெண். 17 வயதில் திருமணம் நடந்தது. நான் மிகவும் அழகாய் இருப்பதாலும், என் கணவர் என் மீது அளவுக்கு அதிகமாய் பாசம் வைத்து இருப்பதாலும், இவ்வளவு நாள் என் வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வந்தேன். எனக்கு ஒரு மகனும், மகளும் வாலிப வயதில் உள்ளனர்.
எனக்காகவும், என் குழந்தைகளுக்காகவும் என் கணவர் மிகவும் பாடுபட்டு, எங்களை நன்றாக வைத்து இருக்கிறார்.
என் கணவருக்கு, நான் வெளியில் நின்றாலோ, மற்ற ஆண்களிடம் பேசினாலோ பொறுக்காது. அவரும் நன்றாகத் தான் இருப்பார்.
இப்போது அவர் வயது, 38 ஆகிறது. நானும் கட்டுப்பாடு மிகுந்த சூழ்நிலையில் வளர்ந்ததால், அவரின் சந்தேக குணத்தை புரிந்து," அட்ஜஸ்' செய்து கொண்டேன்; பொறுமையாக இருந்தேன்.
என் மூத்த பையன் என் அருகில் உட்கார்ந்தாலோ, என் மடியில் படுத்துக் கொண்டாலோ, என் கணவர் முகம் மாறி, "பெரிய பையன் ஆகிவிட்டான்... கொஞ்சம் தள்ளியே இரு...' என்கிறார். இது போல் நடந்து கொள்வதால், அவர் மீது எனக்கு மிகவும் வெறுப்பு வருகிறது.
நான் என்ன மேடம் செய்வேன். எல்லாவற்றையும் புரிய வைத்து அவரை திருத்திய எனக்கு, இதை எப்படி புரிய வைப்பேன். பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை ஒதுக்க முடியுமா? மற்றபடி என் பையனிடம் அவர் மிகவும் பிரியமாக இருக்கிறார். இவ்வளவு பெரிய பையனையும் தூக்கி கொஞ்சுவார். எனக்கு தாங்கள் தான் நல்ல பதில் தர வேண்டும்!
இப்படிக்கு,
— அன்பு சகோதரி.


அன்பு சகோதரி —
உன் கடிதம் கண்டேன். அன்பு மகனைக் கொஞ்சினால் - கணவனுக்குப் பொறாமை... உன் எழுத்துகளில் உன் வருத்தம் தெரிகிறது.
உனக்கு வெகு சீக்கிரமே கல்யாணமாகி விட்டதாக எழுதியிருக்கிறாய்... 16 வயதில் பிள்ளை இருந்தாலும் - கணவன், மனைவி இருவருமே, இன்னும் நடு வயதில் தான் இருக்கிறீர்கள்...
ஒரு குழந்தைக்குத் தந்தையாகி விட்டாலும் - ஏன் - சிறுவயதிலேயே குடும்ப பாரத்தைத் தன் தோளில் சுமந்தாலும், உன் கணவரே இன்னமும் குழந்தைதான் என்பதைப் புரிந்துகொள் சகோதரி.
சாதாரணமாகவே, குழந்தை பிறந்தவுடன், ஒரு பெண், தன் கணவனை விடவும், தான் பெற்ற குழந்தைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறாள். ஆதலால், இந்த பிரச்னை, குழந்தை பிறந்தவுடனேயே ஆரம்பமாகி விடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
முதல் குழந்தை இருக்கும்போது, இரண்டாவதைக் கொஞ்சினால், மூத்தது காரணமில்லாமல் அழும். விழுந்து புரண்டு, தன் எதிர்ப்பைக் காண்பிக்கும். அருகில் யாருமில்லை என்றால் சின்னதைக் கிள்ளி விட்டு ஓடும்.
இந்த அளவு இல்லை என்றாலும், ஓரளவுக்கு தாலி கட்டினப் புருஷனிடம் இந்த, "சவலைக் குழந்தை'த்தனத்தைப் பார்க்கலாம். இதுபோன்ற சமயங்களில் நீ, உன் கணவனையும் ஒரு குழந்தை போல அருகில் இழுத்து மடியில் போட்டுக் கொள்ளலாம். திடீரென இப்படியொரு வழக்கத்தை ஆரம்பிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
நம் நாட்டில் - கணவன், மனைவி, குழந்தைகள் எல்லாரும் சேர்ந்து விளையாடுவதோ, ஒருவரையொருவர் அன்புடன் அணைப்பதோ, செல்லமாய் கன்னத்தில், நெற்றியில் முத்தமிடுவதோ, தட்டிக் கொடுப்பதோ கிடையாது.
குழந்தைகள் முன் - அப்பா, அம்மா சிரித்துப் பேசுவதோ, தொடுவதோ கிடையாது. கோபம் வந்தால், குழந்தைகளுக்கு எதிரில் புருஷனும், மனைவியும் சண்டை போட்டு, அடித்து உதைத்துக் கொள்கிறோமே தவிர, அன்பையும், பாசத்தையும், என்னவோ தப்பு காரியம் செய்வது போல, ஒளித்து ஒளித்து வைத்துப் பரிமாறிக் கொள்கிறோம்; இந்த நிலை மாற வேண்டும்.
அம்மாவுக்கு மகனிடம் பாசம் அதிகமாக இருப்பதும், அப்பாவுக்கு மகளிடம் அன்பு அபரிமிதமாக இருப்பதும், வெகு இயல்பானது. பெரும்பாலும் இப்படி எதிரெதிர் பாலில்தான் ஈர்ப்பும், பிரியமும் இருக்கும்; இது தவறும் இல்லை.
ஆனால், உன் கணவன் என்கிற குழந்தையை, மூலையில் நிற்க வைத்து, உன் பிள்ளையை மடியில் போட்டுக் கொஞ்சாதே. முதலில் கணவனை கலகலப்பாக்கு! தனிமை கிடைக்கும்போது அவரிடம் எடுத்துச் சொல்:
இன்னும் எத்தனை நாளைக்கு நம் பிள்ளை, இப்படி குழந்தையாக இருக்கப் போகிறான்... கல்லூரிப் படிப்பு, புது சினேகம் எல்லாம் வந்து விட்டால் - வீட்டுப் பக்கம் திரும்பியே பார்க்க மாட்டான். எனக்கு மட்டுமா அவன் குழந்தை... உங்களுக்கும் தானே... இப்போது அவனை விரட்டினால், விரட்டுகிறவர் பேரில்தான் வெறுப்பு வரும்... அதனால், அவனிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ள முயற்சியுங்கள். வளர்ந்து விட்டானே தவிர, மனசளவில் அவனும், உங்களைப்போல ஒரு குழந்தை தான். இதுபோன்ற மென்மையான வார்த்தைகளும், அன்பான அரவணைப்பும் கண்டிப்பாய் பலனளிக்கும் சகோதரி.
என் வாழ்த்துகள்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
18-பிப்-201316:04:59 IST Report Abuse
Skv இது ரொம்பவே காமன். பல வீட்லேயும் இருக்கு , எங்கம்மா வீட்லே எல்லாம் யாருமே திட்டி பேசவே அனுமதிக்க மாட்டாக், இந்த அனாகரீகமெல்லாம் சினிமாலேந்து வரதுதான். மூனுமணியில முடியும் சினிமாலே என்னவெல்லாமோ காட்டுராக. ஒரு பாட்டு பாடிமுடிக்கரதுக்குள்ளேயே அந்த குழ்ந்தை தொட்டில்லேந்து வளைந்து பெர்சாகி காரோட்டும் காதல் பண்ணும் பிள்ளைகுட்டியும் பெத்துக்கும் , அம்புட்டும் கற்பனை அவ்ளோதான் , ரியல்ல நாமெல்லாம் தான் பாக்குரோமே நம்ம பிள்ளைங்க வளந்து ஆளாவதற்கு 20 + வருஷம் ஆவுதே. நமக்கு திருமணம் பொது 20 + வயசு. நம்ம பிள்ளைக 20+ ஆவும்போது நாம் 40+ ஆயிற்றோமே, அஞ்சு வயது வரை ஆசையா கொஞ்சலாம். பிறகு ட்ரீட் தெம் லைக் க்ரோனப் , பிள்ளைங்களே விரும்பாதுங்க
Rate this:
Share this comment
Cancel
VIVEK - sivakasi,இந்தியா
18-பிப்-201312:25:30 IST Report Abuse
VIVEK நல்லா அழகா சொன்னிங்க சகுந்தலா மேடம்
Rate this:
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
18-பிப்-201308:37:29 IST Report Abuse
LOTUS பாசத்தையும் பந்தத்தையும் வோவொரு சூழ்நிலை வாய்க்கும் போதும் பெண்ணுக்கு சொல்லிகொடுக்கும் அதே தாய் தான் மகனுக்கும் சூழ்நிலையை சொல்லி தர வேண்டும். குழந்தைகளுக்கு முதல் ஆசானே தாய் தான்.. பிறகு தான் தந்தையிடம் இருந்து மற்றவற்றை குழந்தை புரிந்து கொள்ளும். அயல் நாட்டில் 3 to 5 வயதிலேயே தனிமை போதிக்க படுகிறது. இங்கு பெண்ணுக்கு 18 ஆணுக்கு 20 வயது வரை துணை தேவை என போதிக்கபடுகிறது. இது இங்குள்ள கலாச்சாரம். பிரச்சனையை சொல்லி அதற்கு பதிலையும் சொல்லவைத்து பக்குவ படுத்தினால் எங்கும் ஏன்டா எல்லையிலும் விரிசல் விழாது. ஒருஒரு மில்லிமீட்டர் அளவிலும் பக்குவம் தேவை ஒரு தாய்க்கு. புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்து பெண்ணே . உன் வீட்டின் மறக்க முடியாத ஒரு அம்சமாக இருப்பாய் கால காலத்திற்கும்.
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
18-பிப்-201300:19:59 IST Report Abuse
Cheenu Meenu நமது இந்திய சமுகத்தில் பெண்கள் வயதிற்கு வந்துவிட்டால் பெற்ற தந்தையே ஆனாலும் அவளை தகப்பன் தொட்டு பேசுதல் கூடாது. இது இந்து சாஸ்த்திரம். அதுபோல் பெற்ற மகனே ஆனாலும் ஓரளவு வளர்ந்து விட்ட மகனை தலையை தொட்டு தடவி கொடுக்கலாமே தவிர மடியில் கிடத்தி கொஞ்சுவது முறையல்ல. தகப்பன் மகளை அப்படி செய்தால் தாய் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாளா ?
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
18-பிப்-201300:13:55 IST Report Abuse
காயத்ரி மீனவன் ராஜூவிற்குக் கூறிய கருத்துக்கள் அருமை. யாரிற்காக இல்லையென்றாலும் ராஜுவின் குழந்தைக்காகவேனும் அவர் சற்று மாறினால் நன்றாக இருக்கும். My dad is my first ஹீரோ,பெண் குழந்தைக்குத் தந்தை மேலும் ஆண் குழந்தைக்குத் தாயின் மேலும் அதிகக் காதல் இருக்கும். vice versa. இந்த வாரம் சகுந்தலா மேடம் கருத்துக்கள் மிகவும் அருமை. திரைப்படங்களில் காட்டுவது போல் இயல்பில் பருவமடைந்த பெண்கள் தந்தையிடம் ஒட்டி உறவாடிக் கொஞ்சி மகிழ்வதில்லை..ஒரு எல்லையில், தந்தையே ஆனாலும் ஆண் என்ற நிலையிலேயே உடல் ரீதியில் எல்லையில் இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். இங்கு குறிப்பிட்டுள்ள வாசகியின் கணவர் தன் மனைவி அடுத்த ஆண்களிடம் பேசுவதை விரும்பாமல் கடைசியில் பெற்ற மகன் தொட்டுப் பேசுவதையும் மடியில் படுக்காததையும் விரும்பாமல் இருக்கிறார்..சொல்லிப் புரிய வைக்கக் கூடிய விஷயம் தான், இத்தனை வருடங்கள் அனுசரித்து நடந்திருந்தாலும் உங்கள் முயற்சிகளில் உங்களுக்குப் பிடிக்காத குறைகளாகத் தெரியும் கணவரின் செயல்களில் மாற்றங்கள் ஏற்படுத்தினீர்கள் தானே..அதே போல் இதுவும் முயற்சித்தால் முடியும். அன்னையின் ஸ்பரிசம் குழந்தைக்குப் பாதுகாப்பு உணர்வு கொடுக்கும், எத்தனை பிரச்சினைகளில் பையன் வீட்டுக்கு வந்தாலும் தாயின் மடியில் தலை வைத்துத் தூங்கும் போது நான் இருக்கிறேனடா என்று இதழ்களால் சொல்லாமல் விரல்களால் சொல்லும் தலைமுடியைக் கோதும் அந்த அழுத்தமும் அன்பும் எத்தனை கோடி கொடுத்தாலும் வராது. நன்றாகப் படி என்று சொல்லி விட்டு உறங்கச் செல்லும் தந்தையை விடத் தன் மகனுடன் விழித்திருந்து தலை வலிக்கிறதா என்று தலையைப் பிடித்து விட்டு காபி போட்டுக் கொடுத்து படிக்கும் அழகை ரசிக்கும் தாயின் அன்பு ஈடு இணையில்லாதது. உங்கள் கணவரையும் ஒரு குழந்தையாக நினைத்து அன்பு பாராட்டுவது மாற்றங்களை ஏற்படுத்தும். நம் மகன், அவன் கல்லூரி முடித்து வேலை சென்று திருமணமானாகி குழந்தைகள் ஏன் பேரன், பேத்தி பெற்றெடுத்தால் கூட அவன் நமக்குக் குழந்தை, அவனுக்கு நாம் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று அன்புடன் கூறி வர வேண்டும். குழந்தை எதிரில் சண்டையிடுவது மட்டுமில்லாமல் சமாதானமாகப் போவதும் அன்னியோன்னியமாக இருப்பதும் கூச்சத்தைப் போக்கும். அதே போல் வயதிற்கு வந்த பெண் தந்தையிடம் எப்படி பழக வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, வயதிற்கு வந்த மகனுடனும் எல்லையில் இருக்கலாம், ஸ்பரிசம் தவறல்ல, ஆனால் எல்லாமே உடலளவில் இடைவெளியில், உள்ளத்தில் அன்பைக் கொட்டி..மடியில் தலை வைத்தலும் தலைகோதலும் தவறல்ல. வயதிற்கேற்ப ஆசைகள் மாறுபடும், எனக்குத் தெரிந்த 52 வயது உறவினர் தன் கிராமத்திற்கு அம்மாவைப் பார்க்கச் செல்லுவார், அம்மா விதவிதமாக சமைத்து வைத்திருப்பார், போனவுடன் செய்வது அம்மா(ஒல்லியாக இருப்பார்)வைத் தூக்கி விடுவார்.. அம்மா மடியில் குழந்தை போல் படுத்துக் கொள்வார், கண்களில் நீர் வழிய அந்தத் தாய் துடைத்து விடுவார், மின்சாரம் இல்லை என்றால் விசிறியால் விசிறி விடுவார், இருவரும் பேசிக் கொள்ளக் கூட மாட்டார்கள், மிடுக்குடன் கீழே வேலை பார்ப்பவர்களை அதிகாரம் செய்யும் மனிதர் தாயிடம் குழந்தையாய்க் கொஞ்சுவதைப் பார்க்கும் போது கண்களில் நீர் நிறைக்கும்.உருவத்தில் பெரியவராக இருந்தாலும் அந்தத் தாய்க்குக் குழந்தை எத்தனை வயதானாலும்..இல்லையா? சிற்சில மாற்றங்கள் கொண்டு வந்தாலே போதும்.
Rate this:
Share this comment
gulf.yogi @gmail.com - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-201310:18:59 IST Report Abuse
gulf.yogi @gmail.comவாசகபெருமக்களே என்ன 55 மோசம்னு குத்திட்டிங்க..நான் முதல் 1 1/2 லைன் படித்தேன் கிழபார்தேன் உங்க வரவேற்ப்பை..பாவம் கஷ்டப்பட்டு comments பொட்டுஇருப்பாங்க.....
Rate this:
Share this comment
Cancel
meenavan - New Jersey,யூ.எஸ்.ஏ
17-பிப்-201314:45:58 IST Report Abuse
meenavan அன்பின் கணபதி கண்ணன் : ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்களிடம் பணமில்லாவிட்டாலும் நல்ல மனமிருக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. தான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் என்று சொல்லிவிட்டு ராஜூ எழுதிய விஷயங்கள் அந்த அடிப்படையை அசைத்துவிட அவர் ஒப்ப மாட்டார் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் பல நம்பிக்கைகள்.அதனால்தான் அவருக்கு இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவர் நேரம் கிடைக்கும்போது சில ஆதரவற்ற குழந்தைகளுடன் பழக வேண்டும். ஒரு குழந்தையின் பார்வையில் இந்த உலகம் என்ன என்பதை அது அவருக்கு புரிய வைக்கும். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தந்தையின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை இவர் உணரவேண்டும் என்பது எனது பிரார்த்தனை.இரண்டு முறை கண்ணுறக்கம் பெண்களுக்கு என்று எழுதினார் கண்ணதாசன்..... முதலுறக்கங்களுக்கு தலையணைகளும்,சிரிப்புகளும் கனவுகளும் தந்தையிடமும் தாயிடமும் இருந்துதான்...உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.....ராஜூவின் மனமாற்றம் கேட்கும்போது அந்த நந்தவனம் அந்த தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நம் மனதில் ஒரு உலாவரும்... காத்திருப்போம்...
Rate this:
Share this comment
Cancel
kasim - Tamilnadu / K.K dist,இந்தியா
17-பிப்-201312:25:35 IST Report Abuse
kasim ஏழு வயது கடந்து விட்டாலே ஆண் பிழ்ழையஹா இருந்தாலும், பெண் பிழ்ழையஹா இருந்தாலும், அன்பு மரியாதை இரண்டும் தெழிவஹ கற்று கொடுத்தால், இது போன்ற ப்றேச்சனைஹழை தவிர்க்கலாம். அன்பு எப்போதும் மரியாதையஹா இருப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
saleem - wellington,நியூ சிலாந்து
17-பிப்-201311:45:11 IST Report Abuse
saleem வெளி நாட்டை பொறுத்தவரை பிள்ளைகளுக்கு தாயின் அரவணைப்பு இரண்டு @ மூன்று வருடங்கள் மட்டும்தான் நம் நாட்டில் தான் ஐந்து வயது வரை தாயும் தகப்பனும் கொஞ்சி வளர்ப்பார்கள் ஆனால் பதினாறு வயது மகனை மடியில் போட்டு கொஞ்சுவது தவறு அவன் இப்போது பத்தாவது படிக்க கூடியவனாக இருப்பன் பல விசயங்களை அறிந்திருப்பான் உடம்பில் பல மாற்றங்களும் வந்திருக்கும். , தாயிற்கும் பிள்ளைக்கும் உள்ள உள்ள பந்தம் பிரிக்க முடியாதது அதை பருவத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளவேண்டும் இதில் எல்லோருடைய கருத்தும் ஒன்றுதான்
Rate this:
Share this comment
Nanpan - Pollachi,இந்தியா
18-பிப்-201300:46:33 IST Report Abuse
Nanpan சலீம் சொல்வது மிகச் சரி....
Rate this:
Share this comment
Cancel
meenavan - New Jersey,யூ.எஸ்.ஏ
17-பிப்-201311:02:40 IST Report Abuse
meenavan மீண்டும் அன்பின் ராஜு அவர்களுக்கு....... 17 வயதில் தன் குடும்பம் வாடினாலும் இன்னொரு குடும்பம் கெடக்கூடாது என்று நினைத்த நீங்கள் 30 வயதில் தன் குடும்பம் கெட்டாலும் தான் வாழவேண்டும் என்று நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு மலையளவு இருக்கிறது. பல விஷயங்கள் இங்கே ஆலோசிக்க வேண்டும் ராஜூ. வலிப்பது அதிகம் உங்களின் குழந்தையை நினைக்கும்போதுதான்.எழுத்துகளை இங்கே நான் தட்டத்தொடங்கும்போது கண்ணீர் கண்களில் கொட்டத்தொடங்குகிறது. அந்தப் பிஞ்சு என்ன குற்றம் செய்தது? ஒவ்வொருமுறையும் யாரோ ஒரு அப்பா தான் பெற்ற குழந்தையை கொஞ்சுவதை பார்க்கும்போதும் விளையாடுவதைப் பார்க்கும்போதும் அந்த மனதில் ஒரு வெறுமையும் தனிமையும் எழுவது நிச்சயம். காரணங்கள் புரியாத வயது.வாழ்க்கை என்ன கொண்டுவரப்போகிறது அந்தக் குழந்தைக்கு என்பது யாருக்கும் தெரியாது.எங்கிருந்தெல்லாம் ஏமாற்றங்கள் வரும் என்பது தெரியாது.அந்த ஏமாற்றங்கள் தந்தையிடம் இருந்து தொடங்க வேண்டாமே ராஜூ....பலரின் வாழ்க்கையின் இனிமையான காலங்கள் தொடக்கங்கள் மட்டும்தான்.அந்தத் கொஞ்ச தொடக்க இனிமைகளையும் ஒரு தந்தையாய் நீங்கள் துடைத்தெறிய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.சரியான விலாசத்துடன் தவறான முகவரிக்கு வந்துவிட்ட தபாலான என்று உங்களை சொல்லும் நீங்கள், ஒரு குழந்தையின் விலாசமே தொலைந்து விட காரணமாவது சரியா? அதுவும் அந்தக் குழந்தை நீங்கள் பெற்ற மகளெனும்போது..... ராஜூ: ஒருமுறை "கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே" என்ற பாடலைக் கேளுங்கள்.கேட்கும்போதெல்லாம் விழி நனைக்க வைக்கும் பாடல்.முடிந்தால் இந்த வாரம் ஆனந்த விகடனில் பொக்கிஷம் பகுதியை வாசியுங்கள்.காதல் நிறைவேறாத இரண்டு பெண்களின் கடிதங்களை மறுபதிப்பித்திருக்கிறார்கள் 1985 ஆம் வருட பதிப்பில் இருந்து. அந்தப் பெண்கள் அவர்களின் காதலில் வென்றிருந்தால் கூட அவர்கள் மேல் அவ்வளவு மதிப்பு வந்திருக்காது..........ஒரு காதல் மனதில் இருப்பது தவறில்லை...நினைக்குங்கால் ஒரு முறுவல் பூப்பதும் தவறில்லை... நிறையக் கணவர்களுக்கு அப்படி யாராவது மனதில் இருக்கலாம்..... நிறைய மனைவிகளுக்கு யாராவது அப்படி ஒருவரும் இருக்கலாம். நிறைய பேருக்கு அவர்கள் ஒரு முகமற்ற நிழல்கள்தான்....அந்த நிழலைத்தான் தன் துணைகளில் தேடுகிறார்கள். நிஜம் சுடும் ராஜூ...அந்தப் பெண்ணிற்கு ஒரு துணை தேட உதவுங்கள்.. தவறேயில்லை... ஒரு நடு நிலையில் யோசியுங்கள் ராஜூ...உண்மையில் அந்தப் பெண் (கணவனை இழந்தவர்)உங்களை மறுக்க வேண்டும், காரணங்கள் என்ன தெரியுமா? 1), இன்னொரு வாழ்வின் அஸ்தமனத்தில் என் வாழ்வு உதயமாக வேண்டாம் 2)இன்று மணந்த மனைவியையும் குழந்தையையும் சொந்தங்களையும் எனக்காக உதறும் நீங்கள், நாளை என்னை வேறு யாருக்காகவும் உதறி விடுவீர்களோ என்ற ஒரு ஆழ்மன பயத்துடன், சந்தேகத்துடன் ஒவ்வொரு பெண்ணுடன் நீங்கள் பேசும்போதும் ஒரு பதைபதைப்புடன் உங்களுடன் ஒரு நிம்மதியான வாழ்க்கை என்னால் வாழ இயலாது 3) மிக முக்கியமானது, தந்தையை இழந்த ஒரு குழந்தையில் மனமும், கணவனைப் பறிகொடுக்கும் ஒரு மனைவியின் மனமும் அவருக்கு புரிந்திருக்கும். தான் பெற்ற அந்த வலிகள் இன்னொரு பெண்ணுக்கு தன்னால் வரவேண்டுமா என்ற ஒரு யோசனை அவரிடம் வரவேண்டும்.......ஆனால் அந்தப் பெண் அப்படியெல்லாம் செய்வார் என்று நான் எதிர்பார்க்க மாட்டேன்.அதைத் தவறு என்றும் சொல்லமாட்டேன்..ஏனென்றால் கணவனை இழந்த ஒரு தாயின் பக்கம் விரல் நீட்டுவதை விட எல்லாம் இருந்தும் இல்லாதிருக்கும் ஒரு தந்தையின் பக்கம்தான் நான் விரல் நீட்டுவேன்.ராஜூ, நாளை என்ன என்பதை இயற்கையோ இறைவனோ தீர்மானிக்கட்டும்.இன்றைக்கு நீங்கள் வாழுங்கள்.ஒரு குழந்தையை குழந்தையாய் வாழவையுங்கள். நாளையை சிந்திக்கவேண்டாம். இரண்டரை வருடங்கள் உங்கள் வாழ்க்கையில் 2 வருடங்கள் உங்கள் மகளின் வாழ்க்கையில் - உங்களின் ஒவ்வொரு முத்தங்களும் எத்தனாயிரம் பூக்களை பூக்கச் செய்திருக்கும் தெரியுமா இத்தனை நாட்களில்.. நாளை நீங்கள் அவளின் வாழ்க்கையில் இருந்து விலகுவது நிஜமானாலும், இன்று அவளுக்குத் தந்தையாய் இருங்கள். உங்களின் நிம்மதி அங்கு கிடைக்கும். மதுவிலல்ல.உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையிலும் கண்ணீரிலும் தோய்த்து எழுதப்பட்டவை .உங்களை வெறுமனே வார்த்தைகளால் உற்சாகப்படுத்தவோ ஊக்கப்படுத்தவோ சொல்லவில்லை. உங்களில் இடத்தில் என்னை வைத்து சொல்கிறேன்.ஒரு நல்ல மனதின் தடுமாற்றமாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.ஒரு சில வார இறுதிகளுக்கு சில அனாதைக்குழந்தைகளின் ஆசிரமத்திற்கு சென்று வாருங்கள்.உதவுங்கள் உதவுங்கள் உதவுங்கள்.தயவுசெய்து செய்யுங்கள்.அது உங்களை உங்களுக்கு புரியவைக்கும்.....வாழ்வின் அர்த்தங்கள் வாழ்வு வாசல் தேடி வந்திருக்கும்போது புரிவதில்லை ராஜூ...அது புரியும்போது வாழ்க்கை வணக்கம் சொல்லி விடைபெறத்தயாராக இருக்கும்.வாழ்க்கையைப் புரியுங்கள் வாழுங்கள்...பொன்னுலகம் கண்ணில் காணும்வரை ஒரு பிஞ்சை கொஞ்சம் நிம்மதியாய் கண்ணுறங்க விடுங்கள்.... நட்புடன் மீனவன் , .
Rate this:
Share this comment
Cancel
PR Makudeswaran - madras,இந்தியா
17-பிப்-201309:01:45 IST Report Abuse
PR Makudeswaran ஒரு ஒரு பருவத்திற்கும் ஒரு ஒரு பழக்க வழக்கம் உண்டு.மடியில் கிடத்தி கொஞ்சுவது ஒரு பருவத்தில்.அடுத்த அடுத்த பருவங்களில் அவனது செயல்களை திறமைகளை பேச்சை நடவடிக்கைகளை பாராட்டி கொஞ்சலாம்.அதுவும் கொஞ்சல்தானே.மடியில் போட்டு விளையாடினால்தான் கொஞ்சுவது என்று அர்த்தமா?. மகனை கொஞ்சும் நீங்கள் மகளையும் அதுபோல் கொஞ்சுவது உண்டா? ஒருவேளை இருவரையும் ஒருபோல பாவித்து கொஞ்சி இருந்தால் கணவரின் ஆழ்மனதில் சஞ்சலம் உண்டாகி இருக்காதா கொஞ்ச நாளைக்கு அவர் விருப்பம் போல் நடந்து கொள்ளுங்கள்.அவரின் சந்தேகம் அதுவாகவே விலகிவிடும்.உங்கள் இருவரின் மாறுபட்ட நடவடிக்கைகளினால் பையனின் மனதில் பிரச்சினை வராமல் பார்த்துகொள்ளுங்கள்.இறையருள் துணை புரியும். ..
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
18-பிப்-201313:26:30 IST Report Abuse
LAX"அம்மாவுக்கு மகனிடம் பாசம் அதிகமாக இருப்பதும், அப்பாவுக்கு மகளிடம் அன்பு அபரிமிதமாக இருப்பதும், வெகு இயல்பானது." என்றாலும், அம்மாவின் அன்புக்காக பாசத்திற்காக ஏங்கும் பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆனால் தாய் அதை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து மகனிடம் மட்டுமே அன்பைப்பொழிந்து அக்கறை காட்டுகிறாள். இது எத்தனை வயதானாலும் மகள் மனதில் தீராத வடுவை ஏற்படுத்தும் என்பதையும் எடுத்துச்சொன்னாலும் அல்லது மகளின் நடவடிக்கைகள் மூலம் அவளின் தாய் புரிந்துகொள்வதே இல்லை. மனதளவில் தாய் மீது அதிக அன்பு வைத்து அவளின் பாசத்துக்காக ஏங்கினாலும் தாயின் புறக்கணிப்பால், மகளும் அதிக வெறுப்பையே உமிழ நேரிடும். இயல்பு.. இயல்பு.. என்று சொல்லியே.... தாய் - மகன் பாடல்களையே அதிகம் எழுதித்தள்ளும் கவிஞர்கள் தாய் - மகள் பாடல்களையும் (கேளடி கண்மணி படத்தில் வரும் கற்பூர பொம்மை ஒன்று.... பாடல்போல) அதிகம் எழுதுவார்களா? கவிஞர் தாமரை போன்றோர்கள் இதில் அக்கறை காட்டுவார்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.