மிதக்கும் தீவுகள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

தென் அமெரிக்கா கண்டத்தின், பெரு நாட்டில் உள்ள பழங்குடியினர், எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாக்க, ஒரு வினோதமான நடைமுறையை பின்பற்றுகின்றனர். அந்த நடைமுறை, ஆச்சரியமானது மட்டுமல்ல; அதிசயமானதும் கூட. பெரு மற்றும் பொலிவியா நாடுகளின் எல்லையில், டீட்டிகாகா என்ற, அழகான, பிரமாண்டமான ஏரி உள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள, மிகப் பெரிய ஏரிகளில், இதற்கு முக்கிய இடம் <உண்டு. இந்த ஏரியில், 27 ஆறுகள் கலக்கின்றன.
கடல் மட்டத் திலிருந்து, 3,812 மீட்டர் <உயரத்தில், இந்த ஏரி அமைந்துள்ளதால், மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கும். இந்த ஏரியைச் சுற்றியுள்ள, மலை மற்றும் வனப் பிரதேசங்களில், ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். சிறு சிறு குழுக்களாக இயங்கி வருகின்றனர். ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினரை பார்த்தாலே, பகை நெருப்பு பற்றிக் கொள்ளும். பயங்கர ஆயுதங்களுடன், இரு தரப்பினரும், மோதிக் கொள்வர். இங்கே, உயிரிழப்புகள், சர்வ சாதாரணம்.
சட்டம்-ஒழுங்கு வரம்பிற்கு <உட்படாதவர்கள் என்பதால், இவர்களுக்கு இடையேயான ரத்தக் களறிகள் தொடர்ந்து நடக்கின்றன. இவர்களில், உரோஸ் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள், டீட்டி காகா ஏரிக்கு, மிக அருகில் வசிக்கின்றனர். இவர்களின் மொத்த எண்ணிக்கையே, 400லிருந்து, 500 வரை தான். எதிர் தரப்பிடமிருந்து, தங்களை பாதுகாப்பதற்காக, இவர்கள் பின்பற்றும் நடைமுறை அலாதியானது. ஏரியைச் சுற்றியுள்ள இடங்களில், அடர்ந்து வளரும், நாணல் செடிகள் தான், இவர்களின் தற்காப்பு கவசமாக விளங்குகிறது.
இந்த நாணல்களை வெட்டி எடுத்து, உலர வைத்து, பக்குவப்படுத்தி, அழகான குடில்களை செய்கின்றனர். ஒவ்வொரு பத்து குடில்களுக்கும் கீழும், நாணல்களாலேயே, கட்டுமரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, ஏரிகளில் மிதக்க விடுகின்றனர். தூரத்திலிருந்து பார்க்கும்போது, ஏரிக்குள், அழகான, பல குட்டித் தீவுகள் மிதந்து செல்வது போல் காட்சி அளிக்கும். எதிரிகள் வந்து விட்டால், கட்டுமரங்கள், படகுகளை எப்படி துடுப்பு போட்டு, இயக்குகிறோமோ, அதேபோல், இந்த குடில்களையும் இயக்கி, அங்கிருந்து தப்பித்து விடுவர்.
மிக ஆழமான பகுதிகளுக்கு சென்று விட்டால், எதிரிகளால், அவர்களை பின் தொடர முடியாது என்பதால், இந்த நடைமுறையைத் தான், பல ஆண்டுகளாக, உரோஸ் பிரிவினர் பின்பற்றுகின்றனர். துவக்க காலத்தில், வெறும் நாணல்களை மட்டுமே, இந்த மிதக்கும் தீவுகளுக்கு பயன்படுத்தி வந்த, பழங்குடியினர், தற்போது, தெர்மாக்கோல் போன்ற பொருட்களையும், பயன்படுத்துகின்றனர். எதிரிகளிடமிருந்து <உயிரை காப்பாற்றுவதற்காக பயன்படும் நாணல்கள், உரோஸ் பிரிவினரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றன.
நாணல் புதரிலிருந்து, அயோடின் தயாரித்து, அதை விற்பனை செய்கின்றனர். இதில், உள்ள பூக்களை பக்குவப்படுத்தி, பானங்கள் தயாரிக்கின்றனர். மேலும், மருந்து பொருட்களாகவும், இவற்றை பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக, இந்த மிதக்கும் தீவுகளில், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தும், தகடுகளும் தென்படுகின்றன. இவற்றின் மூலமாக, விளக்குகள், ரேடியோ, "டிவி' போன்ற, நவீன வசதிகளையும், உரோஸ் பிரிவினர் பயன்படுத்துகின்றனர்.
***

எஸ் ரேவதி

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumat - tamil nadu  ( Posted via: Dinamalar Android App )
17-பிப்-201312:54:23 IST Report Abuse
kumat arumaiyana thagaval....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.