கவிதைச்சோலை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

எங்கே தேடுவேன்?

* புழுதிப்படர்ந்த சாலையில்
வெப்பக் காற்றை
உள்வாங்கி
நெருப்பை உமிழ்ந்து
கொண்டே தேடுகிறேன்...

* ஆடி ஓடி விளையாண்ட
அகன்ற வீதிகளை...

* பாதசாரிகள் படுத்துறங்க
நிழல் தந்த
பாதையோர புளியமரங்களை...

* தும்பி பிடிக்க
தம்பியர் புடைசூழ சென்ற
தான் தோன்றி மலையை...

* காட்டுக் குயில்களின்
கானம் ஒலித்த
கருவேலம் காடுகளை...

* அகன்று விரிந்து
ஆர்ப்பரித்துச் சென்ற
ஆற்றுப் படுகையை...

* காட்டு வெள்ளம்
வந்து போகும்
காட்டாறு ஓடைகளை...

* பார்த்து ரசித்து
பரவசப்பட்டுப் போன
பசுமையான வயல்வெளிகளை...

* கருத்தை கவர்ந்த
காதலியுடன்
கதைகள் பல பேசி
காலம் கரைத்த
கண்மாய்க் கரைகளை...

* என் இளமையை
தாலாட்டிய இயற்கையே...

* பேராசை பேய்களின்
பெருத்த வயிற்றுக்குள்
இரையாகிப் போன
உன்னை எங்கே தேடுவேன்?

ப.லட்சுமி, கோட்டூர்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SHANKAR - BANGALORE,இந்தியா
20-பிப்-201311:21:24 IST Report Abuse
SHANKAR கவிதை சோலைக்கு இந்த கவிதையை பதிவு செய்ய விரும்புகிறேன் நாரியே உனக்கு நன்றி உயர்ந்த இடத்தில் வளர்ந்தவள் நீ கூட்டுக் குடும்பத்தில் நாட்டம் உள்ளவள் நீ அந்த சூரியனையே தொட நினைக்கும் எண்ணம் கொண்டு வளர்பவள் நீ அந்த நிலவின் குளிர்ச்சியை நெஞ்சில் கொண்டவள் நீ ஜனங்களின் அன்றாட வாழ்வில் ஒன்றானாவள் நீ உன்னை நார் நாராக உரித்தாலும் மனம் தளராதவள் நீ உன்னைத் தரையில் அடித்தாலும் அடித்தவரின் தாகம் தீர்ப்பவள் நீ உன்னை வெட்டியவருக்கும் தலையாலே தண்ணீர் தந்து தாகம் தணிப்பவள் நீ உன்னை செக்கில் இட்டுப் பிழிந்தாலும் எண்ணெய் தருபவள் நீ உன்னைப் பிரித்துத் திரித்தாலும் உறுதியான கயிறு தருபவள் நீ உன் ஓட்டை உடைத்து எரித்தாலும் உபயோகப்படுபவள் நீ நாரியே உன்னக்கு நன்றி. தியாகியான உன்னைப் பார்த்துத் தான் பெண்களையும் நாரி என்று சொன்னார்களோ. வெள்ளை உள்ளம் கொண்டவள் நீ
Rate this:
Share this comment
Cancel
gangaimani - madurai,இந்தியா
19-பிப்-201319:18:35 IST Report Abuse
gangaimani அழகு மலர் சேர்த்து வடித்த தேன் அள்ளி பருக தந்தமைக்கு நன்றி சகோதரி
Rate this:
Share this comment
Cancel
s.manthakkalai - doha,கத்தார்
18-பிப்-201318:56:30 IST Report Abuse
s.manthakkalai உணர்வை வருடியது உண்மையை உலுக்கியது இயற்கை தோட்டத்தை இல்லாது அழித்துவிட்டு செயற்கை தோட்டம் அமைத்து செலவுசெய்து பார்க்கவைக்கும் சுயநல கூட்டத்திற்கு சூடு வைக்கும் கவிதை இது -வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
sankar - chennai  ( Posted via: Dinamalar Android App )
17-பிப்-201308:31:24 IST Report Abuse
sankar arumai
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.