"பாம்பு என்றால், படையும் நடுங்கும்' என்ற பழமொழியை, பொய்யாக்கி இருக் கிறான், சீனாவைச் சேர்ந்த இந்த சிறுவன். சீனாவின், டொங்கூன் என்ற பகுதியைச் சேர்ந்த, அஜெ லியு என்ற, 13 வயதுச் சிறுவன், 15 அடி நீளமுள்ள, மலைப் பாம்புடன், கொஞ்சி விளையாடியும், படுத்து உறங்கியும், மலைக்க வைக்கிறான்.
இவன் பிறப்பதற்கு முன், இவனது தந்தை, வனப் பகுதிக்கு சென்றபோது, மலைப் பாம்பு முட்டை ஒன்றை எடுத்து வந்துள்ளார். அந்த முட்டையிலிருந்து பிறந்தது தான், இந்த மலைப் பாம்பு. சிறுவன் பிறந்ததும், பாம்பும் அவனும், நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.
சின்ன வயதிலிருந்தே, பாம்புடன் விளையாடி வருவதால், இப்போது, அந்த பாம்பு, பல அடி நீளத்துக்கு வளர்ந்தாலும், அதை பார்த்து, அவன் பயப்படுவது இல்லை. பாம்பும், அவனை ஒன்றும் செய்வது இல்லை.
சிறுவனின் பெற்றோர், அவனை தனியாக, வீட்டில் விட்டுச் சென்றாலு<ம், பாம்பு தான், அவனுக்கு காவல் இருக்கிறது. இந்த அதிசய சிறுவனின், துணிச்சலைப் பார்த்து, ஆச்சரியப்படுகின்றனர், சீன மக்கள்.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.