E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பல்லை தேய்ப்பது எப்படி
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் எனது மகன், பள்ளி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று கீழே விழுந்ததில் பல்லில் அடிபட்டது. விளையாடும்போது பற்களை பாதுகாப்பது எப்படி?
குழந்தைகள், பெரியவர்கள் அனைவருமே விளையாடும்போது பற்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை, ஸ்கேட்டிங் விளையாட்டுக்களின் போது, வாய், தாடை எலும்பில் அடிபட வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க, "மவுத் கார்டு' என்ற வாய் பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும். எதிர்பாராமல் படும்அடியில் இருந்து, நாக்கு, உதடு, பற்கள் பாதுகாக்கப்படும். இதனை அணிவதால் எந்த அசவுகரியமும் இருக்காது.
பற்களில் கம்பி போட்டுள்ளவர்களும் அதற்கேற்றவாறு இவற்றை அணியலாம். அதை சுத்தம் செய்ய, பல் தேய்க்கும் பிரஷ்ஷால் சுத்தம் செய்துவிட்டு, தண்ணீரில் போட்டு வைத்தால் போதும்.

நான் சரியான பிரஷ்ஷால் தேய்க்காததால் எனக்கு சொத்தை பற்கள், பல்கூச்சம் ஏற்பட்டுள்ளது என, டாக்டர் கூறுகிறார். சரியான பிரஷ்ஷை தேர்வு செய்வது எப்படி<? சரியான முறையில் பல்தேய்ப்பது எப்படி?
சரியான பிரஷ்ஷை தேர்வு செய்வதும், சரியான முறையில் பல்தேய்ப்பதும்தான், பற்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது. முதலில் உங்கள் வாயின் அளவிற்கேற்ப பிரஷ்ஷை தேர்வு செய்ய வேண்டும். பிரஷ் அளவு பெரிதாக இருந்தால் சரியாக எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியாது. அடுத்து பிரஷ் மிகவும் மிருதுவாகவும் இருக்கக் கூடாது; கடினமானதாகவும் இருக்கக் கூடாது. மிக மிருதுவாக இருந்தால் சரியாக சுத்தம் செய்யாது. கடினமாக இருந்தால், பற்கள் சீக்கிரம் தேயத் துவங்கும். ஒரு நாளைக்கு 2 முறை பல்துலக்கினால் போதுமானது. அடிக்கடி பல்துலக்குதல் பற்களுக்கு நல்லதல்ல. பல் துலக்கும்போது பற்களின் வெளிப்புறம், உள்புறம், ஈறுகள், நாக்கு போன்ற எல்லா இடங்களையும் நிதானமாக சுத்தம் செய்ய வேண்டும். 2, 3 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். நீளவாக்கில் துலக்காமல், மேலும், கீழுமாக அல்லது வட்ட வடிவமாக பல் துலக்க வேண்டும். துலக்கிய பின், பிரஷ்ஷை உலர்வான இடத்தில் வைக்க வேண்டும். ஈரமான இடத்தில் வைத்தால், பிரஷ்ஷில் நிறைய கிருமிகள் தங்கும். 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். இப்படி சரியான பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான பல்லை பெறலாம்.
- டாக்டர் கண்ண பெருமான்,
மதுரை. 94441-54551.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.