"சளி பிடித்தால் அசைவ உணவு நல்லதா'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

எனது 7வயது மகனுக்கு சளி, இருமல் அதிகம் இருந்தது. அதற்கு அசைவ உணவு எடுத்தால் நல்லது, சளிபிடிக்காது எனக் கூறுகிறார் எனது தாய். இதுசரியா?
நம்நாட்டில் செய்யப்படும் அசைவ உணவு உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்துகிறது. உடல் பருமன் உருவாக அசைவ உணவு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. வெளிநாடுகளில் குழந்தைகளின் படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கும், விளையாட்டுக்கும் கொடுக்கின்றனர். ஆனால் நம்நாட்டில் இதில் குறைவான விழிப்புணர்வே உள்ளது. இதுபோல அசைவ உணவு குறித்த விழிப்புணர்வும் குறைவே. நம் இந்தியாவில் இருதய நோய், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறையும், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையும்தான்.
பொதுவாக நம் உடல் மற்றும் ஜீரண மண்டலம் சைவ உணவிற்காகவே வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனால் சைவ உணவே நல்லது. உங்கள் குழந்தைக்கு சைவ உணவு மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் குறைவாக பயன்படுத்தி, அசைவ உணவு எடுத்துக் கொண்டால் தவறில்லை.

எனது ஆறு வயதான குழந்தைக்கு, 3 ஆண்டுகளாக மூச்சுத் திணறல் உள்ளது. அவனுக்கு வாழ்நாள் முழுவதும் இம்மூச்சுத் திணறல் இருக்குமா? அவன் ஒரு ஆஸ்துமா நோயாளியாகவே இருப்பானா?
குழந்தைகளுக்கு உள்ள ஆஸ்துமாவை, "ஹைபர் ரீயாக்டிவ் ஏர்வே டிசீஸ்' என்பர். 80 சதவீதம் முதல் 90 சதவீத குழந்தைகளுக்கு அவர்கள் வளர, வளர நுரையீரல் திறன் முன்னேற்றம் அடைந்து ஆஸ்துமா மறைந்துவிடும். ஒரு சில குழந்தைகளுக்கு ஆஸ்துமா சரியாகிவிடும், ஆனாலும் சில ஆண்டுகள் கழித்து, திரும்ப வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பெரும்பாலோருக்கு முழுமையாக சரியாகிவிடும். ஆனாலும் விட்டுவிடாமல், இன்ஹேலர் எடுத்துக் கொள்வது நல்லது.
பொதுவாக தாய்மார்களுக்கு இன்ஹேலர் பற்றிய பயம் அதிகமாகவே உள்ளது. நம் கண்களுக்கு சொட்டு மருந்து இடுவது போலவே, நம் நுரையீரலுக்குள் மருந்தை செலுத்த இன்ஹேலர்கள் பயன்படுகின்றன. அதனால் இன்ஹேலர் பற்றி பயமே தேவையில்லை. உங்கள் குழந்தைக்கு அலர்ஜி இருந்தால், அதை தவிர்க்க இன்ஹேலர் உதவியாக இருக்கும்.

நம் நாட்டில் நுரையீரல் சிகிச்சை முறையில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி கூறுங்களேன்?
மருத்துவத் துறையில் இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. வெளிநாடுகளில் கிடைக்கும் மருந்து, நம்நாட்டில் 25 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கிறது. மேலும் தேவைக்கு ஏற்ப மருந்துகள் அதிகளவில் கிடைக்கிறது. நுரையீரல் துறையிலும், வெளிநாடுகளுக்கு இணையாக நம் நாட்டிலும், அதிதீவிர நுரையீரல் சிகிச்சை அளிக்க முடிகிறது. நுரையீரல் நோயை கண்டறிய பல நவீன இயந்திரங்களும், நவீன பரிசோதனை முறைகளும் கிடைக்கிறது. வெளிநாடுகளில் செய்யப்படும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை கூட, நம்நாட்டில், நம் டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். மேலும் எந்த ஒரு புதுமையான சிகிச்சை முறை வெளிநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதே சிகிச்சை முறை, நம்நாட்டிலும் உடனே செயல்படுத்தப்படுகிறது.
- டாக்டர் எம். பழனியப்பன்,
மதுரை. 94425-24147

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.