E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
உயரும் ஆண்ட்ராய்ட், விழும் விண்டோஸ்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
00:00

ஸ்மார்ட் போன்களில், அதிக எண்ணிக்கை யில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் உயர்ந்துள்ளது. விண்டோஸ் தன் நிலையில் இருந்து சரிந்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டினைக் கணக்கிட்ட காம் டாட் ஸ்கோர் நிறுவனம் இதனைக் கண்டறிந் துள்ளது. ஸ்மார்ட் போன்களில் 53.4% போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றன. இதனை அடுத்து, ஆப்பிள் நிறுவனத்தின், ஐ.ஓ.எஸ். சிஸ்டம், 36.3% கொண்டுள்ளது. பிளாக் பெரி மூன்றாவது இடத்தையும், விண்டோஸ் போன் நான்காவது இடத்தையும் கொண்டுள்ளன. விண்டோஸ், முன்பு இருந்த பங்கில், 0.7 % குறைந்து, 2.9 % மட்டுமே கொண்டுள்ளது. இது எதனால் ஏற்பட்டது? விண்டோஸ் போன் 8, சர்பேஸ் சாதனங்கள் என மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்த போது, விண்டோஸ் போன் சிஸ்டம், ஸ்மார்ட் போன்களில் அதிக அளவில் இடம் பிடிக்கும் எனவே எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பிற்கு உரம் சேர்க்கும் வகையில் நோக்கியாவின் லூமியா வரிசை போன்கள் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் வெளிவந்தன. ஆனால் அது நடக்கவில்லை.
இந்த மந்த நிலைக்குக் காரணம் கூகுள் தான். விண்டோஸ் போன் 8 சிஸ்டத்தில் இயங்கும் வகையில், அப்ளிகேஷன்களைத் தயாரித்து வழங்கப் போவதில்லை என்று அறிவித்து, விண்டோஸ் போன் 8 பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை எனவும் அறிவித்தது.
இதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் போன் 8 சிஸ்டம், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங் களைக் காட்டிலும் திறன் கொண்டது என மக்களிடம் எடுத்துச் சொல்லவில்லை, செல்லவில்லை. எனவே ஆண்ட்ராய்ட் போன் சிஸ்டத்திற்கான போட்டியில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ்.6 ஆகியவையே முன்னணியில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.