பிப்ரவரி முதல் வாரத்தில் அகுவா நிறுவனம் குறைந்த விலை ஆண்ட்ராய்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அகுவா ஒன்டர் என அழைக்கப்படும் இதன் அதிக பட்ச விலை ரூ. 9,990. இதன் திரை தொடு உணர் திரையாக 4.5 அங்குல அகலத்தில் உள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம், 8 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமரா, மற்றும் முன்புறமாக 1.3 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா, இரண்டு மைக் என அமைக்கப்பட்டுள்ளது. பைல் மேனேஜர், வாட்ஸ் அப், பேஸ்புக், நிம்பஸ், ஸ்கைப் போன்ற பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் பதிந்தே தரப்படுகின்றன.
இதன் தடிமன் 8.9 மிமீ. எடை 125 கிராம். இரண்டு சிம் இயங்குகிறது. ஒளி, அசைவு, அருகாண்மை ஆகியவற்றை உணர்ந்து செயல்படும் வகையில் பலவித சென்சார் வசதிகள் தரப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும். 3ஜி, வை---பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவை நெட்வொர்க் இணைப்பினைச் சிறப்பாகக் கையாள்கின்றன. 512 எம்.பி. ராம் நினைவகம், 1.93 ஜிபி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி நினைவகமாக அதிகப்படுத்தும் வசதி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 1,800 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை மற்ற வசதிகளாக உள்ளன.
கருப்பு மற்றும் சில்வர் வண்ணங்களில் இது கிடைக்கிறது. இன்டெக்ஸ் நிறுவனங்களின் தனி சிறப்பு விற்பனை நிலையங்கள் மற்றும் அனைத்து மொபைல் போன் சில்லரை விற்பனை நிலையங்களில் இது கிடைக்கிறது. இத்துடன் இன்டெக்ஸ் நிறுவனம் தன் அகுவா வரிசையில் 8 ஸ்மார்ட் போன்களை அறிமுகப் படுத்தியுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.