இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விநாடி வினா
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
00:00

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து வரும் இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பிரவுசர் இன்றும் பெரும் பான்மையான இணைய வாடிக்கை யாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெகுகாலமாகப் புழக்கத்தில் இருந்த நெட்ஸ்கேப் பிரவுசரை ஒதுக்கிவிட்ட காலத்திலிருந்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொடர்ந்து பிரவுசர் உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து வந்துள்ளது. எளிதில் வைரஸ்கள் தாக்கும் வகையில் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும், புதிய பதிப்பிற்கு மாறியே ஆக வேண்டும் எனக் கட்டாயப் படுத்தப்பட்டாலும், இன்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனாலேயே பலர் இதன் தொடர்ந்த அபிமானிகளாக இருந்து வருகின்றனர். இதோ இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் உள்ள அன்பான தொடர்பினைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு விநாடி வினா.

1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 1.0 எப்போது, எவ்வகையில் வெளியானது?
அ) விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தும் புரோகிராமாக.
ஆ) இரண்டு 3.5 அங்குல பிளாப்பிகளில் பதியப்பட்டு விற்பனை செய்யப்படும் புரோகிராமாக.
இ) விண்டோஸ் 95 சிஸ்டத்துடன் மைக்ரோசாப்ட் ப்ளஸ் ஜம்ப் ஸ்டார்ட் கிட் உடன் இணைந்து.
ஈ) மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் இமெயில் புரோகிராமுடன் இணைந்து.

2. எப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், இலவசமாக, அதாவது விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைத்து தரப்பட்டது?
அ) ஐ.இ. 2 விண்95 உடன் இணைந்து
ஆ) ஐ.இ. 2 விண் 95 ஓ.எஸ்.ஆர். 1 உடன்
இ) ஐ.இ.3 விண் 95 ஓ.எஸ்.ஆர்.2 உடன்
ஈ) ஐ.இ.4 விண் 95 ஓ.எஸ்.ஆர்.4 உடன்

3. விண்டோஸ் 98 இரண்டாம் பதிப்புடன் தரப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5, மற்ற எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் தரப்பட்டது?
அ) ஆப்பிள் மேக் இன் டோஷ்
ஆ) மேக் இன்டோஷ் மற்றும் சோலாரிஸ்
இ) மேக் இன்டோஷ், சோலாரிஸ் மற்றும் எச்.பி. யு.எக்ஸ்
ஈ) மேக் இன்டோஷ், சோலாரிஸ் மற்றும் எச்.பி. யு.எக்ஸ் மற்றும் பாம் ஓ.எஸ்.

4. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் எந்த பதிப்புகள் இயங்கும்?
அ) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5,6,7,8 மற்றும் 9
ஆ) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 5,6,7மற்றும் 8
இ) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6,7மற்றும் 8
ஈ) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6,மற்றும் 7

5. விண்டோஸ் 7, இன்டர்நெட் எக்ஸ் புளோரரின் எந்த பதிப்பினை இணைந்து தருகிறது ?
அ) ஐ.இ. 8
ஆ) ஐ.இ. 9
இ) ஐ.இ. 10
ஈ) மேலே காட்டப்பட்டவற்றுள் எதுவும் இல்லை.

6. இன் பிரைவேட் பிரவுசிங் என்ற வசதி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 உடன் வழங்கப்பட்டது. இதனை இயக்குகையில், கீழ்க்காணும் எந்த செயல் அமலாகும்?
அ) நீங்கள் காணும் இணைய தளங்களிலிருந்து, உங்கள் ஐ.பி. முகவரியை மறைக்கிறது.
ஆ) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உங்கள் பிரவுசிங் ஹிஸ்டரியைப் பதிவு செய்து கொள்வதனைத் தடுக்கிறது.
இ) குக்கீஸ் புரோகிராம்களைத் தடுக்கிறது
ஈ) மேலே சொல்லப்பட்ட அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்கிறது.

7. ஒரு நிலையில், விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை, அதனை நீக்கும் வசதியும் தரப்பட்டது. அது எந்த பதிப்பு?
அ) விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.
ஆ) விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.
இ) விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8
ஈ) விண்டோஸ் 8

8. எத்தனை இணைய தளங்களை ஒரே நேரத்தில், மெட்ரோ இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் திறக்கலாம்?
அ) 6
ஆ) 10
இ) 12
ஈ) கம்ப்யூட்டரின் மெமரியைப் பொறுத்தது.

9. மெட்ரோ இ.எ.10ல், பேவரிட் லிஸ்ட்டை எப்படிக் கொண்டு வருவீர்கள்?
அ) மேலிருந்து அல்லது கீழிருந்து ஸ்வைப் செய்து
ஆ) மேலிருந்து அல்லது கீழிருந்து ஸ்வைப் செய்து அல்லது இணைய தளத்தில் ரைட் கிளிக் செய்து
இ)ஸ்வைப் செய்து அல்லது ரைட் கிளிக் செய்து, பின்னர் அட்ரஸ் பாரில் டேப் அல்லது கிளிக் செய்து
ஈ) கீழிருந்து ஸ்வைப் செய்து, பின்னர் நிறுத்தி, அதன் பின் மீண்டும் கீழாக ஸ்வைப் செய்து.

10) மெட்ரோ இ.எ.10ல், ஓர் இணைய தளத்தினை எப்படி பேவரிட் லிஸ்ட்டில் சேர்ப்பீர்கள்?
அ) உங்களால் முடியாது.
ஆ)மேலிருந்து கீழாக ஸ்வைப் செய்து அல்லது இணைய தளத்தில் ரைட் கிளிக் செய்து, அதன் பின்னர் ரெஞ்ச் ஐகான் மீது கிளிக் செய்து, ஆட் டு பேவரிட்ஸ் தேர்ந்தெடுத்து.
இ)சார்ம்ஸ் பார் கொண்டு வந்து, அதில் ஆட் டு பேவரிட்ஸ் மூலம்.
ஈ)கண்களை மூடி எது செய்தாலும், பேவரிட்ஸ் லிஸ்ட்டில் சேர்ந்துவிடும்.

விடைகள்:
1. இ) 2. ஆ) 3. இ) 4. இ) 5. அ) 6. ஆ). 7. இ). 8. ஆ) 9. இ) 10. ஆ).

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.