ஜெயில் பிரேக்கிங், ரூட்டிங் எனத் தகவல்களைத் தெளிவாகவும், துல்லிதமாக அவை எதனைக் குறிக்கின்றன என்றும் தந்தது மிகப் பயனுள்ளதாக உள்ளது. இதுவரை இவை பற்றி அறியாமல், அனைத்தும் ஒன்றே எண்ணி இருந்தேன். நன்றி.
பேரா. எஸ். ஸ்ரீனிவாசன், மதுரை.
நீங்கள் காட்டியுள்ள தளத்தில் உள்ள டிக்ஷனரி, உண்மையிலேயே அதிகம் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சார்பான சொற்கள், தேர்ந்தெடுக்கப்படும் மொழிகள் அனைத்திலுமான சொற்கள் என எந்த டிக்ஷனரியும் தராத வகையில் தகவல்கள் கிடைக்கின்றன.
சி. ஜேசுதாஸ், மதுரை.
விரும்பும் இணைய தளம் கிடைக்காமல், பிழைச் செய்திகள் வந்தால், நமக்கு எரிச்சல் தான் மிஞ்சும். உங்கள் விளக்கம், இந்த சூழ்நிலையைப் பொறுமையாகக் கையாளும் சூழ்நிலையைத் தருகிறது.
சா. மீனாள், காரைக்குடி.
கிராப்பர் புரோகிராம் பயனுள்ளதாக உள்ளது. ஸ்கிரீன் ஷாட் எடுக்கையில், மொத்தமாக எடுத்து, பின் கிராப் செய்வதைக் காட்டிலும், பதியும் போதே, நமக்கு வேண்டியதைக் குறித்து அமைக்க உதவிடுகிறது. இலவசமாக இதனைத் தருபவர்களுக்கும், தகவலைத் தந்த உங்களுக்கும் நன்றி.
டாக்டர் தி.எழில் சாகரன், சென்னை.
நம் நாட்டைவிட்டுக் கொடுக்காமல், இந்தியா வில் இணையப் பயன்பாடு குறித்த தகவல்களை வீசி, மிகவும் பாசிடிவ்வாக பதில் அளித்தது, தங்களையும் கம்ப்யூட்டர் மலரையும் உயர்த்துகிறது.
டி.பிரகதீஷ், உசிலம்பட்டி.
என்.எப்.சி. தொழில் நுட்பம் புழக்கத்தில் வந்தால், நமக்கு எவ்வளவோ வேலை மிச்சம் ஆகும். நிதிப் பரிமாற்றத்திலும் பாதுகாப்பு கிடைக்கும்.
என். சுகவனம், கோவை.
வேர்ட் மற்றும் எக்ஸெல் டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் வாரந்தோறும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். எங்களுக்கு மிகவும் உதவிடும் பகுதி அதுதான். அதே போல குழந்தைகளுக்கான இணைய தளங்கள் குறித்தும் எழுதவும்.
சி.இலட்சுமி, காரைக்கால்.
ஏற்கனவே, கம்ப்யூட்டரில் வைரஸ் பரவுவதை நம்மால் தடுக்க இயலாமல், அடிக்கடி பிரச்னைக்குள்ளாகிறோம். இதில் மொபைல் போன் வைரஸ் பரவுவதாக எழுதி உள்ளீர்கள். மொபைல் போன் விற்பனை செய்திடும் நிறுவனங்கள், இதற்கான பாதுகாப்பு தரும் புரோகிராம்களை நிறுவித் தந்தால், நலமாக இருக்கும். நீங்கள் இதனை வற்புறுத்தி எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்.சின்னச்சாமி, மதுரை.
சிறிய கட்டங்களில் தரும் தொழில் நுட்பச் சொற்களும், அவற்றிற்கான விளக்கங்களும் எங்களுக்குக் கல்வி கற்பது போல் உள்ளது. இவற்றை ஏன், ஒன்று அல்லது இரண்டு மட்டுமே தருகிறீர்கள். அதிகமாகத் தந்தால், என் போன்ற மாணவர்களுக்கு உதவியாய் இருக்கும்.
ஆர்.கே. குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.
சில வேளைகளில் எந்த பிழைச் செய்தியும் இல்லாம, இணைய தளமும் இறங்காமல் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கான விளக்கத்தினையும், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையும் தரவும்.
ஆர். கணேச மூர்த்தி, விழுப்புரம்.
மொபைல் போன் பேட்டரிகளில் எவற்றைப் பின்பற்றக் கூடாது என நீங்கள் கொடுத்துள்ள பல வழிகளை, நாம் தொடர்ந்து மேற்கொண்டு தான் வருகின்றோம். சரியான நேரத்தில் எச்சரிக்கையாக உள்ளது உங்கள் தகவல். நன்றி.
எம். சகாபுதீன். உத்தமபாளையம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.