பவர் கிரிட் கார்ப்பரேஷனில் பணி வாய்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
00:00

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே மின்சக்தியை திட்டமிடல், ஒருங்கிணைத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் கட்டுப்படுத்தும் பணிகளில் மத்திய பகிர்ந்தளிக்கும் நிறுவனமாக பவர் கிரிட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மொத்தம் நாடு முழுவதும் பரந்து விரிவுபட்டு இயங்குவதுடன் சர்வதேச தரத்துடன் செயல்பட்டு வருகிறது. நாட்டின் மொத்த மின்பகிர்வில் 45 சதவிகிதம் இந்த நிறுவனத்தின் மூலமாகவே இருப்பது மற்றொரு சிறப்பாகும்.
இவ்வளவு பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர் மற்றும் பீல்டு சூப்பர்வைசர் பிரிவுகளில் உள்ள காலி இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:


பவர் கிரிட் நிறுவனத்தின் பீல்டு இன்ஜினியர் பதவி சி.எப்.இ., என்று பெயரில் 52ம், பீல்டு சூப்பர்வைசர் பதவி சி.எப்.எஸ்., என்ற பெயரில் 108ம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பதவிகளுக்கு அரசு நிபந்தனைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர் போன்ற பிரிவினருக்கு இடஒதுக்கீடும் உள்ளது.

தேவைகள்:


பவர் கிரிட் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28.02.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சி.எப்.இ., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி.,(இன்ஜினியரிங்)அல்லது ஏ.எம்.ஐ.இ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
பீல்டு சூப்பர்வைசர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பைக் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஏனைய விபரங்கள்: தற்சமயம் நேர்காணல் வாயிலாகவே இந்தப் பதவிகளை நிரப்ப இந்த நிறுவனத்தின் நிர்வாகம் முடிவெடுத்துள்ள போதும் தேவைப்பட்டால் ஒரு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சி.எப்.இ., பிரிவாக இருந்தால் ரூ.200/-ம், சி.எப்.எஸ்., பிரிவாக இருந்தால் ரூ.100/-ம் டி.டி., வாயிலாக (ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்) Power Grid Corporation of India என்ற பெயரில் ஐதராபாத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பம், டி.டி., மற்றும் உரிய இணைப்புகளை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

The Cheif Manager (HR)/HOP,
Power Grid Corporation of India Ltd.,
SRTS&I, Regional Headquarters,
Kavadiguda Main Road,
Secunderabad - 500080
Andhra Pradesh

விண்ணப்பிக்க இறுதி நாள் :


28.02.2013

இணையதள முகவரி:

www.powergridindia.com/_layouts/PowerGrid/WriteReadData/file/career/SRTS_I/Advt_SRTS_I.pdf

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh Kumar R - Tiruppur,இந்தியா
20-பிப்-201322:12:00 IST Report Abuse
Rajesh Kumar R தினமும் வேலை வாய்ப்பு செய்திகளை ( அரசாங்க வேலை, கம்ப்யூட்டர் வேலை பிபிஒ வேலை மற்றும் பல வேலை வாய்ப்புகள் ) இலவசமாக பெற்றிடுங்கள் இந்த இணையத்தில் www.jobs365.in - A Free online Job Portal
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.