இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு என்ற நிறுவனம் ஐ.ஐ.எப்.டி., என்ற பெயரால் அனைவராலும் அறியப்படுகிறது. இந்த நிறுவனம் 1963ல் நிறுவப்பட்டது. சர்வதேச வர்த்தகத்தில் தொழில்முறை ரீதியிலான முன்னேற்றம் பெறவும், இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலும் இது துவங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் சர்வ தேச அளவில் இயங்குவதுடன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு உந்துதியாகவும் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் உள்ள புரொகிராம் அசோசியேட்ஸ் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
ஐ.ஐ.எப்.டி., நிறுவனத்தின் புரொகிராம் அசோசியேட்ஸ் பதவிக்கு எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., ஆகிய ஏதாவது ஒரு படிப்பை எந்தப் பிரிவிலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதே படிப்பை பிரசித்தி பெற்ற சர்வதேச நாடுகளின் பல்கலைக் கழகங்களின் வாயிலாக முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பிக்கும் தேதியில் இந்தப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இது தவிர ஆங்கில மொழியில் எழுத மற்றும் பேசுவதில் சிறந்த திறன் தேவைப்படும். இவை தவிர இன்டர்நெட் பயன்பாடு, எம்.எஸ்., வேர்டு, எக்ஸெல் போன்ற ஆபிஸ் பேக்கேஜ்களும் தெரிந்திருப்பது அவசியத் தேவையாகும்.
வேறு என்ன விபரங்கள்:
மாதம் ரூ.23 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் ஐ.ஐ.எப்.டி.,யின் புரொகிராம் அசோசியேட்ஸ் பதவிக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணல் மூலம் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பின்வரும் இ-மெயில் முகவரிக்கு உங்கள் தற்போதைய பயோடேட்டாவுடன் 25.02.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரத்தை பின்வரும் இணைய தளத்திலிருந்து அறியவும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.