கரன்சி நோட் பிரிண்டிங் ஆலை பணிவாய்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
00:00

கர்நாடக மாநிலம் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு பாங்க் நோட் பேப்பர் மில் இந்தியா லிமிடெட் எனப்படும் பி.என்.பி.எம்.ஐ.எல்., இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் 2010ல் உருவாக்கப்பட்டது. செக்யூரிட்டி பிரின்டிங் அண்டு மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்களின் இணைப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் உள்ள இள நிலைப் பிரிவைச் சார்ந்த 3 பிரிவுகளிலான 73 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:


ஜூனியர் கிரேடு - புரொடக்சன்/மெயின்டனன்ஸ் பிரிவிலான இந்தக் காலி இடங்களில் மெக்கானிகலில் 25 காலி இடங்களும், எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 26 காலி இடங்களும், கெமிக்கல் இன்ஜினியரிங்/பேப்பர் அண்டு பல்ப் டெக்னாலஜி பிரிவில் 22 காலி இடங்களும் பி.என்.பி.எம்.ஐ.எல்., நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்:


மெக்கானிக்கல் பிரிவிலான மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு 2 ஆண்டு ஐ.டி.ஐ., அல்லது 3 ஆண்டு டிப்ளமோ ஆகிய ஏதாவது ஒன்றை தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு ஒரு வருட பணி அனுபவம் தேவைப்படும். எலக்ட்ரிகல் / எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே போல் 10ம் வகுப்பு முடித்துவிட்டு 2 ஆண்டு ஐ.டி.ஐ., படிப்போ அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பையோ தொடர்புடைய பிரிவு ஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டுபணி அனுபவம் தேவைப்படும். கெமிக்கல் இன்ஜினியரிங்/பேப்பர் அண்டு பல்ப் டெக்னாலஜி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களும் 10ம் வகுப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ., அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை கெமிக்கல் இன்ஜினியரிங் அல்லது கெமிக்கல் பிளான்ட் பிரிவிலான படிப்பாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

மற்ற விபரங்கள்:


பாங்க் நோட் பேப்பர் மில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஜூனியர் கிரேடு புரொடக்சன் / மெயின்டனன்ஸ் காலியிடங்களுக்கு ஆன்-லைன் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க எக்சிகியூடிவ் பிரிவுக்கு ரூ.500/-ம், இதர பிரிவுகளுக்கு ரூ.350/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்-லைன் முறையில் மட்டுமே கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாயிலாக BNPM Recruitment Account No : 32786458505 என்ற அக்கவுன்டில் செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :


28.02.2013

இணையதள முகவரி:


www.bnpmindia.com/job/final%20advertisement.pdf

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.