இந்திய ராணுவத்திற்குத் தேவைப்படும் ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆர்டினன்ஸ் பேக்டரி மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரிலுள்ள கமரியாவில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் டெக்னிக்கல் பிரிவில் உள்ள 676 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:
இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் டேஞ்சர் பில்டிங் ஒர்க்கர் பிரிவில் 250 காலி இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 100 காலி இடங்களும், ஜெனரல் பிட்டர் (எஸ்.எஸ்.,) பிரிவில் 72 காலி இடங்களும், பிட்டர் ஆட்டோ, பிட்டர் பாய்லர், பிட்டர் எலக்ட்ரிக், பிட்டர் பைப், பிட்டர் எலக்ட்ரானிக், பிட்டர் ரெப்ரிஜிரேஷன் மற்றும் பிட்டர் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் பிரிவுகளில் தலா 15 காலி இடங்களும், எக்ஸாமினர் பிரிவில் 50 காலி இடங்களும், கிரைண்டர் பிரிவில் 32 இடங்களும், மேசன் மற்றும் கார்பெண்டர் பிரிவுகளில் தலா 23 இடங்களும், டர்னர் பிரிவில் 20 காலி இடங்களும், எலக்ட்ரோபிளேட்டர் பிரிவில் 16 காலி இடங்களும் உள்ளன.
தேவைகள்:
இந்தியன் ஆர்டினென்ஸ் பேக்டரியின் மேற்கண்ட டெக்னிக்கல் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் என்.சி.வி.டி., வழங்கும் நேஷனல் அப்ரென்டிஸ் சர்டிபிகேட் அல்லது நேஷனல் டிரேடு சர்டிபிகேட்டை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளின் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
இதர தகவல்கள்:
இந்தியன் ஆர்டினென்ஸ் பேக்டரி -கமரியாவின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.50/-க்கான டி.டி.,யை The Sr. General Manager, Ordnance Factory Khamaria, Jabalpur - 482 005 என்ற பெயரில் ஜபல்பூரில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.