E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
குருபார்வை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
00:00

இந்திய கடற்படையில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும்?
கேடட் என்ட்ரி (யு.பி.எஸ்.சி., நடத்தும் என்.டி.ஏ., மூலமாக) பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்கவேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கேடட் என்ட்ரி (பிளஸ் 2-யு.பி.எஸ்.சி., நடத்தும் நேவல் அகாடமி தேர்வு மூலமாக) பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கிராஜுவேட் ஸ்பெஷல் என்ட்ரி (நேவல் அகாடமி, கோவா). சி.டி.எஸ்.இ., தேர்வு மூலமாக சேர்க்கை. 19 முதல் 22 வயதுள்ள பி.எஸ்சி., (இயற்பியல், கணிதம் படித்த) அல்லது பி.இ., முடித்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி நேவல் அகாடமி, கோவா. 19 முதல் 24 வயதுள்ள ஆண்கள் மட்டும். பி.எஸ்சி., இயற்பியல் கணிதம் படித்த அல்லது பி.இ., முடித்திருக்கும் என்.சி.சி., சி சான்றிதழ் பெற்றவர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
டைரக்ட் என்ட்ரி நேவல் ஆமமன்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர் பணிகள். பி.இ., எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் முடித்த அல்லது எலக்ட்ரானிக்ஸ் இயற்பியல் இவற்றில் ஒன்றில் பட்ட மேற்படிப்பு முடித்தவர் விண்ணப்பிக்கலாம். வயது 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
டைரக்ட் என்ட்ரி லா கேடர் 22 முதல் 27 வயதுள்ள ஆண்கள் சட்டத்தில் பட்டப்படிப்பு 55 சதவீதத்துடன் முடித்திருக்கவேண்டும்.
லாஜிஸ்டிக்ஸ் கேடர் குறுகிய கால பணிகளுக்கு 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ., பொருளாதாரம் அல்லது பி.காம்., அல்லது பி.எஸ்சி., இயற்பியல் கணிதம் அல்லது பி.இ., பி.டெக்., மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் தகுதி.
ஏடிசி குறுகிய கால பணிகளுக்கு 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., இயற்பியல் அல்லது கணிதம் அல்லது இவற்றில் எம்.எஸ்சி., குறைந்தது 55 சதவீதத்துடன் தேர்ச்சி. இதைத் தவிர கல்விப் பிரிவில் எம்.எஸ்சி., இயற்பியல், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்திருப்போருக்கும் எம்.ஏ., ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல் படித்திருப் போருக்கும் பணிகள் உள்ளன.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் இவற்றில் பி.இ., தகுதி பெற்றவருக்கும் பணியிடங்கள் உள்ளன. உங்களது தகுதிக்கேற்ப பணியிடங்களை தேர்வு செய்து அதன் போட்டித் தேர்வுக்காக தயாராக வேண்டும். மேலும் ராணுவ பணிகளுக்கு உடற்திறன் அவசியம் என்பதால் நமது ராணுவ பிரிவுகளின் இன்டர் நெட் தளங்களை பார்வையிட்டு பிற விபரங்களை அறியவும்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.