ரேவதி பிரியதர்ஷினி அரங்கேற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 பிப்
2013
00:00

ரேவதி பிரியதர்ஷினி யின் பரதநாட்டிய அரங்கேற்றம், மதுரையில் நடந்தேறியது. கே.பி.எஸ்.ராமச்சந்திரனின் மகளான இவரது முதல் நிகழ்ச்சி, "யானை முகத்தனை' வணங்கும் தமிழ் மூதாட்டி அவ்வை வரிகளுடன், "ஜெய ஜானகி ரமண' என்றும் தோடமங்களத்துடன் துவங்கியது.
தொடர்ந்து அன்னை மீனாட்சி மீது, மதுரை முரளீதரன் இயற்றியுள்ள, "சிம்மேந்தரமத்யம'த்தில் அமைந்த வர்ணத்தில் அன்னையின் கண் அழகும், பின் அவளின் திக்கு விஜயம் செய்த கம்பீரமும், மிக நேர்த்தியாக அந்த காட்சியின் கதாபாத்திரங்களாகவே மாறி, ரேவதி ஆடினார்.
ஆடல் வடிவம் கொடுத்து நட்டுவாங்கத்துடன் ரேவதிக்கு பயிற்சி அளித்த, முனைவர் பாலா நந்தகுமாரின் திறமையும், முனைவர் பாரதி மகாதேவனின் வாய்ப்பாட்டும், மதுரை அனந்த கிருஷ்ணனின் மிருதங்க வாசிப்பும், சென்னை மோகன்ராஜின் குழலிசையும், செல்வ பிரசாத்தின் வில்லிசையும் மிக மெருகூட்டியது என்பது உண்மையே. இடைவேளையின் போது பாடிய, நிகழ்ச்சியின் வர்ணனையாளர் சவுந்தர்யா நந்தகுமாரின் குரல் வளம், எல்லாரையும் கிறங்க வைத்தது.
டி.வி.எஸ்., பள்ளி முதல்வர் உமா ரமேஷ், ""ஒரு மாணவிக்கான அனைத்து இலக்கணமும் கொண்டவர்,'' என்று புகழ்ந்தார்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.