தந்தைக்காக....
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
00:00

நெப்போலியன் மகனின் பிரெஞ்சு செவிலித்தாயை, பிரான்ஸுக்கு அனுப்பிவிட்டார். அவனுடைய பிரெஞ்சு விளையாட்டுப் பொம்மைகள் அகற்றப்பட்டன. அவனின் பெயரும் கூட மாற்றப்பட்டன. பிரான்ஸிஸ் என்பதற்குப் பதிலாக பிரான்ஸ் என்று அழைக்கப்படலானான். குழந்தைக்குக் கல்வி போதிக்க விசேஷ ஆசிரியர் அமர்த்தப் பட்டார் .
இதனிடையே புகழ்பெற்ற "வாட்டல் லூ' போர் நிகழ்ந்தது. இது நெப்போலியனின் கடைசி போராகவும், தோல்வியாகவும், அமைந்தது. பிரிட்டிஷாரிடம் சரணடைந்த நெப்போலியன், தொலைவிலுள்ள புனித ஹெலனாத் தீவிற்கு தனிமைச் சிறைக் கைதியாக அனுப்பப்பட்டான்.
நெப்போலியனின் மகன் பிரான்ஸின் படிப்பு தொடர்ந்தது. வியன்னாவிலும் தான் நெப்போலியனின் மகன் என்பதை அவன் மறக்கவே இல்லை. ஆசிரியர் "நெப்போலியன் ஓர் அரக்கன்; கொடியவன்; ஐரோப்பாவை சர்வாதிகாரி போல ஆள நினைத்தவன்' என்றெல்லாம் நெப்போலியன் புகழில் புழுதிவாரித் தூற்றி போதித்தபோது, ஆசிரியரைப் பார்த்து பிரான்ஸ், கோபாவேசத்துடன் கூச்சலிட்டுக் கத்தி, "நீர் ஒரு பொய்யர்' என்று வசைபாடினான்.
மாபெரும் மாளிகையான அந்த ஹாப்பர்க்கில் தன்னந்தனியாக இரவெல்லாம் தனக்குள் அழுதுகொண்டு, உறங்கிப் போனான் பிரான்ஸ் . அப்பாவைக் காணத் தவித்தான்; அம்மாவையும்தான்! அவள் தம் மகனைக்காண அபூர்வமாகத்தான் வருவாள். ஆசிரியர் வழக்கப்படி, தன் கடுமையான போதனைகளைப் போதித்துக் கொண்டிருந் தார். பையன் எதிர்ப்புக் தெரிவித்துக் கொண்டிருந்தான். நெப்போலியனின் மகன் விரும்பி எதிர்பார்ப்பது காப்டன் பாரஸ்ட்டியைத் தான். ஆஸ்திரிய காவல்படை அணியினரான அவரை, தன் பேரனுக்கு ராணுவ படிப்பு (பயிற்சி) அளிக்க அமர்த்தி இருந்தார் சக்கரவர்த்தி.
நெப்போலியனின் மகன் பிரான்சிஸ் போர்முறைக் கல்வியின் தொடக்க நிலை தந்திரங்களைக் கற்றுக் கொள்ளு வதில் ஆர்வங் காட்டினான். ஹாப்பர்க் அரண்மனை காவலர் களுடன், படைப்பயிற்சி செய்வதிலும் மகிழ்ச்சி யடைந்தான். ஆனால், அவன் பலமான பையனல்ல. இப்பயிற்சி படிப்புகளெல்லாம் அவனைக் களைப் படையச் செய்தன. காப்டன் பாரஸ்டி இதைச் சக்கரவர்த்திக்குத் தெரியப்படுத்திய போது, அதை முக்கிய விஷயமாகக் கருதாமல் தட்டிக் கழித்து விட்டார் அவர்.
ஒருநாள் காப்டன் பாரஸ்டி, பிரான்ஸை "டிரில்' பழக மைதானத்துக்கு அழைத்துப் போவதற்குப் பதில் அவன் அருகே அமர்ந்து அவன் தோளில் கைபோட்டபடி கூறினார்.
""உன் தந்தை நெப்போலியன் செயிண்ட் ஹெலனாவில் சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டார்'' என்று.
இத்தகவலை அமைதியாகக் கேட்ட பிரான்ஸ், கண்களில் நீர்கூட வழியாமல், ""காப்டன் பாரஸ்டி நான் ஒரு போர் வீரன், என் தந்தையைப் போல, போர்வீரர்கள் அழக்கூடாது,'' என்றான்.
ஆனால், காப்டன் பாரஸ்டி போனதும், இனி பார்க்கவே முடியாத தந்தையை நினைத்து உடைந்து போய் குமுறிக்குமுறி அழலானான் பிரான்ஸ்.
இப்போது நெப்போலியனின் மரணத்துக்குபின் பிரான்ஸ் ஸ்கான்பரன் அரண்மனைக்குத் திரும்பினான். அவனுக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டது. இதிலிருந்து அவனிடம் நுட்பமானதோர் மாற்றம் காணப்பட்டது. ஆசிரியர் கூறும் விஷயங்களை மிகக் கவனமாகக் கேட்கலானான். அவன் தகப்பனாரைப் பற்றி அவர் நடத்திய போர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட எந்தப் புத்தகத் தையும் படிக்காமல் தவறவிட்டதில்லை. அவ்வப்போது தாயுடன் பயணிக்கவும் அனுமதிக்கப்பட்டான் பிரான்ஸ் . ஆனாலும் கண்காணிப்புகள் பலமாக இருந்தன. பிரான்ஸ் வியன்னாவில் இருப்பதே பத்திரமானது என்று கருதப்பட்டது. மெலிந்த வெளுத்த முகமுடைய பையனான பிரான்ஸ் அழகும், குதூகலமும் நிறைந்த நகரில் சோகமான கைதியாக வாழ்ந்தான்.
பிரான்ஸின் இருபதாவது வயதில் ஒரு படைப்பிரிவுக்கு கர்னலாக நியமிக்கப் பட்டான். தன் வீரர்களை கான்பரன் ஒரு அரண்மனைத் திடலில், சக்கரவர்த்தியின் முன்னால் அணிவகுத்து நடத்திச் செல்ல வேண்டி இருந்தது. இதைக்காண அவனது தாயாரும் வியன்னாவுக்கு விசேஷ வருகை தந்திருந்தாள். தான் நிமிர்ந்து நிற்க, நடக்க தன் மேலங்கியின் உள்ளே முதுகுப்புறத்தில் இரும்பினாலான ஒரு கோலை செருகிக் கொண்டிருந்தான் பிரான்ஸ்.
""என் தந்தைக்கு நான் நல்ல பெயர் அளிப்பவனாக இருக்க வேண்டும்,'' என்று காப்டன் பாரஸ்ட்டியிடம் அடிக்கடி கூறுவான். அவனுக்குக் கல்வி போதிப்பவர் கள் நெப்போலியனைப் பற்றி அவதூறு பேசியபோதிலும் தான் நெப்போலியனின் மகன் என்பதையோ, பெருமைப் படுவதையோ மறக்கவில்லை பிரான்ஸ்.
அணிவகுப்பு நிகழும் நாள் வந்தது. கூட்டம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. வீரர்களுக்கு உத்தரவிடும். சமயத்தில் திடீரென்று பிரான்சின் உடலின் வெப்பம் அதிகமாகியது. இருமல் குமுறிக் கொண்டுவந்தது. பிரான்ஸுக்குப் பதில் காப்டன் பாரஸ்டி அணிவகுக்கும் படைகளுக்கு, செயல்பட உத்தரவிட்டார். தன்னுடைய பலவீனத்தை பிரான்ஸ் மன்னிப்பதே இல்லை. தன் தந்தைக்கு அவமரியாதை இழைத்துவிட்டதாக வருந்தினான்.
பிரான்ஸைக் கடத்திப் போய் மீண்டும் அரியணையில் அமர்த்த சதிகள் நடப்பதாக வதந்திகள் வேகமாகப் பரவின. ஆகவே, ஸ்கான்பரன் அரண்மனையிலிருந்து மீண்டும், ஈரக்கசிவான காற்றோட்டமில்லாத ஹாப்பாக் அரண்மனைக்கு பிரான்ஸ் இடமாற்றம் செய்யப்பட்டான். இப்போது அவன் தீவிர நோயாளி. அவனைக் கவனித்த டாக்டர்களோ, ""வெறும் ஜூரம்தான் சுடுநீர்க்குளியல் குணப்படுத்திவிடும்'' என்றனர். அவன் எலும்புருக்கி நோயினால் செத்துக் கொண்டிருப்பதை அவர்கள் அறியவில்லை.
நோய் தீவிரமாயிற்று. சக்கரவர்த்திக்கு டாக்டர்கள் கூறுவது தவறு என்று தோன்றியது. பிரான்ஸை மீண்டும் ஸ்கான்பரன் அரண்மனைக்கு கொண்டு வருமாறு கட்டளையிட்டார். ஆனால், நெப்போலியனின் மகனை வியன்னாவை விட்டு வெளியேறக் கூடாது என்றும், இத்தாலிக்குப் போனால் அங்குள்ள வானிலை அவன் நோயைக் குணப்படுத்தும் என்றார்.
தாயார் மேரி லூசிக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அவள் அதை லட்சியம் செய்யவில்லை. தன் மகன் அபாய நிலையில் உள்ளதை அவள் அறியவில்லை. அவள் தந்தை சக்கரவர்த்தி கோபமாகக் கட்டளையிட்டதும் வந்தாள் மேரி லூசி. மகனின் தோற்றத்தில் மாற்றத்தைக் கண்டு அதிர்ந்து போனாள்.
பிரான்ஸ் நாளின் பெரும்பொழுதைப் படுக்கையிலேயே செலவிட்டான். ஓரிரு முறை, உடலில் தெம்பைக் கூட்டிக் கொண்டு தோட்டத்தில் உலாவப் போவான். அதன்பின் எழுந்திருக்கவும் முடியாமல் மிகவும் சோர்ந்து கிடப்பான்.
இடிமுழக்கத்தோடு கூடிய புயல் 1832 ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி இரவில் தோன்றியது. படுக்கையில் படுத்தபடி பிரான்ஸ் சிரித்துக் கொண்டான். அவன் தகப்பனார் நெப்போலியன் அவனிடம், ""நீ பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட நூற்றியோரு பீரங்கிகளை முழங்கச் செய்தேன்,'' என்று கூறியதை, இந்த இடிமுழக்கம் நினைவுபடுத்தவே அவனுக்குச் சிரிப்பு வந்தது.
அன்றுகாலை ஐந்து மணிக்கு வியன்னா கைதியின் உயிர் பிரிந்தது. பிரான்ஸுக்கு அப்போது வயது 21. கடைசி வரை தைரியசாலியான தான் நெப்போலியனின் மகன் என்பதை மறக்காதவனாக இருந்தான். வியன்னாவில் மண்ணில் புதைக்கப்பட்டான் பிரான்ஸ் .
நூற்று எட்டு ஆண்டுகளுக்குப்பின் 1940ல் அவன் சவப்பெட்டி, பாரீஸுக்குக் கொண்டு போகப்பட்டு, அவன் மிகவும் நேசித்த தகப்பனார் நெப்போலியனின் சமாதிக்கு அருகாமையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.