அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

நம்ம வயதில் தொழிலாளர்கள்!


கடந்த 1990-ம் ஆண்டு உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின், "குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உடன்படிக்கை'யில் கையெழுத்து இட்டன. ஆனால், இந்தப் பிரச்னை தீரவில்லை. பல ஆப்பிரிக்க நாடுகள், இந்தியா, வங்காள தேசம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஏட்டளவில் சட்டம் இருக்கிறதே தவிர, நடைமுறையில் எல்லாம் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.
குழந்தைத் தொழிலாளர் முறைக்கு குடும்ப வறுமை மிக முக்கிய காரணம் என்றாலும், இதையும் தாண்டிப் பல காரணிகள் இருக்கின்றன. கல்வியின் முக்கியத்துவம் உணரப்படாதது; விவசாயத் துறையின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளே அவை.
தீப்பெட்டி (ம) பீடி சுற்றும் தொழில்களில் ஒரு நாளைக்குத் தரக்கூடிய அதிகப் பட்சக் கூலியைக் கொண்டு, குடும்பத்தை நடத்த முடியாது. இந்தப் பகுதிகளில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்குப் பதிலாக, இத்தகைய தொழிற்சாலைக்கு அனுப்புவதால், கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர் முறையினை அடியோடு ஒழிக்க, குடும்ப வறுமை ஒழிப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். அத்துடன், சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தாதபடி தொழில் துறைகளை முறைப்படுத்த வேண்டும்.

வாசனையே ஆபத்தா?


சாப்பிடுவதற்கு முன் சூப் சாப்பிடுவதை சிலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். பணக்காரர்களின் விருந்தில் இது ஒரு கவுரவ கலாசாரமாக பின்பற்றப்படுகிறது. 16ம் நூற்றாண்டின் ஐரோப்பியர்கள், இரவு சாப்பாட்டுக்கு முன், சூப் சாப்பிடுவதை ஒரு வழக்கமாக உருவாக்கினர்.
இதை அறிவியல் ரீதியாக சொல்லும்போது "அப்பிடைசர் ஸ்டார்ட்டர்' வகையைச் சேர்ந்தது என்கின்றனர். அதாவது அதிகம் பசி இல்லாமல் இருக்கையில் இந்த சூப் வயிற்றுக்குள் சென்று ஜீரணத்துக்கு உண்டான என்சைம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க முடியும். வசதி படைத்தவர்களுக்கு பெரும்பாலும் பசி எடுப்ப தில்லை. அந்த பசியைத் தூண்டி விடுவதற்காக இப்படி சூப் கொடுக்கப்படுகிறது.
சூப் மட்டுமல்ல... மசாலா வாசனைகளும் பசியை தூண்டிவிடுகின்றன என்கின்றனர். ஓட்டலுக்கு அருகில் குடியிருப்பவர்கள், எப்போதும் மசாலா வாசனையை நுகர்பவர் களாக இருக்கின்றனர். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். தொடர்ந்து மசாலா வாசனையை மட்டும் நுகர்வதால் கல்லீரலில் பிரச்னை, பித்தம் முதலியவை ஏற்படலாம்.
நமக்கு உணவு வாசனை மூக்கை எட்டியவுடன் நமது வயிறு உணவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும். வாசனை வரும்போது எல்லா சுரப்பிகளும் தயாராகி விடுகின்றன. மூக்குக்கு எட்டியது வாய்க்கும் எட்ட வேண்டும் என்பது இயற்கை நியதி. அதை மீறி வெறும் வாசனையை மட்டுமே தொடர்ந்து சுவாசிக்கும் போது சுரப்பிகள் பலவீனம் அடைகின்றன. அதனால் ஓட்டல் அருகே, குடியிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கலாம் காலம்!


நாம் மின் விளக்கைப் பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசன் நம் நினைவுக்கு வருகிறார். விமானத்தைப் பார்க்கும்போது ரைட் சகோதரர்களும், தொலைபேசியைப் பார்த்தால் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லும் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் எப்போதே வாழ்ந்து மறைந்தாலும் இப்போதும் அவர்களை நம் நினைவில் வைத்துப் போற்றுகிறோம். அவ்வாறு அவர்கள் போற்றப்பட அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த தனித்துவ திறமைதான் காரணம்.
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொரு வரிடமும் ஒவ்வொரு தனித்துவத் திறமை உள்ளது. நாம் அந்த தனித்துவத் திறமையைக் கண்டறிந்து, நம்மில் அத்திறமையை வளர்த்துக் கொள்ளப் போகிறோமா (அ) எல்லாரையும் போல நாமும் சாதாரண மனிதர்களாக ஆகப் போகிறாமா என்பது நம் கையில்தான் உள்ளது. நாமும் வரலாற்றில் இடம் பெற வேண்டுமானால் நமக்கான தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் உயர்ந்த லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ச்சியான அறிவுத் தேடலும், கடின உழைப்பும் இருப்பது அவசியம். எவ்வளவு தடங்கல் ஏற்பட்டாலும் தளராத மனம் வேண்டும். இந்த நான்கு குணங்களும் நமது வெற்றிக்கு மிகவும் அடிப்படையானவை.

மறதி போயே போச்சு!


*ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் கிச்சன் போல மூளை பற்றிய ஆராய்ச்சியால் விளையும் நவீன மருந்துகளை, "ஸ்மார்ட் டிரக்ஸ்' என்கின்றனர். இப்படிப்பட்ட மருந்துகள் வருங்காலத்தில் செய்யப் போகும் மாயாஜாலங்களை நினைத்தால் இப்போதே தலை சுற்றுகிறது.
* மனிதனின் ஒழுக்கம், நல்ல எண்ணங்கள்... இவற்றுக்காகவே, மூளையில் ஒரு தனி கம்பார்ட்மென்ட் உண்டு. அந்தப் பகுதியைத் தூண்டிவிடும் ஒழுக்க மாத்திரைகள், தயாரிக்கும் ஆராய்ச்சி இப்போது நடக்கிறது. அது மட்டும் வந்துவிட்டால், குற்றவாளிகள் வன்முறையாளர்களை எல்லாம் திருத்திவிடலாமாம்!
*ஏற்கனவே ஆக்சிடோஸின் வகை மருந்துகள் மனிதனின் இரக்க குணத்தை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், முன் பின் அறியாத மனிதர்களிடம் இது வொர்க் அவுட் ஆவதில்லை. இதையும் கொஞ்சம் ரிப்பேர் செய்து வரும் மருந்துக் கம்பெனிகள், இதன் மூலம் பெரும் கருணையாளர்களை உருவாக்கலாம் என்கின்றனர்.
இதுவரை உபாயம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நினைவுத்திறன் அதிகரிப்புக்கும் இப்போது துப்பு கிடைத்துள்ளது. நம் மூளையில் உள்ள பி.கே.ஆர்., என்ற மூலக்கூறுகள் மறதிக்கும் காரணமாம். அதைத் தூண்டும் மருந்துகள் மூலம், ஆறாம் நூற்றாண்டு போதிதர்மனின் நினைவுகளைக் கூட அவர்கள் எழுப்பினாலும் எழுப்பலாம்!

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!


இது, "பனீர் சீஸ் பன்' செய்முறை நேரம்.
தேவையானவை: பன்-4, சீஸ் துருவல்-அரை கப், பனீர் துருவல்-கால் கப், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)-1 டீஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது)-1 டேபிள் ஸ்பூன், வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: பன்னை மேல் பகுதியை வெட்டி எடுத்து விட்டு, கீழ் பகுதியில் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து பள்ளம் போல் செய்து கொள்ளுங்கள். பனீர் சீஸ் துருவலுடன், மிளகாய், மல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பன்னுக்குள்ளும் இதை அமுக்கி வைத்து மேல் பாக பன்னால் மூடுங்கள். தோசைக்கல்லை காய வைத்து, பன்னை அதன் மேல் வைத்து, சுற்றிலும் சிறிது வெண்ணெய் தடவி, வெந்ததும் மறுபுறமும் திருப்பி விட்டு (மூடிய நிலையிலேயே) நன்கு சூடானதும் எடுத்துப் பரிமாறுங்கள். கலக்கலான சீஸ் பன், காலியாவதே தெரியாது.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.