விடுகதை...
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
00:00

தனுஷ்புரம் என்ற ஊரில், சிம்பு என்று ஒருவன் இருந்தான். அவன் அறிவுக்கூர்மை உடையவன். தான் சொல்ல எண்ணிய கருத்தை விடுகதைகளாகச் சொல்வதில் வல்லவன்.
அந்த ஊரிலுள்ள மன்னன் சிம்புவைப் பற்றிக் கேள்விப்பட்டான். "எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து, அவனை அரச சபைக்குள் கூட்டி வர வேண்டும்' என்று மன்னன் காவலர் களுக்கு கட்டளை யிட்டான்.
காவலர்கள் நான்கு திசைகளிலும் பயணம் செய்தனர்.
பல நாட்களுக்குப் பின்னர் ஒரு கிராமத்தில் அவர்கள் ஒரு நாள் தங்கினர். கிராமத்தின் நடுவில் வளர்ந்து பரவி இருந்த ஓர் ஆலமரத்தின் கீழ், ஐவர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் நடுவில் இருந்த ஒருவர் வேடிக்கையாக பேசினார்.
காவலர்கள் அவர்களை நெருங்கும் போது, "தேருவருதே, தேருவருதே, என்று சத்தம் கேட்டது. காவலர்கள் கிராமத்தின் கோவிலுக்கு அருகில் வைக்கப் பெற்றிருந்த தேரைப் பார்த்தனர். தேர் ஆடாமல் அசையாமல் அதே இடத்தில் இருந்தது.
வலமிருந்து இடமாகப் படித்தாலும், இடமிருந்து வலமாகப் படித்தாலும் ஒன்றாகவே இருந்தது.
ஐவரிலும் நடு நாயகமாய் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் சொன்ன கருத்தை அனைவரும் கவனமாய் கேட்டனர்.
""அண்ணன் தம்பியர் ஐவர், அண்ணன் இல்லையேல் திண்டாடுவர் தம்பியர்... அவர்கள் யார்?
காவலர்கள் சிந்தித்தனர்.
"அங்கே அமர்ந்திருக்கும் ஐவர்' இதுதான் விடையாக இருக்குமோ என்று எண்ணினர். ஆனால், அவர்கள் விடை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
""அண்ணன் தம்பியர் ஐவர் என்பது கை விரல்கள். அவைகளில் அண்ணன் என்பது கட்டை விரலாகும். கட்டை விரல் இல்லாவிடில் பிற நான்கு விரல்களும் வேலை செய்ய சிரமப்படுகின்றன.
ஐவரில் ஒருவர் இந்த விடையைச் சொன்னார்.
புதிர் போட்டவர், இதுதான் விடையென ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்ல, குருதட்சணையாக ஏகலைவனின் கட்டை விரல் கேட்கப்பட்ட நிகழ்வை அவர் அழகாய் விளக்கினார்.
இப்போது காவலர்கள் புரிந்து கொண்டனர். புதிர் போட்டவர்தான் சிம்பு என்பதை சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொண்டனர்.
அவரிடம் சென்ற காவலர்கள், அரசன் இட்ட கட்டளையை எடுத்துரைத்தனர். அதைக்கேட்ட சிம்பு அவர்களுடன் சென்றான்.
சிம்பு அரசர் முன் வந்து நின்று வணங்கினான்.
அரசன் சந்தோஷப்பட்டான். மன்னர் விரலில் அணிந்துள்ள முத்திரை மோதிரம் டாலடித்தது. அதைப் பார்த்து சிம்பு புன்னகை செய்தான்.
""என்ன?'' என்று கேட்டான் அரசன்.
""மன்னரே, அது மீனை விடவும் சிறியது. ஆனால், மிகுதியான அதிகாரம் உடையது. விரலை விடப் பெரியது. ஆனால், வீரர் களை அடக்கி ஆள்வது,'' என்றான் சிம்பு.
மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.
நீண்ட நேரமாகியும் மன்னரால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சிம்பு விடை கூறினான்.
""அரசே முத்திரை மோதிரத்தைத்தான் சொன்னேன்,'' என்றான்.
"இவன் என்னைக் கேவலப்படுத்துகிறான். இவனை எப்படியாவது மடக்க வேண்டும். என்ன செய்யலாம்?' என்று மன்னர் சில நிமிடங்கள் சிந்தித்தார். அவர் மனதில், சிம்புவை மட்டம் தட்டக்கூடிய அருமையான கருத்து உதயமானது.
""நான் உன்னை அரசவைக் கலைஞனாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதற்கு முன்னதாக நீ எனக்கொரு கோழியைக் காணிக்கையாகத் தர வேண்டும், இது மன்னரின் கோரிக்கை,'' என்றார்.
"அரசே, நான் வீட்டில் கோழி வளர்க்கிறேன். அவைகளில் ஒன்றை தங்களுக்கு காணிக்கை தரத் தயாராய் இருக்கிறேன். இதில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,'' என்றான் சிம்பு.
""நீ கொண்டு வரும் கோழி சேவலாக இருக்கக் கூடாது. பெட்டையாகவும் இருக்கக் கூடாது,'' என்றார் மன்னர்.
மன்னர் தன்னை சோதித்துப் பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான். எனவே, மன்னரை மடக்க, தகுந்த பதில் கொடுத்தான்.
""மன்னரே ஒரு காவலரை அனுப்பி அந்தக் கோழியை பிடித்து வரச் சொல்லுங்கள். ஆனால், காவலனை பகலில் அனுப்ப வேண்டாம். அதாவது காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை, இரவிலும் அனுப்பி வைக்க வேண்டாம். அதாவது மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை,'' என்றான்.
""பகலில் ஏன் அனுப்பக்கூடாது?'' என்று மன்னர் கேட்டார்.
""பகலில் மேய்வதற்காக, கோழிகள் காட்டுக்குள் சென்று விடும். அதனால் பகலில் வேண்டாம்!'' என்றான்.
""இரவில் ஏன் வேண்டாம்?''
""இரவில் தானம் கொடுப்பதையும், கடன் கொடுப்பதையும் சாத்திரங்கள் தடுக்கின்றன. ஏனென்றால், அப்படிச் செய்தால் செல்வத்தைத் தரும் திருமகள் நமது வீட்டிலிருந்து போய் விடுவாள்,'' என்றான்.
சிம்புவின் பதிலைக் கேட்டு மன்னன் திகைத்துப் போனான். "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நான் தெரிந்து கொண்டேன். இவனை வெற்றி கொள்வது நம்மால் இயலாத செயல்' என்று மன்னன் ஒரு முடிவுக்கு வந்தான்.
சிம்புவை, மந்திரியாக நியமித்து, அவனுடைய அறிவை பயன்படுத்திக் கொண்டான்.
***

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.