பண்டைக் காலத்துக் கோட்டைகளைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இந்தச் சிறைச்சாலை ஒரு கோட்டை போன்ற தோற்றத்தை அளிக்கும். இங்கிலாந்து வாசிகள் இதை, "வார்விக் கேஸில்' போலிருப்பதாகக் கூறுவர். ஒரு வகையில் இது உண்மையும் கூட. இச்சிறைச் சாலையின் முகப்புத் தோற்றம் வார்விக் கேஸில் போலவே உள்ளது. உள்ளேயும் பல பகுதிகளில் காணப்படும் ஒற்றுமை வார்விக் கோட்டையோடு தற்செயலானதுதான். கோட்டை போன்ற தோற்றமுடைய ஹாலோவே ஒரு சிறைச்சாலை. எப்படி என்கிறீர்களா? இது பெண் கைதிகளுக்கு மட்டுமேயான சிறைச்சாலை.
பெண்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள் என்று வாதிட்டு கோபப்படுபவர்கள் உண்டு. ஆனால், உண்மையில் புள்ளி விவரங்கள் 40,000 ஆண் குற்றவாளிகளுக்கு 1000 பெண் குற்றவாளிகள் இருப்பதாகக் கூறுகிறது. இந்தப் பெண் குற்றவாளிகளுக்கு அடைக்கலமளிப்பது இந்த ஹாலோவே சிறைக்கூடம்தான்.
இச்சிறைச்சாலையுள்ள இடம் 1832ல் பலகாரியங்களுக்காக அரசாங்கத்தினால் வாங்கப்பட்டது. காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோயினால் மாண்டவர்களுக்கான சமுதாயக் கல்லறைக்காகவே இது வாங்கப்பட்டது. ஆனால், அக்கல்லறையை வேறு இடத்தில் உருவாக்கிவிட இந்த இடத்தில் சிறைச்சாலை கட்டப்பட்டது. முதலில் நகரச் சிறைக்கூடமாக இருந்தது. ஆண்-பெண் ஆகிய இருதரப்புக் கைதிகளும் இங்கு 1902 ஆகஸ்ட் வரை அடைக்கப்பட்டனர். பிறகுதான் லண்டனின் பெண் குற்றவாளிகளுக்கான தனி சிறைச்சாலையாக இது மாறியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.