அகலத்திரை கொண்ட ஸ்மார்ட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 பிப்
2013
00:00

மொபைல் போன் பயன்பாட்டிற்கு வந்த காலத்தில், சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டு, பாக்கெட்டில் எளிதாக எடுத்துச் செல்லும் அளவில் இருந்த மொபைல் போன்களையே எல்லாரும் விரும்பினர். அதற்கேற்ற வகையிலேயே திரையும் இருந்தது. ஆனால், காலப் போக்கில், கேமரா, வீடியோ காட்சி, கம்ப்யூட்டர் பயன்பாடு என ஒரு மொபைல் போன் விரிந்தவுடன், திரை எந்த அளவிற்கு அகலமாக உள்ளதோ அதனையே மக்கள் விரும்பத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக ஸ்மார்ட் போன்களில் இதுவே ஒரு விரும்பத்தக்க அம்சமாக உள்ளது. அந்த வகையில் 5.5. மற்றும் 5 அங்குல திரையுடன் தற்போது சந்தையில் கிடைக்கும் சில மொபைல் போன்களை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம்.

1. சாம்சங் கேலக்ஸி நோட் 2:






இதன் விலை ரூ.36,000. இந்தியாவில் உயர்நிலை மொபைல் போன் விற்பனையில் முன்னணி இடம் பிடித்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் திரை 5.5 அங்குல அகலம் உடையது. 4ஜி மற்றும் நெட்வொர்க் இணைப்பிற்கான அனைத்து தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளது. புளுடூத் பதிப்பு 4 இருப்பது இதன் அதி நவீன வசதியைக் காட்டுகிறது. டச் போகஸ் கொண்ட 8 எம்பி கேமரா மற்றும் 1.9 எம்பி முன்புறக் கேமரா ஆகியவை உள்ளன.

2. காலக்ஸி நோட்:






5 அங்குல திரை தான் அதிக பட்சம் என்று இருந்ததனை மீறிய முதல் ஸ்மார்ட் போன். 5.3 அங்குல திரை, இதன் ப்ராசசர் டூயல் கோர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டது. 3ஜி மற்றும் அனைத்து நெட்வொர்க் தொழில் நுட்பமும் உள்ளது. இதன் விலை ரூ.30,500.

3. எல்.ஜி. ஆப்டிமஸ் வி.யு.:






கொரியாவில் சாம்சங் அதிக அளவில் இன்றைக்கும் விற்பனை செய்திடும் சாம்சங் காலக்ஸி வரிசை போன்களுக்குப் போட்டியாக எல்.ஜி. நிறுவனம் இதனை அறிமுகப்படுத்தியது. பின்னர், மற்ற நாடுகளிலும் இந்த போன் விற்பனைக்கு வந்தது. இதன் 5 அங்குல திரை, வழக்கமாக நாம் காணும் திரை போல் அல்லாமல், சற்று வேறுபாட்டுடன் உள்ளது. நெட்வொர்க் தொழில் நுட்பம் அனைத்தும் கொண்டுள்ள இதன் விலை ரூ. 26,700.

4. சாம்சங் காலக்ஸி கிராண்ட்:






சாம்சங் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் இணைத்து அறிமுகமான நடுநிலை ஸ்மார்ட் போன். திரை 5 அங்குலம் அகலம் கொண்டது. இதன் இன்னொரு சிறப்பாக இரண்டு சிம் இயக்கத்தினைக் கூறலாம். அனைத்து நெட்வொர்க் தொழில் நுட்பங்களும் தரப்பட்டுள்ளன. 8 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. அதிக பட்ச விலை ரூ. 21,500. இதனைப் பிரபலப்படுத்த பல இலவச கவர், டேட்டா ஸ்டோரேஜ் வசதி எனப் பல தரப்படுகின்றன.

5. மைக்ரோமாக்ஸ் சூப்பர் போன் கேன்வாஸ் எச்.டி. 116:






குறைந்த விலையில் அதிக, நவீன கூடுதல் வசதிகளைக் கொண்ட இந்த போன் திரை 5 அங்குல அகலம் உடையது. ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு, மிகச் சிறப்பான போனாக இயங்குகிறது. விலை ரூ.14,999.

6. கார்பன் ஏ 30:






திரை அடிப்படையில் நாம் ஸ்மார்ட் போன்களைப் பார்க்கையில் இது தனி இடம் பெறுகிறது. இதன் திரை அகலம் 5.9 அங்குலம். நவீன தொழில்நுட்பங்கள், கேமராக்கள் கொண்டு அனைவரும் வாங்கும் விலையில் கூடுதல் வசதிகளைக் கொண்டதாக இது உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.10,999.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X