பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 பிப்
2013
00:00

மிக எளிமையாக விளக்கத்துடன் பிராட்பேண்ட் சார்ந்த தொழில் நுட்ப பெயர்களை விளக்கியது மிக அருமையாக இருந்தது. குறிப்பாக லேடன்சி என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இது போல சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் விளக்கம் தந்துவிட்டால், இந்த விஷயத்தில் நிறுவனங்கள் மக்களை ஏமாற்ற முடியாது.
டாக்டர் என். பாஸ்கர தாஸ், மதுரை.

பேஸ்புக் முதல் இடம் பெற்ற தளம் என்பது வியப்புக்குரிய தகவல் தான். முதல் இருபது இணைய தளங்கள் கட்டுரையைப் படிக்கத் தொடங்கும் போது, கூகுள் தான் முதல் இடம் பெற்றது என எண்ணியே படித்தேன். புள்ளி விபரங்களுடன் தந்த தகவல்கள் மிகவும் அருமை.
எஸ். பிரகாஷ் சங்கர், ஐ.டி. மாணவர், கோவை.

இருபது இணைய தளங்கள் பட்டியலில் சீன தளங்கள் இடம் பெற்றிருப்பதனைத் தெரிந்து கொள்ளும் போதுதான், சீனா தகவல் தொழில் நுட்பத்தில் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதனை அறிய முடிந்தது. இந்த வளர்ச்சியை நாம் ஒரு சவாலாக ஏற்று, போட்டியில் ஜெயிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அரசும் தனியார் நிறுவனங்களும் இதற்கு முனைப் பாகச் செயல்பட வேண்டும்.
எஸ். சுகப்பிரியா, சென்னை.

இந்திய இணைய வளர்ச்சி எப்படி இருக்கும் என விளக்கம் அளித்தது நமக்கு நம் முன்னே உள்ள வாய்ப்புகளைப் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. கட்டுரையாளர் குறிப் பிட்ட அனைத்து பிரிவுகளிலும் செயல் பட்டால், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
பேரா. சாமி. தியாகராசன், தஞ்சாவூர்.

இணைய வழி வர்த்தகம் என்பது இனி எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. உங்கள் கட்டுரையில் இதனை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதனை உணர்ந்து நம் வர்த்தகர்கள், குறிப்பாக தமிழக வர்த்தகர்கள் தங்கள் நடவடிக்கையை மாற்றிக் கொண்டால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போல வர்த்தகத்தில் முதல் இடம் பெறலாம்.
ச. பாரதி, அட்லாண்டா.

அடுத்த இணைய மக்கள் தொகைப் பெருக்கம், இந்தியாவில் பெண்களிடத்தில் ஏற்படும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. நமக்கெதற்கு இது என்று ஒதுங்கி இருந்த, வீட்டை நிர்வகிக்கும் பெண்கள், இன்று ஐபேட், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் என்று இணையத்தைத் தரும் சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இது ஒரு பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தங்கள் "இந்திய இணையம்' கட்டுரை இதற்கு கட்டியம் கூறி உள்ளது.
இரா. தாமரைச் செல்வன், திருச்சி.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் குறித்த வினாடி வினா, அதன் முழு சரித்திரத்தை, ஜாதகக் குறிப்புகள் போலக் காட்டியுள்ளது. சற்று வேடிக்கை கலந்தும் தந்திருக்கிறீர்கள். இதே போல விண்டோஸ் சிஸ்டம் குறித்த தொகுப்பினையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ந. தெய்வ சுந்தரம், சென்னை.

ஆண்ட்ராய்ட் உயர்ந்து, விண்டோஸ் விழுந்து விட்டது என எழுதி உள்ளீர்கள். இன்னும் மொபைல் போன்களில் அதிக அளவில் விண்டோஸ் வரவில்லை. வரும்போது அதுவே அதிகம் பயன்படுத்தப்படும். ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் மக்களின் பிரியமாக இருந்தாலும், பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுவதால், மக்கள் விண்டோஸ் சார்ந்தவற்றையே அனைத்திலும் எதிர்பார்ப்பார்கள்.
த. உலகநாதன், தாம்பரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X