ராக ஆலாபனைகளில் வித்யாவின் நேர்த்தி!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 பிப்
2013
00:00

கொரட்டூர் கல்ச்சுரல் அகடமியில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் நடைபெற்ற, இளம் விதூஷி வித்யா கல்யாணராமனுடைய இசை நிகழ்ச்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. சங்கீதத்தில் பிரபல குரு சுகுணா, வரதாச்சாரியின் சிஷ்யை. அருமையான குரல் வளம், பளிச்சென்று பாடும் நயம் இவரிடம் தெரிகிறது. இசை கற்பனைகள் சிறப்பாக உள்ளன. கஜானனம் என்று கணபதி சுலோகத்துடன் (கரஹரப்ரியா) இனிமையாக துவங்கி, பாபநாசம் சிவனுடைய கணபதியே, கருணாநிதியே என்ற கீர்த்தனத்தை மதுரமாக பாடியது, அருமையான துவக்கம் ஆகும். குறிப்பாக சகல சராட்சரமும், பணியும் வரியின் நயமான
சங்கதி மனதை கவர்ந்தது.
இந்த நிகழ்ச்சி பாராட்டும்படி சிறந்த பாடல்களுடன் இருந்தது. ஆனால், வித்யா கல்யாணராமனின் குரலில் தொடர்ச்சி, சற்றே சரியாக அமையாததால், குரல் சில இடங்களில் பளிச்சென்று பிரகாசமாக கேட்க முடியாதது ஒரு குறை காணப்பட்டது. ஸ்ரீ தியாகராஜ சுவாமியின் அம்மராவம்ம (கல்யாணி) கீர்த்தனையில், தாமரச தள தேத்ரி (நிரவல்) சிறப்பாக இருந்தது.
குறிப்பாக ஸ்வரங்கள் ஒரு தாலாட்டினை கேட்ட சுகமான பவனி எனலாம். இந்த நிகழ்ச்சியில் வித்யா கல்யாண ராமனுடைய இரு ராக ஆலாபனைகள், கேதாரா கவுளை மற்றும் பிரதான சாருகேசி இரண்டுமே, முதல் தரம் என்று பாராட்டலாம். ரசப்பிரதான ரக்தி ராகம் இது. கேதார கவுரியின் ரிஷபம், நிஷாதம் இரண்டையுமே சரியாக சிறப்பாக கையாண்டு பாடிய விதம், மெச்சும்படி இருந்தது. பாபநாசம் சிவனுடைய அருமையான பாடல், சாமிக்கு சரியெவரே. எத்தனை முறை கேட்டாலும், அலுக்காத இந்த கீர்த்தனத்தை தேர்வு செய்ததற்கு வித்யாவை பாராட்டலாம்.
வித்யா கல்யாணராமன் திறமையான பாடகி. நிச்சயம் எதிர்காலத்தில் சிகரங்களை தொடுவார் என்று எதிர்பார்க்கலாம். மேலக்காவேரி தியாகராஜன் வயலினில் முழுக்க முழுக்க, அதன் நாதம் செவிகளை குளிர வைத்தது. குறிப்பாக, ராக விரிவுகள் துல்லியம், கச்சிதம், மதுரம் அருமையான வாசிப்பு.குரு ராகவேந்திராவின் மிருதங்க வாசிப்பு, படு அனுசரனையுடன் மெருகேற்றிய வாசிப்புடன் நிகழ்ச்சி வெகு சிறப்பாக இருந்தது.
- மாளவிகா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.