சென்னை சிட்லபாக்கம், ஸ்ரீ பாரதி கலாலய பரதநாட்டியப் பள்ளியின், மாணவிகளான ச.சுவர்ணலலிதா, ஸ்ரீ.சாய்சரண்யா, இரா.வசியா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் தியாகராய நகர், வாணி மகாலில் சிறப்பாக நடைபெற்றது. பரதநாட்டியப் பள்ளியின் குரு மு.ஜெயலட்சுமி முருகன், மாணவிகளுக்கு நன்கு பயிற்சி கொடுத்தது மாணவிகளின் நாட்டியத்தின் மூலம் வெளிப்பட்டது. நிறைமதிகுமார் சிறந்த முறையில் நட்டுவாங்கம் அமைக்க, அனுஜா ராஜசிம்மனின் இனிய குரலில், அரங்கேற்றம், காண்போரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தது.
தாளசுத்தம், அங்கசுத்தம், நேர்த்தியான அடவுகள், உரிய அபிநயங்கள் ஆகியன மூவராலும் திறம்பட வெளிப்படுத்தப்பட்டதைக் காண முடிந்தது. புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், மல்லாரி, நடனமாடினர், வர்ணம் (வல்ஜி ராகம், காலஞ் சென்ற நாட்டிய விமர்சகர் சுப்புடுவால் இயற்றப்பட்டு, பாலமுரளிகிருஷ்ணாவால் இசையமைக்கப்பட்டது). தில்லானா, ஆகியவற்றோடு, இவை அமைந்தன. திருமதி.விஜயலட்சுமி (பொதிகை தொலைக்காட்சி) வாழ்த்துரை வழங்கினார். சிறப்பாக நடைபெற்ற அரங்கேற்றமாக அமைந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.