பாவம் செய்யாதே!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 மார்
2013
00:00

புண்ணிய வசத்தால் மனிதப் பிறவி கிடைக்கிறது என்பர். அப்படிப்பட்ட பிறவி கிடைத்தாலும், எல்லாருமே சந்தோஷமாகவும், சவுக்கியமாகவும் இருப்பதாக சொல்லிவிட முடியாது. இதற்குக் காரணம், பாவம், சாபம், புண்ணியம் என்றெல்லாம் சொல் கின்றனர். அவனவன், அவற்றின் பலன்களை அனுபவித்து விட்டுப் போகிறான். ரொம்பவும் பாவம் செய்தவர்கள், விலங்கு, புழு, பூச்சி என பல ஜீவன்களாக பிறவியெடுத்து, பாவமோ, சாபமோ நிவர்த்தியான பின், விமோசனம் பெறுகின் றனர் என்று சொல்லப் படுகிறது.
அர்ஜுனன் தீர்த்த யாத்திரை சென்றபோது, பல புண்ணிய தீர்த்தங் களில் நீராடி, அகஸ்திய தீர்த்தம், சவ்பத்ர தீர்த்தம், பவ்லோம தீர்த்தம், காரந்தம தீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம் என்ற ஐந்து புண்ணிய தீர்த்தங்கள் உள்ள இடத்தை அடைந்தான். அந்த தீர்த்தங்களில் முதலை இருப்பதாகவும், அதில் இறங்க வேண்டாம் என்றும் அங்கிருந்த ரிஷிகள் தடுத்தனர். ஆனாலும், முதலில் சவ்பத்ரம் தீர்த்தத்தில் இறங்கினான் அர்ஜுனன். உடனே, அதிலிருந்த முதலை இவன் காலை கவ்விக் கொண்டது. மிகவும் சிரமப்பட்டு அந்த முதலையைத் தூக்கி, கரையில் போட்டான் அர்ஜுனன். உடன் அந்த முதலை ஒரு சவுந்தர்யவதியாக ஆடை, ஆபரணாதிகளுடன் உருவம் மாறி நின்றது.
அர்ஜுனன் ஆச்சரியப்பட்டு, "பெண்ணே... நீ யார்? எப்படி உனக்கு இந்த முதலை உருவம் ஏற்பட்டது...' என்று கேட்டான்.
அதற்கு அந்த பெண், "நான் ஒரு தேவகன்னிகை. நானும், என் தோழியர் நான்கு பேரும் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு மகா தபஸ்வியைக் கண்டோம். அவருடைய தவத்தை கலைத்து; அவரை அடைய விரும்பினோம்.
"அவர் கோபித்து,"என் தவத்தை கலைக்க முயன்ற நீங்கள், பூலோகத்தில் முதலையாகப் பிறந்து, தண்ணீரில் வசிக்கக் கடவீர்...' என்று சாபமிட்டார். நாங்களும் மனம் வருந்தி, சாப விமோசனம் கேட்டோம். "அதற்கு அந்த ரிஷி, "நீங்கள் நூறு வருஷம் முதலையாக இருந்த பின், ஒரு மகா புருஷன் வந்து உங்களை தண்ணீரிலிருந்து எடுத்து கரையில் போடுவான். அப்போது, உங்கள் சாபம் நீங்கி, சுய உருவம் பெற்று, தேவலோகம் செல் வீர்கள்...' என்றார். அது முதல் நாங்கள் முதலையாகி, இந்த தீர்த்தத்தில் கிடக்கிறோம்.
"இப்போது நீங்கள் என்னைத் தூக்கி கரையில் போட்டதால், என் சாபம் நீங்கியது. என் தோழிகள் நால்வரும் மற்ற நான்கு தீர்த்தங்களிலும் முதலையாக இருக்கின்றனர். அவர்களையும் எடுத்து கரையில் போட்டு, அவர்களும் சாப விமோசனம் பெற உதவ வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டாள். அர்ஜுனனும் அப்படியே அந்த நான்கு முதலைகளையும் எடுத்து, கரையில் போட்டதும், அவர்களும் சுய உருவம் பெற்று, தேவ கன்னிகைகளாக மாறினர். எல்லாரும் அர்ஜுனனுக்கு நன்றி சொல்லி, தேவலோகம் போய் சேர்ந்தனர். மேற்கொண்டு தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தான் அர்ஜுனன்.
இங்கு கவனிக்க வேண்டியது, மகா சாதுவான ரிஷி, தவம் செய்து கொண்டிருந்த போது, அவருடைய தவத்தை இந்த தேவ கன்னிகைகள் கலைத்ததால், சாபம் பெற்றனர். சாதுக்களை நிந்திப்பதோ, அவர்களுடைய ஆசார அனுஷ்டானத்துக்கு இடையூறு செய்வதோ பாவம். இப்படி செய்ததால் தான் தேவ கன்னிகைகளுக்கு முதலை ஜென்மா கிடைத்தது. இது போலவே புலி, சிங்கம் மற்றும் இதர எல்லா விலங்குகளுமே ஏதோ ஒரு பாவத்தின் காரணமாகத் தான் அந்த ஜென்மாவை அடைந்துள்ளன. இதில், புலியாகவோ, நாயாகவோ, புழுவாகவோ பாவத்துக்கு தகுந்தபடி எத்தனை ஜென்மம், எடுக்க வேண்டும் என்றும் உள்ளது. அத்தனையையும் எடுத்துத் தான் தீர வேண்டும். அதனால் தான் பாவம் செய்ய வேண்டாம் என்றனர்; கேட்டால்தானே!
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!


* கூட்டாளிகளை மோசம் செய்பவரைப் பற்றி இந்து மதம் கூறுவது என்ன?
மோசம் செய்தவன் சேர்த்த பணம், கூட்டாளியின் கண் முன்னாலயே நாசமாகும். காலம் சற்று முன் பின்னாக இருக்கலாமே தவிர, காரியம் நடந்தே தீரும்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mariappan - bangalore,இந்தியா
03-மார்ச்-201308:07:58 IST Report Abuse
Mariappan ஆம் உண்மைதான் பாவம் செய்வது ஒருவரை பலி வாங்குவது போலாகும் எவரும் பாவம் செய்யதிர்கள் பாவம் பாலும் கிணற்றில் தள்ளிவிடும்
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
03-மார்ச்-201303:49:30 IST Report Abuse
GOWSALYA உண்மைதான் சகோதரரே.....முன்பெல்லாம் இப்பிறவியில் செய்வதை அடுத்தபிறவியில் அனுபவிப்பார்கள் என்பார்கள்,உண்மையல்ல......இப்போதே,நம் கண்முன்னேயே அனுபவிக்கிறாகள்...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.