ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2013
00:00

ஆங்கில மொழியினை பேசுவோர் அதிகம் எங்கிருக்கிறார்கள்? பிரிட்டனில் உள்ளவர்களைக் காட்டிலும் மற்ற நாடுகளில் உள்ளவர்களே அதிக எண்ணிக்கை யில் உள்ளனர் என்பது அப்பட்டமான உண்மை. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில், ஆங்கில மொழியின் பயன்பாடும், அதனைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் எப்போதும் அதிகம் தான். ஆனால், ஆங்கிலச் சொற்களில் பல அவற்றைப் பயன்படுத்தும் போது, அவை காட்டும் பொருளில் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக Capital/ Capitol, Affect/Effect, new/anew, practice/ practise, sour/ sore, side/aside,warranty/guarantee,affluent/effluent /suit,suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களுக்கான பொருள் வேறுபாட்டினையும், எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரிந்தால் மட்டுமே, நாம் பயன்படுத்தும் ஆங்கிலம் பொருள் பொதிந்ததாக இருக்கும்.
இந்த குழப்பத்தினை ஓர் அகராதி போக்கிவிடும் என்றாலும், இணையத்தில் உடனடியாக சொற்களுக்கிடையே காணப்படும் வேறுபாட்டினைக் காட்டும் தளங்களும் உள்ளன. அவ்வகையில் அண்மையில் நான் பார்த்த ஓர் இணைய தளம் உள்ளது. இந்த தளத்தின் முகவரி http://www.confusingwords.com/index.php. இந்த தளத்தில் நுழைந்தவுடன் நமக்குச் சந்தேகம் எழும் சொல்லை டைப் செய்து அருகே உள்ள “Find” பட்டன் அழுத்தினால், அதற்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த சொல்லுடன் தொடர்புடைய, இந்த சொல் சார்ந்து குழப்பக்கூடிய சொல்லின் பொருளும் தரப்படுகிறது. இதில் 3,210 சொற்களுக்கான விளக்கங்கள் உள்ளன. நமக்கு சந்தேகம் உள்ள சொல்லை, கொடுக்கப்படும் கட்டத்தில் டைப் செய்து என்டர் செய்தால், கீழாக, விரிவாகப் பொருள் தரப்படுகிறது. சொல்லை எப்படி வாக்கியத்தில் பயன்படுத்தலாம் என்று விளக்கம் தரப்படுகிறது. அந்த சொல்லை எத்தனை பேர் சந்தேகத்துடன் எடுத்துப் பார்த்தனர் என்ற எண்ணிக்கை தரப்படுகிறது.
சொற்களுக்கான எழுத்துக்கள் முழுமை யாகத் தெரியவில்லை என்றால், ? /* கொடுத்து சொல்லை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, ‘man’ என்ற சொல்லின் எழுத்துக்கள் நினைவில் சரியாக இல்லை எனில், “m?n” or “??n” or “ma?” or “m*”. என அமைத்துத் தேடலாம். m என்ற எழுத்தில் தொடங்கும் அனைத்து சொற்களும் பெற “m???” என டைப் செய்திடலாம். இந்த தளத்தில் உள்ள அனைத்து சொற்களின் பட்டியல் கிடைக்க * டைப் செய்து “Find” அழுத்தினால், அனைத்து சொற்களும் கிடைக்கின்றன. ஆங்கில மொழியினை எந்த தயக்கமும், சந்தேகமும் இன்றிப் பயன்படுத்த இந்த தளம் நமக்கு நன்கு உதவுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X