டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஆக
2010
00:00

மொபைல் சேவை வழங்குவதில், இறுதியாக நுழைந்த டாட்டா டொகோமோ நிறுவனம், பல அதிரடி திட்டங்களுடன் வாடிக்கையாளர்களிடம் பிரபலமாகி வருகிறது. பேசும் நேரத்திற்கு விநாடிக்குப் பைசா என்று முதன் முதலாக இந்நிறுவனம் திட்டம் கொண்டு வந்து அனைத்து சேவை நிறுவனங்களையும் கலக்கியது.  தற்போது மொபைல் இன்டர்நெட் சேவையிலும் புதிய கட்டண வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, நாம் பிரவுஸிங் செய்திட விரும்பும்,  ஒவ்வொரு இணையதளத்திற்குமாக கட்டணம் செலுத்தினால் போதும். ஒரே ஒரு வெப்சைட் மட்டும் பிரவுஸ் செய்திட விரும்புவோர், அதற்கென மாதம் ரூ.10 செலுத்தினால் போதும். இதற்கு 200 எம்பி டேட்டா டவுண்லோட் இலவசம்.  அதன் பின் ஒவ்வொரு கேபி டேட்டாவிற்கும் ஒரு பைசா செலுத்தினால் போதும்.
 பல இணைய தளங்களுப் பார்வையிட விரும்புபவர்கள், மாதம் ரூ.25 செலுத்த வேண்டும். இதற்கு 500 எம்பி டேட்டா இலவசம்.  ஜிமெயில், யாஹூ மற்றும் ரீடிப் தளங்களில் உள்ள  இமெயில் அக்கவுண்ட்களை மட்டும் கையாளலாம்.  அதே போல, பேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன், ஆர்குட் மற்றும் நிம்பஸ் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு மட்டும் செல்லலாம். சேட் என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு, ஜிடாக், யாஹூ அல்லது நிம்பஸ் ஆகிய தளங்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு.
தளத்திற்கு மட்டும் காசு என்ற இந்த ஜி.பி.ஆர்.எஸ். திட்டத்தை இயக்க, இதன் வாடிக்கையாளர்கள் *141#  என்ற எண்ணுக்கு டயல் செய்திட வேண்டும். அல்லது MY SITE என 141 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.  அல்லது டாட்டா டொகோமோ இணைய தளம் சென்று ஆக்டிவேட் செய்திடலாம்.   இந்த திட்டங்கள் மூலம், இந்நிறுவனச் சந்தாதாரர்கள், தாங்கள் விரும்பும் தளங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பணத்தை மிச்சப்படுத்த முடியும். இது நன்மையாக இருந்தாலும், இணையத் தேடலை இது சுருக்கிவிடும் என்றும், உண்மையான இணையப் பயன்பாடு இதனால் குறைந்துவிடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abraar - Nellai,இந்தியா
28-ஆக-201008:39:15 IST Report Abuse
Abraar டோகோமோ பல நல்ல திட்டங்களைத் தந்து வருகிறது. அதிலும் அதன் இன்டர்நெட் திட்டங்கள் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
அந்தோனி பிரதீப் - கோயம்புத்தூர்,இந்தியா
24-ஆக-201013:10:01 IST Report Abuse
அந்தோனி பிரதீப் டாட்டா டோகோமோ ஒரு சிறந்த சேவையாளர். அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கை பெற்றுள்ளது.குறிப்பாக நடுத்தர மக்களின் வரவேற்பை அதிகமாக பெற்றுள்ளது.தொடர்ந்து சிறந்த சேவை ஆற்ற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
kumarasamy - madurai,இந்தியா
23-ஆக-201021:56:32 IST Report Abuse
kumarasamy very good
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X