பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2013
00:00

விண்டோஸ் 8 பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விலை நிச்சயம் குறையும். இதனைப் பிரபலப்படுத்துவதில், மைக்ரோசாப்ட் கணக்கு வெற்றி பெறும். இதன் வசதிகள் மக்கள் மனதைக் கவர்ந்து, இதுவே வரும் பத்து ஆண்டுகளின் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக அமையும். இதில் ஏசர் முந்திக் கொண்டது அதன் தொழில் வெற்றியைக் காட்டுகிறது.
எஸ். மீனா தட்சிணாமூர்த்தி, கம்பம்.

குரோம் பிரவுசர் பாதுகாப்பானது என்றும் வேகமானது என்றும் கேள்விப்பட்டு புழங்க ஆரம்பித்தேன். இப்போது நீங்கள் தந்துள்ள ட்ரிக்ஸ்கள் அனைத்தும் அதன் குணங்களை இன்னும் சிறப்பாகக் காட்டுகின்றன. குறிப்பாக அதன் டாஸ்க் மானேஜர் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
என். கிருஷ்ணமூர்த்தி, மதுரை.

குரோம் பிரவுசர் திறக்கும்போதே நமக்குப் பிடித்த தளங்களைத் திறக்கும் வகையிலான செட்டிங்ஸ் நம் பல வேலைகளையும், நேரத்தினையும் மிச்சப்படுத்துவதாக அமைந்துள்ளது. கொடுத்துள்ள அனைத்து டிப்ஸ்களுமே புதியனவாகவும், பயன் தருவதாகவும் உள்ளன. நன்றி.
கா.சுகந்தி தேவராஜன், சென்னை.

நான் ஒரு புரபஷனல் போட்டோகிராபராகப் பணியாற்றுகிறேன். நீங்கள் போட்டோக்களை மாற்றுவது குறித்து தந்த தளம் என் தொழிலுக்கு மிகவும் உதவுகிறது. ஒரு வாரத்தில் என்னைப் பலர் பாராட்டியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னால், இதே போன்று இமேஜ் தண்ணீரில் இருக்கும்படி அமைக்கவும் மற்றும் பல எபக்ட் வழிகளைத் தரும் தளத்தினையும் காட்டினீர்கள். மிக மிக நன்றி.
ச. கார்த்திகேயன், திருப்பூர்.

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள் அனைத்தும், இந்த சிஸ்டத்தைக் கையாளும் மற்றும் கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் ஏற்படுபவையாக உள்ளன. இன்னும் இது போல உள்ள சந்தேகங்களைத் தீர்க்கும் வழிகளையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
டி.சிக்கந்தர், காரைக்கால்.

விண்டோஸ் 8க்கு மாற வேண்டுமா என்ற சந்தேகத்திற்கு பலவகையான தகவல்களைத் தொடர்ந்து அளித்து வருகிறீர்கள். மாற்றங்கள் இருக்கும்போது அவசியம் மாறித்தான் ஆக வேண்டும் என்பதனையும் நாசூக்காகச் சொல்லி வருகிறீர்கள். வாசகர்கள் மனதறிந்து வழி நடத்தும் தங்கள் வழி தனி வழி.
சி. முத்துசாமி, உதகமண்டலம்.

வேர்டில் மொத்த பக்க எண்ணிக்கை அமைப்பது குறித்த டிப்ஸ் புதுமையாகவும், இதுவரை அறியாத ஒன்றாகவும் இருந்தது. பயன்படுத்திப் பார்த்தேன். மகிழ்ச்சி.
அ.ஜெயபால், புதுச்சேரி.

புதிய பாதையில் எதனை ஏற்படுத்தினாலும், அது நிச்சயம் வெற்றியைத் தரும் என்பதற்கு மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சாட்சி. குறிப்பாக ஐட்யூன்ஸ் பாடல்களுக்கான தளமாகத் தரப்பட்டதுவும், அதன் டவுண் லோட் பல்லாயிரம் கோடி தாண்டியிருப்பதுவும் நல்ல எடுத்துக் காட்டுக்களாகும்.
என்.ஆர். ஸ்ரீபிரகாஷ், சென்னை.

மொபைல் போனின் வளர்ச்சியை நாம் அதன் திரை மாறிய போக்கிலேயே கண்டு கொள்ளலாம் என்பதனை அழகாக விளக்கியுள்ளீர்கள். மக்களின் மனப்போக்கினையும் நன்கு காட்டியுள்ளீர்கள். நீங்கள் எடுத்துக் காட்டுக்களாகக் காட்டியிருக்கும் அனைத்துமே இன்று மக்களின் அபிமானம் பெற்றதாக உள்ளன.
என்.உதயசங்கர், தேனி.

.docx பைல் எக்ஸ்டன்ஷன் குறித்த விளக்கமும் பதிலும் புதுமையாக புதிய ஒரு தகவலைத் தருவதாக உள்ளது. இது போல நாம் அறியாத ஆனால், பரவலாக உள்ள விஷயங்களைத் தருவது கம்ப்யூட்டர் மலர் மட்டுமே. பாராட்டுக்கள்.
இசை. மோகனன், பழநி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X