புதிய பிரவுசர்கள் ஓர் ஒப்பீடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மார்
2013
00:00

மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகிய இரண்டும் தங்களின் புதிய பிரவுசர்களை அண்மையில் வெளியிட்டுள்ளன. இவற்றின் சிறப்பு அம்சங்களை இங்கு ஒப்பிட்டுக் காணலாம். மைக்ரோசாப்ட் தனது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பத்தாவது பதிப்பை, விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் மட்டுமே வழங்கியது. பின்னர், பயனாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பதிப்பினையும் வெளியிட்டது. இது வெளியாவதற்குச் சில தினங்களுக்கு முன்னால், கூகுள், தன் குரோம் 25 பிரவுசரை வெளியிட்டது. இதனை அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயக்கலாம். எனவே தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு எது மிகவும் கூடுதல் பயன்களைத் தருகிறது என்ற கண்ணோட்டத்தில் இவற்றின் சிறப்புக்களைக் காணலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மட்டுமே முதலில் வெளியிடப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கும் தரப்பட்டுள்ளது. விஸ்டா மற்றும் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் இதனைப் பயன்படுத்த முடியாது. அவர்கள் முறையே பதிப்பு 9 மற்றும் 8 ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும். ஆனால், குரோம் பிரவுசரை எக்ஸ்பி தொடங்கி, அதன் பின்னர் வந்த அனைத்து விண்டோஸ் இயக்கங்களிலும் பயன்படுத்தலாம்.மேலும், லினக்ஸ் மற்றும் மேக் இயக்கங்களிலும் பயன்படுத்த முடியும்.
இரண்டு பிரவுசர்களுமே, தற்போது நடைமுறையில் உள்ள இணைய ஸ்டாண்டர்ட்களைப் பின்பற்றி சப்போர்ட் செய்வதாக அறிவித்துள்ளன. இதில் HTML5, CSS3, மற்றும் Document Object Model (DOM) specifications ஆகியவை அடங்கும் இவற்றில் எச்.டி. எம்.எல். தொழில் நுட்பத்தில் பிரவுசரை இயக்கியபோது குரோம் பலவகைகளில் நமக்குத் திருப்தியாக உள்ளது.
ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென சில சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதை, நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, குரோம் 25 ஒலியைப் புரிந்து கொண்டு செயல்படும் இயக்கத்தினைக் கொண்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, தொடுதிரை கட்டளை கொண்டு இயக்கும் வகையில் உள்ளது. விண்டோஸ் 8ல், திரையின் கீழாகத் தரப்படும் டாஸ்க் பார், விண்டோஸ் 7ல் வழக்கம் போல மேலாக உள்ளது.
ஆனால், பயனாளர்கள் இணையச் செயல் பாட்டில் எதிர்பார்ப்பது வேகத்தைத் தான். ஒரே வேகத்துடன் மற்றும் அதே செயல்பாடு தரும் இணைய இணைப்பிலும் இரண்டையும் இயக்கிப் பார்க்கும் போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, குரோம் பிரவுசரைத் தூக்கிச் சாப்பிடுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, 182.63 மில்லி செகண்ட்களில் தருவதனை, குரோம் 521.1 மில்லி செகண்ட்களில் தருகிறது. ஆனால், கூகுள் தந்துள்ள ஆக்டேன் (Octane) எனப்படும் தரச் சோதனையில், குரோம் இயக்கம் கூடுதல் மதிப்பெண் எடுக்கிறது.
ப்யூச்சர் மார்க் நிறுவனம் தந்துள்ள பிரபலமான பிரவுசர் தரப்பரிசோதனை புரோகிராம் Peacekeeper கொண்டு சோதனை செய்த போது, குரோம் பிரவுசரே, இரண்டிலும் சிறந்ததாக முடிவு கிடைத்தது. மொஸில்லா தந்துள்ள க்ரேக்கன் தரப்பரிசோதனை புரோகிராமும், குரோம் பிரவுசரையே சிறந்ததாகக் காட்டியது.
அப்படியானால், முடிவுதான் என்ன? பெரும்பாலான, பிரவுசர் தரப்பரிசோதனை புரோகிராம்கள் அடிப்படையில், குரோம் பிரவுசரே மிக வேகமாகச் செயல்படும் பிரவுசராகத் தெரிகிறது. வேகம் மட்டுமின்றி, அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்குவது இதன் இன்னொரு கூடுதல் சிறப்பாகும். எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பத்தினை மிகவும் சார்ந்துள்ளது.
ஆனால், நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்தி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் உங்களுடைய தேர்வு எனில், தற்போது கிடைத்திருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 பிரவுசர், உங்களுக்குச் சிறந்த பிரவுசராக அமையும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X